Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

* வீணாகும் உணவு தானியங்கள்: மத்திய அமைச்சரவை இன்று ஆலோசனை * சிதம்பரம் பதவி விலக பா.ஜ., வலியுறுத்தல் * சொத்து விவரங்கள் சமர்ப்பிக்க அமைச்சர்களுக்கு உத்தரவு * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 28 பேர் பலி

இன்றைய முக்கிய செய்திகள்

Download latha tamil font


South Indian Crime Point as your Homepage

முக்கிய செய்திகள் (02-09-2010) காலை,IST- 07.00 மணி,நிலவரப்படி,

வீணாகும் உணவு தானியங்கள்: மத்திய அமைச்சரவை இன்று ஆலோசனை

மத்திய அரசின் சேமிப்பு கிடங்குகளில் வீணாகும் உணவு தானியங்களை இலவசமாக வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதுதொடர்பாக ஆலேசானை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் உணவு தானியங்களை வீணாக்காமல் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் வழி செய்வது தொடர்பாக ஆலோசனை செய்ய உள்ளனர்.

  • சிதம்பரம் பதவி விலக பா.ஜ., வலியுறுத்தல்

    "காவி பயங்கரவாதம் என பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதவி விலக வேண்டும்,'' என பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் கூறினார். தாராபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கம்யூனிஸ்ட் கட்சிகள் வைத்த கொள்ளியால்தான் பல்வேறு மாநிலங்களில் மாவோஸ்யிட் தீவரவாதிகளின் தாக்குதல், அராஜகம், உயிர் பலி ஆகியவை நடப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

    கம்யூனிஸ்ட் கட்சிகளின் உண்மையான செயல்பாடுகளை கூறிய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தவறிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், காவி பயங்கரவாதம் என பேசி வருவது வேதனையாக உள்ளது. புனிதம், தியாகம், மகத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்துவது காவி நிறம். ஹிந்துக்களின் புனித நிறமாக பயன்படுகிறது. இதை கேவலப்படுத்தும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதவி விலக வேண்டும். தேர்தல் காலத்தில் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பர். தி.மு.க.வுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் ஓரணியில் நின்று தேர்தலை சந்தித்து வெற்றிபெற வேண்டும். தமிழகத்தில் பா.ஜனதா கட்சி நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



    ஆந்திரா மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற விழாவிற்கு, வருகைதந்த பிரதமர் மன்மோகன் சிங் திருமலை கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார்,அவருடன் நெருக்கமாக பிரஜா ராஜ்யம் கட்சி தலைவர் சிரஞ்சீவி.



    ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், பஞ்சாரி மேளத்துடன் மூலவரின் தங்க விக்ரகம் 'பத்மநாபன்' என்ற யானையின் மீது வைக்கப்பட்டு கோவில் பிரகாரத்தில் வலம் வந்தது.



    கிருஷ்ண ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக பீளமேடு, ஜெகன்நாதர் கோவிலில் உற்சவ மூர்த்தியாக விளங்கும் ராதாகிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் நடந்தது.



    கிருஷ்ண ஜெயந்தியையொட்டி விருதுநகர், ராஜபாளையம் நவபாரத் மெட்ரிக்., பள்ளி மாணவ, மாணவிகள் கண்ணன், ராதா வேடமிட்டு இருந்தனர்.



    சீக்கியர்களின் மத குருவான குரு கிரந்த் சாகிப்பின் 406வது ஆண்டு நிகழ்சியை அடுத்து, அமிர்தசரஸ் பொற்கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் பூஜை செய்யப்பட்டது.



    கர்நாடகா மாநிலம் ஹீப்ளி அருகே உள்ள அனிகேரி என்ற இடத்தில் கால்வாய் தோண்டும்போது தட்டுப்பட்ட ஏராளமான மனித மண்டையோடுகள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    ஆக்ரா, யமுனா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அருகில் தாஜ்மகால்.

  • சொத்து விவரங்கள் சமர்ப்பிக்க அமைச்சர்களுக்கு உத்தரவு

    "மத்திய அமைச்சர்கள் தங்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான வருடாந்திர கணக்கு விவரங்களை பிரதமரிடம் சமர்ப்பிக்க வேண்டும்' என, கேபினட் செயலர் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் கேபினட் செயலர் சந்திரசேகர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நன்னடத்தை விதிகளின்படி, ஒருவர் அமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டு மாதத்திற்குள், பிரதமர் அல்லது மாநில முதல்வரிடம் தங்களின் சொத்து மற்றும் கடன் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். தங்களின் சொத்து விவரங்களை மட்டுமின்றி, குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில், மத்திய அமைச்சர்கள் அனைவரும் சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான வருடாந்திர கணக்கு விவரங்களை பிரதமரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



  • திருப்பதியில் பிரதமரை ஆந்திர பிரதேச கவர்னர் நரசிம்மன் விமான நிலையத்தில் வரவேற்றார்.



