அண்மைச் செய்திகள் ஹாட் நியூஸ் அரசியல் நம்மைச் சுற்றி சம்பவங்கள் புலனாய்வு ரிப்போர்ட் திரை(மறைவு)ச் செய்தி பிரபல கொலைகள் கனவு தொழிற்சாலை சிறப்பு பக்கம்
About Us Breaking News Hot News Politics Incident Investigation Ceni (Hide) News Models Special Focus The dream factory

   

Welcome to South Indian Crime Point

South Indian Crime Point as your Homepage

சினிமா பைனான்சியர் கொலை வழக்கில்
தலைமறைவாக இருந்த துணை நடிகை பெங்களூரில் கைது
ஆபாச படத்தில் நடிக்க வலியுறுத்தியதால் கொன்றதாக வாக்குமூலம்

பூந்தமல்லி, செப்டம்பர், 06-09-2014,

சினிமா பைனான்சியர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த துணை நடிகை, பெங்களூரில் கைது செய்யப்பட்டார். ஆபாச படங்களில் நடிக்க கூறி வலியுறுத்தியதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்து உள்ளார்.

சினிமா பைனான்சியர்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியைச் சேர்ந்தவர் ரெனால்ட் பீட்டர் பிரின்சோ(வயது 36). மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர், கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். பின்னர் சென்னை வந்த அவர், மதுரவாயலில் தங்கி இருந்து ஆன்-லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார்.

மேலும் சினிமா படங்களுக்கு நிதி உதவியும் வழங்கினார். அத்துடன் சில படங்களிலும் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் ரெனால்டுக்கும், மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் மெயின்ரோடு, வி.ஆர்.எஸ்.நகர் பகுதியில் வசித்து வந்த பெங்களூரைச் சேர்ந்த துணை நடிகை சுருதி என்ற சந்திரலேகா(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன்-மனைவி போல் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மாயமானார்

இதற்கிடையில் தனது கணவரான ரெனால்ட் பீட்டர் பிரின்சோவை 18-1-2014 முதல் காணவில்லை என 1-2-14 அன்று மதுரவாயல் போலீசில் சுருதி புகார் ஒன்றை அளித்தார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இதேபோல் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் தனது தம்பி ரெனால்ட் பீட்டர் பிரின்சோவை காணவில்லை என்று அவரது அண்ணன் ஜஸ்டின்பிரின்சோ என்பவர் கடந்த 12-4-2014 அன்று புகார் அளித்தார்.

இதையடுத்து பாளையங்கோட்டை போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இதற்கிடையில் ரெனால்ட் பீட்டர் பிரின்சோவுக்கு சொந்தமான கார் நெல்லை மாவட்டத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாளையங்கோட்டை போலீசார், அந்த காரை பறிமுதல் செய்தனர்.

3 பேர் கைது

அந்த காரை வைத்திருந்த ஆனஸ்ட்ராஜ் என்ற சதாம், காந்திமதிநாதன் என்ற விஜய், ரபீக் உஸ்மான்கனி என்ற ரபீக் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது துணை நடிகை சுருதி, தனது கணவர் ரெனால்டுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததும், பின்னர் அவரது உடலை சென்னையில் இருந்து காரில் எடுத்து வந்து பாளையங்கோட்டை, மகாராஜா நகர் பகுதியில் உள்ள ஒரு காலி நிலத்தில் புதைத்ததும் தெரியவந்தது.

கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் புதைக்கப்பட்ட ரெனால்டுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கைதான 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ஜான்பிரின்சன், வினோத் நிர்மல் சிங் ஆகிய மேலும் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலையில் தலைமறைவான துணை நடிகை சுருதி, உமாசந்திரன், எலிசா ஆகிய 3 பேரை தேடி வந்தனர்.

தொழில் கூட்டாளி

தலைமறைவான உமாசந்திரன், ரெனால்டுவின் தொழில் கூட்டாளி ஆவார். இருவரும் சேர்ந்துதான் ஆன் லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இதனால் ரெனால்ட் மீது உமாசந்திரன் ஆத்திரத்தில் இருந்தார்.

