எங்களைப் பற்றி சாட்டிங் கனவுத் தொழிற்சாலை e-புத்தகம்

 
 
 
 
 
Welcome to South Indian Crime Point

இன்றைய முக்கிய செய்திகள் (04-04-2017) மாலை, IST-07.00 PM மணி, நிலவரப்படி,

South Indian Crime Point as your Homepage

SOUTH INDIAN CRIME POINT Follows.... Please Click the Buttons

Youtube Link

South Indian Crime Point

South Indian Crime Point Update

South Indian Crime Point Politics

South Indian Crime Point Devotional

South Indian Crime Point Controversy

South Indian Crime Point Accident

South Indian Crime Point Channel Web TV


நடிகை‛மைனா நந்தினியின் கணவர் தற்கொலை செய்து கொண்டது ஏன் கடிதம் சிக்கியது

சென்னை, ஏப்ரல் 04, 05:30 PM

விருகம்பாக்கத்தில் தனியார் லாட்ஜில் சின்னத்திரை நடிகையின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விருகம்பாக்கத்தில் தனியார் லாட்ஜில் சின்னத்திரை நடிகையின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வளசரவாக்கம், எஸ்.வி.எஸ் நகர் 1வது மெயின்ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சாந்தி இவரது மகள் ரம்யா, மகன் கார்த்திக் (30), ரம்யா திருமணமாகி வெளியூரில் தனது கணவருடன் வசித்து வருகிறார். கார்த்திக் தி.நகரில் உடற்பயிற்சி வைத்து நடத்தி வந்தார்.

இந்தநிலையில் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் வரும் சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நந்தினியும் இந்த உடற்பயிற்சி கூடத்திற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட காதலில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த 6.6.2016ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நந்தினிக்கும், கார்த்திக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. நந்தினி வம்சம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாகவும், கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தற்போது வேறு தொலைக்காட்சி தொடரிலும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார். தனியார் தெலைக்காட்சியில் நடந்த விளையாட்டு போட்டியில் நந்தினி, கார்த்திக் இருவரும் கலந்து கொண்டனர். இதில் கார்த்திக்கு காலில் காயம் ஏற்பட்டது.

திருமணம் முடிந்து சில மாதங்களில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நந்தினி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து அவரது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனம் உடைந்து போன கார்த்திக் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், உடற்பயிற்சி கூடத்தை சரிவர நடத்த முடியாமல் அந்த உடற்பயிற்சி கூடத்தை வேறு ஒருவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் காலில் ஏற்பட்ட காயம் மற்றும் மன அழுதத்திற்காக நேற்று முன்தினம் கார்த்திக்கை அவரது தாய் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று விட்டு வீட்டிற்கு இருவரும் வந்துள்ளனர். அப்போது மாலையில் தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறி கார்த்திக் அவரது தாயிடம் கூறி விட்டு சென்று விட்டார்.

இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை, மேலும் செல்போனும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தாய், கார்த்திக் தங்கியிருந்த லாட்ஜூக்கு சென்றார். அப்போது அவர் தங்கியிருந்த அறையின் கதவை தட்டி உள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்து லாட்ஜ் ஊழியர்களை அழைத்துள்ளனர். அப்போதும் கதவு திறக்காததால் விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து பாத்ரூமில் தற்கொலை செய்து கொண்டபடி இறந்தநிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து போலீசார் கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார்த்திக் எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கி உள்ளது. அதில் தனது தற்கொலைக்கு நந்தினியின் தந்தைதான் காரணம் என்றும், அக்கா, அம்மாவை நன்றாக பார்த்துக்கொள் என்று எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் சின்னத்திரை நடிகையின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்ககம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

வால்மீகி குறித்து சர்ச்சைக் கருத்து நடிகை ராக்கி சாவந்த் கைது

மும்பை, ஏப்ரல் 04, 05:30 PM

ராமாயணத்தை எழுதிய வால்மீகி குறித்து சர்ச்சை கருத்துதெரிவித்த நடிகை ராக்கி சாவந்தை பஞ்சாப் போலீசார் இன்று கைது செய்தனர்

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். சர்ச்சைக்கு பெயர்போன இவர் தமிழிலும் 2 படங்களில் நடித்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது திடீரென்று அரசியலில் குதித்த இவர் ராஷ்டிரிய ஆம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் டெபாசிட் கூட கிடைக்காமல் தோல்வி அடைந்தார்.

இவர் கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் அங்குள்ள இந்தியர்கள் கொண்டாடிய சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டார். விழாவிற்கு அவர் கவர்ச்சி உடை அணிந்து சென்றார்.

அந்த ஆடையில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படங்கள் இருந்தன. முன்புறம் பின்புறம் என்று ஆடை முழுவதும் மோடி படங்களாக காணப்பட்டன. அந்த ஆடையுடன் இருக்கும் தனது புகைப்படத்தை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமிலும் அவர் வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இது குறித்து வழக்குபதிவுசெய்யபட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

நடிகை ராக்கி சாவந்த் ராமாயணத்தை எழுதிய முனிவர் வால்மீகி எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை கூறியதாக புகார் எழுந்தது. தற்போது இது தொடர்பாக பஞ்சாப் லுதியானா நீதிமன்றம் மார்ச் 9 ந்தேதி வாரண்ட் பிறபித்து இருந்தது இதை தொடர்ந்து பஞ்சாப் போலீசார் இன்று மும்பை வந்தனர். அவர்கள் ராக்கி சாவந்தை இன்று கைது செய்தனர்.