    திருப்பதியில், மன்னாவரம் கிராமத்தில், ருபாய் ஆறு ஆயிரம் கோடி செலவில் ( என்.டி.பி.சி - பெல்.,) மின்சார சாதங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை, பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி வைத்த போது, மத்திய மின்சார துரை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே சால்வை அணிவித்தார், அருகில் மத்திய பெருந் தொழில்த் துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்.



    டில்லியில், பத்திரிகையாளர் கூட்டத்தன் பொது; பார்லிமென்டில் நடந்த மழைக் கால கூட்டத்தில், கட்சியின் பங்கு குறித்து பா.ஜ.க., வின் தலைவர் சுஷ்மா சுவராஜ் விளக்கினார், மற்றும் அருண் ஜெட்லி, எஸ்.எஸ். அளுவாலியா ரவி சங்கர் பிரசாத் (வலது) உடனிருந்தனர்.



    பரிதாபாத்தில் நடந்த தர்ணாவில், கலந்து கொண்ட விசாயிகளுக்கு பா.ஜா.க., வின் முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் பழச் சாறு வழங்கினார்.



    எல்.ஐ.ஸியின் 54வது ஆண்டு விழா, மும்பையில் கோலகலமாக நடைபெற்றது,எல்.ஐ.சி.சேர்மன் டி.எஸ்.விஜயன் முன்னிலையில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

  • பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 28 பேர் பலி

    பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஊர்வலத்தில், தற்கொலைப் படையை சேர்ந்த மூன்று பேர் குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 28 பேர் பலியாயினர். 180 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் ஷியா பிரிவு முஸ்லிம்களால் புனிதராக கருதப்படும் இமாம் அலியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி லாகூரிலும், கராச்சியிலும் பேரணி நடந்தது. லாகூரில், கர்பாலா கமே ஷா இமாம்பர்கா என்ற இடத்தில் நடந்த ஷியா பிரிவினரின் ஊர்வலத்தில் நுழைந்த மூன்று தற்கொலைப் படையினர் தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் 28 பேர் உடல் சிதறி பலியாயினர். சிறுமிகள் மற்றும் போலீசார் உள்பட 180க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ ஜாங்வி அல் அல்மி என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பேரணிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாத போலீசாரை கண்டித்து, ஊர்வலத்தில் கலந்து கொண்ட பலர் போலீஸ் நிலையத்தை அடித்து நொறுக்கினர். போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கல்லெறி சம்பவத்தில் போலீசார் பலர் காயமடைந்தனர். இதையடுத்து இந்த பகுதியில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. நிலைமையை சமாளிக்க கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். கராச்சியில் சதார் மார்க்கெட் அருகே நடந்த ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஊர்வலத்தை நோக்கி மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டதில் ஏழு பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



    ஈராக்கில் இருந்த அமெரிக்க படைகள் தங்கள் நாட்டிற்கு திரும்புவதையடுத்து, ஈராக் போலீசாரே தங்கள் நாட்டின் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.



    ஸ்விடன், ஸ்டாக் ஹோமில் நடந்த நிகழ்ச்சியில் தென் ஆப்பிரிக்காவின் முன்னால் அதிபர் நெல்சன் மன்டேலாவின் மனைவி கிராசா மைக்கெல்(மத்தியில்), நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு குழந்தைகள் வழங்கிய விருதை பெற்றுக் கொண்டார்.



    அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில், பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. பந்தை தட்டிச் செல்ல போராடிய இரு அணி வீராங்கனைகள்.



    லெபனான், நகோராவில் லெபனானின் ராணுவபடையும்,பிரெஞ்ச் நாட்டு அமைதிப்படையும் இணைந்து கூட்டு பயிற்சியில் ஈடுப்பட்டனர்.



    மழை, வெள்ளம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் சுக்குர் பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு குழாயில் வந்த தண்ணீரில், ஆசை தீர தன் தலையை நனைத்து குளிக்கும் சிறுவன்.



    நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற அழகிப்போட்டியில் சதிச்சா ஷிரஸ்தா"மிஸ் நேபாளம்' பட்டம் வென்றார். இவர் உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள நேபாளம் நாட்டின் சார்பில் அனுப்பிவைக்கப்பட உள்ளார்.

    நேற்றைய செய்திகள்

    Bookmark and Share
  • Read More     Comments (33)