இதற்கிடையில் துணை நடிகை சுருதியும் ரெனால்ட் மீது கோபத்தில் இருப்பதை அறிந்த உமாசந்திரன், இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவருடன் சேர்ந்து ரெனால்டை கொலை செய்ய உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் மதுரவாயல் பகுதியில் நடைபெற்றதால் இந்த வழக்கு மதுரவாயல் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

பெங்களூரில் கைது

இது குறித்து மதுரவாயல் போலீசார் தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக இருந்த துணை நடிகை சுருதியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் அவர் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து சப்-இனஸ்பெக்டர்கள் சுமதி, முரளி ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று பெங்களூரில் முகாமிட்டு, அங்கு பதுங்கி இருந்த துணை நடிகை சுருதியை கைது செய்தனர்.

பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலை சம்பவம் குறித்து துணை நடிகை சுருதி போலீசாரிடம் அளித்து உள்ள வாக்குமூலம் வருமாறு:-

ஆபாச படத்தில் நடிக்க வலியுறுத்தல்

நான், பெங்களூரைச் சேர்ந்தவள். எனக்கு 16 வயதில் மஞ்சுநாத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் சில வருடங்களில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தேன். பின்னர் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்தேன். கடந்த 2012-ம் ஆண்டு சேலத்தில் சினிமா படப்பிடிப்புக்காக வந்தபோது ரெனால்ட் பீட்டர் பிரின்சோவுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் எங்கள் இருவருக்கும் இடையே காதலாக மலர்ந்தது.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு மதுரவாயல் பகுதியில் தனி வீட்டில் வசித்து வந்தோம். திருமணமான சில மாதங்களிலேயே என்னை ஆபாச படங்களில் நடிக்க வலியுறுத்தியும், ஒரே நேரத்தில் பலருடன் உடலுறவு செய்யச் சொல்லியும் குடிபோதையில் அடித்து உதைத்து வந்தார்.

கழுத்தை நெரித்து கொலை

இதனால் அவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். இதையடுத்து உமாசந்திரன், ஜான்பிரின்சன் ஆகியோர் உதவியுடன் 18-1-2014 அன்று எனது கணவர் ரெனால்டுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்தும், விஷ ஊசி போட்டும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தேன்.

நண்பர்களின் உதவியுடன் பாளையங்கோட்டையில் உள்ள காலி இடத்தில் அவரது உடலை புதைத்து விட்டு சென்று விட்டோம். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் எனது கணவரை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தேன். ஆனால் அவரது காரை எனது நண்பர்கள் ஓட்டி வந்ததால் நாங்கள் மாட்டிக் கொண்டோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஏற்கனவே இந்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். 6-வதாக கைது செய்யப்பட்ட துணை நடிகை சுருதியையும் மதுரவாயல் போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் தொடர்ந்து தலைமறைவாக உள்ள உமாசந்திரன், எலிசா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்றைய செய்திகள்

முகப்பு -Home

© 2014
All Rights Reserved
* இந்த "சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட்" இணையத்தளத்திலுள்ள அனைத்து ஆக்கங்களும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன.
* மறுபதிப்பு செய்ய விரும்பின் www.southindiancrimepoint.com இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
News and Advertisement Please Contact:
SOUTH INDIAN CRIME POINT
Investigation Weekly Tamil Magazine
POST BOX 137
AMBATTUR,
CHENNAI-600 053
Tamil Nadu
India
Yuganesan,

+91-9043000355
+91-9841005412
+91-9444264100
+91-7299140319
044-64541144,
+91-9841523276

Our Online & Printing Media Partner : Mr.Jainendra Chouraria,

No : 198, (Old No : 10) Rasappa Chetty Street,

Chennai - 600003
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "SOUTH INDIAN CRIME POINT"- Weekly Magazine
send your comments