Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

* பிரதமர் இன்று திருப்பதி வருகை * சென்னையில் நள்ளிரவில் ஹோட்டலை அடித்து நொறுக்கிய மர்மகும்பல் * பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்திற்கு இந்தியா மேலும் ரூ. 100 கோடி உதவி * சீனாவில் மழை, வெள்ளத்திற்கு 4200 பேர் பலி

இன்றைய முக்கிய செய்திகள்

Download latha tamil font


South Indian Crime Point as your Homepage

முக்கிய செய்திகள் (01-09-2010) காலை,IST- 07.00 மணி,நிலவரப்படி,

பிரதமர் இன்று திருப்பதி வருகை

பிரதமர் மன்மோகன் சிங் இன்று திருப்பதி வருகிறார். சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி, மன்னவரம் கிராமம் அருகே மின்சார உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது. பெல் - என்.டி.பி.சி., ஆகிய நிறுவனங்கள் இணைந்து நிறுவ உள்ள இந்த தொழிற்சாலைக்கு, பிரதமர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

புதுடில்லியில் இருந்து தனி விமானம் மூலம் வரும் பிரதமர் காலை 10.30 மணிக்கு திருப்பதி விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மன்னவரம் சென்று, அங்கிருந்து சிறிது தூரத்தில் தொழிற்சாலை அமைய உள்ள இடத்திற்கு காரில் சென்று, 11.15 மணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பகல் 12.10 மணிக்கு திருப்பதிக்கு சென்று சிறிது நேர ஓய்வுக்கு பின், கார் மூலம் திருமலைக்கு செல்கிறார்.

அங்கு வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்கிறார். ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சென்று, அங்கு சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்பட உள்ள விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு மாலை 4.20 மணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் வருகையை ஒட்டி திருப்பதி விமான நிலையம், திருமலை மலைப்பாதை மற்றும் ஹெலிகாப்டர் இறங்கும் இடம், தாரக ராமாராவ் ஸ்டேடியம் ஆகிய இடங்களில் போலீஸ் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • சென்னையில் நள்ளிரவில் ஹோட்டலை அடித்து நொறுக்கிய மர்மகும்பல்

    நள்ளிரவில் தனியார் ஓட்டலில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த, 50 பேர் கொண்ட மர்ம கும்பல் ஹோட்டலை அடித்து நொறுக்கியது. சைதாப்பேட்டை சின்னமலை அருகே தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலிற்குள் நேற்று நள்ளிரவில் ஆட்டோ மற்றும் கார்களில், 50க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் நுழைந்தனர். "கஸ்டமர்' போல் உள்ளே நுழைந்தவர்கள், ஓட்டல் உரிமையாளரைக் கேட்டு, கிரிக்கெட் ஸ்டெம் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஓட்டலை அடித்து நொறுக்கினர். இதில், வாடிக்கையாளர் மற்றும் ஓட்டலுக்கு சொந்தமான மூன்று சொகுசு கார்களையும் அடித்து நொறுக்கினர். மேலும், பாரில் இருந்த வாடிக்கையாளர்களை விரட்டிவிட்டு, அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினர். இதில் லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்கலாம் என தெரிகிறது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரித்து வருகின்றனர்.



    கொடநாடு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஜெயலலிதாவிற்கு, மலர்ச் செண்டு கொடுத்து கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் வழியனுப்பினர்.



    சென்னையில் நடந்த 12வது மாநில வளர்ச்சிக் கூட்டத்தில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் வாசன் (இடமிருந்து 2வது) கலந்து கொண்டார் மற்றும் அமைச்சர்கள்.



    விழுப்புரத்தில் நடந்த மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தின் போது அமைச்சர் பொன்முடி, அரவாணிகளுக்கு ரேஷன் கார்டு வழங்கினார். அருகில் கலெக்டர் பழனிசாமி, எம்.எல்.ஏ.,க்கள் புஷ்பராஜ், உதயசூரியன், திருநாவுக்கரசு.



    கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்தவர்களுக்கான வழி அனுப்பும் விழா நடக்க உள்ளது. விழாவில், கலை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒத்திகையை பெண் போலீசார் நிகழ்த்தினர். இடம்: பி.ஆர்.எஸ்., மைதானம், கோவை.



    மதுரை விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் உட்புறத் தோற்றம்.



    கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை மாட்டுத்தாவணி பகுதியில், சிலைகள் தயார் செய்து வண்ணம் பூசும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.



    தென்மாவட்ட போலீஸ் பட்ஜெட் குறித்து, மதுரையில் உயர் அதிகாரிகளுடன் தலைமையிடத்து ஏ.டி.ஜி.பி., அனுப்ஜெய்ஸ்வால் ஆலோசனை நடத்தினார்.

  • பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்திற்கு இந்தியா மேலும் ரூ. 100 கோடி உதவி

    பாகிஸ்தானுக்கு மேலும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டதால் பஞ்சாப், சிந்து மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 1,700 பேர் பலியாகியுள்ளனர். 16 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக நாடுகள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தியா சார்பில், ஏற்கனவே 25 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், இதை ஏற்க அந்நாட்டு அரசு தயங்கியது. அமெரிக்காவின் வற்புறுத்தலின் பேரில், இந்த உதவியை ஐ.நா.,வின் மூலம் பெற பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கிடையே, மேலும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.



  • ஆமதாபாத்தில் மேத்தா மருத்துவமனையின் துவக்க விழாவில், இருதய நோயாளிகளை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சந்தித்தார்.



    குஜராத் தஹேஜில் உள்ள அதானி கார்கோ துறைமுகத்தில், நிலக்கரி இறக்குவதற்கான இயந்திரத்தை பொறுத்தும் பணி நடந்து வருவதை பணியாளர்கள் பார்க்கின்றனர்.



    ஆந்திர மாநிலம் தெலுங்கான பகுதியைச் சேர்ந்த காங்., எம்.பி.,க்கள், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துவிட்டு திரும்பினர்.



    கண்ணன் பிறந்தநாளை வடமாநிலங்களில் ஜென்மாஷ்டமி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. போபாலில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள லட்டு கிருஷ்ணரை விலைக்கு வாங்கும் ஆர்வமுடன் பார்வையிடும் வெளிநாட்டினர்.



    காஷ்மீரின் யூரி பகுதியில் ஊடுறுவ முயன்ற ஒன்பது பேரை பாதுகாப்புப் ப‌டையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து அதிநவீன வயர்லஸ் செட், வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் பாகிஸ்தான் கரன்சி நோட்டுகள் போன்றவை கைபற்றப்பட்டன.

  • சீனாவில் மழை, வெள்ளத்திற்கு 4200பேர் பலி

    சீனாவில் இந்தாண்டில் பெய்த மழை, வெள்ளத்திற்கு 4200பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் இந்த ஆண்டில் பல்வேறு காலகட்டங்களில் பெய்த மழை, வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றத்தால் அந்நாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதி அறிக்கை படி மழை வெள்ளத்தால் 3185பேர் பலியாகியுள்ளனர், 1050பேர் காணவில்லை. காணமால் போனவர்களையும் சேர்த்து மொத்தம் 4235பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2லட்சத்திற்கு அதிகமான பேர் வீடுகளை இழந்தும், 5லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமுடைந்து உள்ளன. மழை, வெள்ளத்தால் அரசுக்கு இதுவரை 350பில்லியன் யுவானுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகடந்த 1998ம் ஆண்டு ஏற்பட்ட மழை, வெள்ள சேதத்தை விட அதிகமாகும்.



    பாகிஸ்தான், பெஷாவர் நகர் அருகே உள்ள நவ்ஷரா என்ற கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், சாலையோரம் கொசு மற்றும் ஈக்களுக்கு மத்தியில் சுகாதாரமற்ற நிலையில் படுத்துள்ளனர்.



    அமெரிக்கா, நியூயார்க் நகரில் நடந்த யு.எஸ் ஒப்பன் டென்னிஸ் டோர்னமென்ட் தொட்க்காவிழாவில், ஆர்துர் ஆசி மைதானத்தில் நடுவில் அந்நாட்டு கொடி படர்ந்து பார்வையாளர்களை வியக்க வைத்தது.



    சூதாட்ட புகாரில் சிக்கிய வீரர்களுக்கு, பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. லாகூரில், சல்மான் பட் உள்ளிட்ட வீரர்களின் உருவ பொம்மையை எரித்து, எதிர்ப்பை வெளிப்படுத்திய பாகிஸ்தான் ரசிகர்கள்.



    ஆஸ்திரியா, சலாபெர்க் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவால் நகரமெங்கும் பனி படர்ந்துள்ளது.



    மியான்மர், பாகோ நகரில் பெய்த கன மழையால் அங்கு பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு வாழும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.



    மலேசியா, கோலாலம்பூரில் விடுதலை நாளை முன்னிட்டு நடந்த விழாவில், புகிட் ஜலில் புட்ரா மைதானத்தில் பல நடன கலைஞர்கள் சேர்ந்து ஆடிய பிரம்மாண்ட நடனம்.

    நேற்றைய செய்திகள்

    Bookmark and Share
  • Read More     Comments (33)