Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

* ராகுல்காந்தி இன்று சென்னை வருகிறார் * வெளிநாட்டில் நடந்த கார் விபத்தில் மத்திய மந்திரி வயலார் ரவி காயம் * ராகுலுக்கு கருப்பு கொடி காட்டப்பபோவதாக சேனா மிரட்டல் : பாதுகாப்பு பலம் * ராகுல் இன்று புதுச்சேரிக்கு வருகை

இன்றைய முக்கிய செய்திகள்

Download latha tamil font


South Indian Crime Point as your Homepage

முக்கிய செய்திகள் (06-02-2010) காலை,IST- 07.00 மணி,நிலவரப்படி,



ராகுல்காந்தி இன்று சென்னை வருகிறார்

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி இன்று (சனிக்கிழமை) காலை 10.10 மணிக்கு புதுச்சேரியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். சிறிது நேரம் விமான நிலையத்திலேயே தங்கி விட்டு பின்னர் டெல்லி செல்கிறார். ராகுல்காந்தி சென்னை விமான நிலையம் வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

ஷாரூக்கானுக்கு சல்மான் கான் ஆதரவு

ஐ.பி.எல்-3ம் சீசன் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் கலந்து கொள்வது குறித்து பாலிவுட் நடிகரும், மும்பை நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாரூக் கான் கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்திற்கு சிவசேனா கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தது. இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது.மன்னிப்பு கேட்காவிடில் ஷாரூக் கானின் படத்தை மும்பையில் திரையிட விட மாட்டோம் என்று எச்சரிக்கையும் சிவசேனா சார்பில் விடுக்கப்பட்டது. ஷாரூக் கான் , இதற்கு தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும், விளையாட்டில் அரசியல் மற்றும் மதத்தை கலக்க சிவசேனா முயற்சி செய்வதாக தெரிவித்தார். இந்நிலையில் மும்பையில் பேட்டியளித்த மற்றொரு பாலிவுட் நடிகரான சலமான் கான், ஷாரூக் கானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஷாரூக் கான், ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்கும் அணியின் உரிமையாளர், ஆகவே அவருக்கு இதுகுறித்து கருத்து தெரிவிக்க உரிமை உண்டு என்றும் அவர் தவறாக எதுவும் பேசவில்லை என்று சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

  • விலைவாசி விரைவில் குறையும்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் மன்மோகன்சிங் உறுதி

    விலைவாசி உயர்வு விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மன்மோகன்சிங், மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி, குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கு கொண்டனர். காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், விலைவாசி விரைவில் குறையும் என்று உறுதி அளித்தார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசித்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதால், அதன் பலன்களை இன்னும் சில வாரங்களில் காணலாம் என்று அப்போது அவர் கூறினார்.

    செய்யூரில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து மாணவன் பலி

    காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் உள்ளது செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் சிறப்பு பயிற்சி வகுப்பிற்காக 10ம் வகுப்பு மாணவர்கள் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில், பள்ளி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது. இநத நிகழ்வில், சம்பவ இடத்திலேயே தேவராஜன் என்ற மாணவன் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர். மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

  • இன்றைய செய்திப் புகைப்படங்கள்











    திண்டுக்கல் ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 80 பேர் காயம்

    திண்டுக்கல் மாவட்டம் கொசவப்பட்டியில் புனித உத்திரியமாதா கோவில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு திருவிழா நடந்தது. ஜல்லிக்கட்டில் மாடுகளை பிடிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர். சீறி வந்த காளைகளை இளைஞர்கள் பாய்ந்து அடக்க முயன்றனர். ஆக்ரோஷமாக வந்த காளைகள் முட்டியதில் 80 பேர் காயம் அடைந்தனர். இதில் ராஜா (வயது 40), காளியப்பன் (37), ஜான்சன் (23) மற்றும் ஜெகன், குமரேசன், பெரியசாமி, சின்னத்துரை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    ரூ.20 கோடி செலவில் முருகன் கோவிலுக்கு புதிய தங்க விமானம்

    ரூபாய் 20 கோடி செலவில் முருகன் கோவிலுக்கு புதிய தங்க விமானம் விரைவில் அமைக்கப்படும் என அறங்காவலர்கள் பதவி ஏற்பு விழாவில் அறங்காவலர் குழுத் தலைவர் தெரிவித்தார். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் நான்காம் ஆண்டு அறங்காவலர்கள் தேர்தல் இந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் அசோக்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில், நான்காவது முறையாக கோவில் அறங்காவலர் குழுத் தலைவராக மு.ஈஸ்வரப்பன் தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஏ.வி.சக்கரப்பன், கு.பாலகிருஷ்ணன், உஷாரவி மற்றும் பொன்குணசேகர் ஆகிய நான்கு அறங்காவலர்கள் தேர்வு செய்யப்பட்டது.

    பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று காலை 11 மணிக்கு மலைக்கோவில் வள்ளி மண்டபத்தில் நடந்தது. கோவில் நிர்வாக அதிகாரி பரஞ்ஜோதி தலைமை வகித்தார். உதவி ஆணையர் அசோக்குமார் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் நடந்த கூட்டத்தில் அறங்காவலர் குழுத் தலைவர் மு.ஈஸ்வரப்பன் பேசியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளில் கோவிலில் கோவிலில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன. பக்தர்களின் பல ஆண்டுகள் கனவாக இருந்த 9 நிலை ராஜகோபுரம் ஆறு கோடியில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் பத்து மாதத்தில் இப்பணி முடிவு பெறும். மாவட்டத்தில் உள்ள எந்த கோவிலுக்கும் இல்லாத தங்கவிமானம் 20 கோடி செலவில் இந்தாண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சரவணப் பொய்கையில் உள்ள நான்கு புதை குழிகள் அகற்றப்பட்டு, தற்போது 25 லட்சம் செலவில் திருக்குளத்தில் வளர்ச்சி பணிகள் செய்யப்படுகின்றன. இதன் திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளன.

  • நடிகர் ஜெயராம் வீடு மீது தீப்பந்தம் வீசி தாக்குதல்; கார் உடைப்பு - அலுவலகம் எரிப்பு

    நடிகர் ஜெயராம் மலையாள டி.வி. ஒன்றுக்கும், தமிழ் வாரபத்திரிகை ஒன்றுக்கும் கொடுத்த பேட்டியில், தமிழ்ப் பெண்களை பற்றி இழிவான கருத்தை கூறியிருந்தார். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் சென்னை வளசரவாக்கம் ஜானகிநகர் லட்சுமி தெருவில் உள்ள நடிகர் ஜெயராமின் வீடு மீது இன்று மாலை தீப்பந்தம் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அலுவலகம் எரிக்கப்பட்டதுடன், காரும் உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 8 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்.இந்த தாக்குதல் சம்பவம் நடந்தபோது நடிகர் ஜெயராம் வீட்டில் இல்லை. அவர் கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தார். ஜெயராமின் தாயார், மனைவி, மகள் மற்றும் வேலைக்கார பெண்கள் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

    நெல்லை எஸ்.ஐ., கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது

    எஸ்.ஐ., வெற்றிவேல் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், கடந்த மாதம் 7ம் தேதி அம்பாசமுத்திரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தபோது ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஆள் மாறாட்டத்தில் நடந்த இந்த கொலையில், ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள வெள்ளூரை சேர்ந்த கந்தசாமி, அவரது சகோதரி சிவகாமி, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தவிர ஆறு பேர், வெவ்வேறு கோர்ட்டுகளில் சரண் அடைந்தனர். ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள மங்களகுறிச்சியை சேர்ந்த பிச்சையா மகன் அம்மமுத்து(27) நேற்று கைது செய்யப்பட்டார். இவரும் கொலையில் முக்கிய குற்றவாளி என போலீசார் தெரிவித்தனர். இவருடன் சேர்த்து இந்த கொலையில் 14 பேர் போலீசில் சிக்கியுள்ளனர். மேலும் ஆறு பேரை தேடிவருகின்றனர்.











  • ஈராக்கில் கார் குண்டு வெடித்தது : 40 பேர் பலி

    ஈராக் நாட்டில் கர்பலா என்ற நகரில் இன்று 2 கார் குண்டுகள் வெடித்தன. ஷியா முஸ்லிம்களின் புனித நகரான இங்கு, இன்றைய தினத்தை ஷியா முஸ்லிம்கள் புனித நாளாக கடைபிடித்தனர். அப்போது கார் குண்டுகள் வெடித்ததில் 40 பேர் பலியானார்கள். மேலும் 145 பேர் காயம் அடைந்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

    விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி : மார்ச் 7ம் தேதி முதல்வர் திறக்கிறார்

    விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியை மார்ச் 7ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் பொன்முடி கூறினார். விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டடம் கட்டி முடியும் தருவாயில் உள்ளது. கட்டுமான பணிகளை பார்வையிட்ட பின் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறுகையில்,' மார்ச் மாதம் 7ம் தேதி காலை 10 மணியளவில் விழுப்புரத்தில் கட்டப்படும் தி.மு.க., அறிவாலயத்தை முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கின்றனர். மாலை 4 மணியளவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கின்றனர். விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், தி.மு.க., நிர்வாகிகளும் தீவிரமாக செய்து வருகின்றனர்' என்றார்.

    நேற்றைய செய்திகள்

    Bookmark and Share
  • Read More     Comments (33)