இந்தியாவுக்கு அவமானம்
மகாபலிபுரத்தில் ஜெர்மன் நாட்டு பெண் கற்பழிப்பு
சுற்றுலா பாதிக்கும் அபாயம்

காஞ்சிபுரம், ஏப்ரல் 04, 05:30 PM

ஜெர்மன் நாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக, போலீசார் வரைந்துள்ள உத்தேச படம் நேற்று வெளியிடப்பட்டது. மகாபலிபுரத்தில் வெளிநாட்டு பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுற்றுலாவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் கடற்கரையில், ஜெர்மன் நாட்டிலிருந்து சுற்றுலா வந்த, 35 வயது பெண்ணை மூவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, அப்பெண், மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார்அளித்துள்ளார்.

வெளிநாட்டு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வெளியான தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை பிடிக்கும் பணியில், போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த பெண் அளித்த தகவலை தொடர்ந்து, குற்றவாளி என கருதப்படும் நபரின் படத்தை போலீசார் நேற்று வரைந்து வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற நேற்று முன்தினத்திலிருந்து, மாவட்ட எஸ்.பி., சந்தோஷ் ஹதிமனி, பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறார். மாமல்லபுரம் டி.எஸ்.பி., எட்வர்ட் தலைமையில், திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர், அனுமந்தன், திருப்போரூர் காவல் ஆய்வாளர், ரமேஷ் மற்றும் மாமல்லபுரம், மானாமதி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாமல்லபுரம் கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான, வழிப்பறி மற்றும் இதர குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களின் புகைப்படங்களை, ஜெர்மன் நாட்டு பெண்ணிடம் போலீசார் காண்பித்துஉள்ளனர். போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதால், அடுத்த சில நாட்களுக்குள் குற்றவாளிகளை பிடிக்க முடியும் என, போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.,சந்தோஷ்ஹதிமனியிடம் கேட்டபோது, "குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இதுகுறித்து பிறகு சொல்கிறேன்," என்றார்.

‛கத்தோலிக்க நம்பிக்கைக்கு எதிரானதாம் யோகா'

கொச்சி, ஏப்ரல் 04, 05:30 PM

‛யோகா என்பது தெய்வீக அனுபவத்தை பெறும் வழி கிடையாது. உடல் மற்றும் மன ரீதியான நலம் பெறவே அது உதவுகிறது' என, சிரியன் - மலபார் கத்தோலிக்க சர்ச் கூறியுள்ளது.

யோகா குறித்து சிரியன் - மலபார் கத்தோலிக்க சர்ச்சை சேர்ந்த பிஷப்கள், இந்த ஆண்டு துவக்கத்தில், யோகா குறித்து ஆய்வு செய்தனர். கத்தோலிக்க நம்பிக்கையில் யோகாவின் பங்கு குறித்தும் விவாதித்தனர். தற்போது சர்ச் சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

உடற்பயிற்சி தான்

நாம் நம்பும் கடவுளை, யோகா மூலம் அடைய முடியாது. இந்து கலாச்சாரத்தில் யோகாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தாலும், அதை ஒரு உடற்பயிற்சியாகவோ அல்லது குறிப்பிட்ட விஷயத்தில் மனதை செலுத்துவதற்காகவோ, தியானம் செய்வதற்காகவோ தான் எடுத்து கொள்ள முடியும். தெய்வீக அனுபவத்தை பெறுவதற்கும், கடவுளுடன் தனிப்பட்ட முறையில் பேசுவதற்கும் யோகாவால் முடியும் என ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, யோகா தொடர்பாக நடக்கும் பிராத்தனை கூட்டங்களையும், ஆன்மிக நிகழ்ச்சிகளையும் கவனத்துடன் புறக்கணிக்க வேண்டும். அவை, கத்தோலிக்க நம்பிக்கைக்கு எதிரானவை. சர்ச்சின் அதிகாரபூர்வ போதனைகளை ஏற்காதவை.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேற்றைய செய்திகள்

© 2017
All Rights Reserved
* இந்த "சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட்" இணையத்தளத்திலுள்ள அனைத்து ஆக்கங்களும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன.
* மறுபதிப்பு செய்ய விரும்பின் www.southindiancrimepoint.com இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
News and Advertisement Please Contact:
SOUTH INDIAN CRIME POINT
Investigation Weekly Tamil Magazine
POST BOX 137
AMBATTUR,
CHENNAI-600 053
Tamil Nadu
India
Yuganesan,

+91-9043000355
+91-7200557999
+91-9444264100
+91-9841523276

No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "SOUTH INDIAN CRIME POINT"- Weekly Magazine
send your comments

சந்தா விபரம் விளம்பரம் செய்ய