Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
முக்கிய செய்திகள் (07-02-2010) காலை,IST- 07.00 மணி,நிலவரப்படி,

கோவை செம்மொழி மாநாட்டில் உலக தமிழ் பல்கலை பங்கேற்பு
தமிழக அரசு நடத்தும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக் கழக பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இது குறித்து உலகத் தமிழ் பல்கலைக் கழக வேந்தர் செல்வின்குமார் கூறியதாவது: அமெரிக்காவில் இயங்கும் உலகத் தமிழ் பல்கலைக் கழகம் சார்பில், வாஷிங்டனில் திருவள்ளுவர் உலகத் தமிழ் மன்றம் செயல்படுகிறது. இதன் சார்பில், வரும் ஜூலை 3ம் தேதி, வாஷிங்டன் சிவா - விஷ்ணு கோவில், வடமுருகன் அமெரிக்க திருக்கோவில் அருகில், நான்கடி உயர, ஐம்பொன் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுகிறது. திறப்பு விழாவில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தூதரக அதிகாரிகள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர்.
எங்கள் மையம், பாரதியார், காமராஜர், தமிழ் இணைய பல்கலைக் கழகங்களின் தொலைதூர கல்வி மையமாக செயல்படுகிறது. அமெரிக்கா வாழ் தமிழர்கள், மாணவர்களின் பிரச்னையை தீர்க்க நாங்கள் பல்வேறு உதவிகளை புரிந்து வருகிறோம். கோவையில், முதல்வர் நடத்தும் தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பை ஏற்று இதில் நாங்கள் பங்கேற்கிறோம். இவ்வாறு செல்வின்குமார் தெரிவித்தார். பல்கலைக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சினிமாவில் அரசியலை நுழைத்து கெடுத்துவிட வேண்டாம்: கருணாநிதி பேச்சு
தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, தமிழ் திரையுலகம் சார்பில் நேற்று நடைபெற்ற பாசத்தலைவருக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் கருணாநிதி ஆற்றிய ஏற்புரையில் கூறியதாவது:- இந்த இனிய விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து-வாழ்த்தியும்-சில நல்ல அறிவுரைகளை வாழ்த்தியவர்களுக்கும், திரை உலகத்தினருக்கும் எடுத்துக் கூறியுள்ள இந்தியாவினுடைய தலைசிறந்த கலைஞர் அமிதாபச்சனுக்கு நான் முதற்கண் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். நாமெல்லாம் இங்கே ஒன்று சேர்ந்திருப்பது-அரசியல் ரீதியாக அல்ல. நாமெல்லாம் ஒரே குடும்பம் என்று சொல்வது - கலைக் குடும்பம் என்ற அந்த வார்த்தையின் அடிப்படையிலே தான் இங்கே ஒன்று சேர்ந்திருக்கிறோம். இதிலே அரசியலை நுழைக்க நான் விரும்பவில்லை.
அரசியல் தானாக நுழைந்தால் அதற்கு நான் பொறுப்பும் அல்ல. அரசியலை நுழைத்து இதை யாரும் கெடுத்து விடாதீர்கள். அரசியலை நுழைத்து மேலும் நன்மைகளைச் செய்ய வேண்டுமேயல்லாமல், அரசியல் நுழைந்தால், ஆமை புகுந்த வீடாக இந்தத் திரைப்படத் துறை அமைந்து விடக் கூடாது என்பதில் நான் மிகுந்த அக்கறையாக இருக்கிறேன். ஆகவே அரசியலை நுழைக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.
வேலூர் சிறைகளில் கூடுதல் கண்காணிப்பு
சாம்பார் விவகாரம் எதிரொலியாக வேலூர் சிறைகளில் கூடுதல் கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்ற கைதிக்கும், சக கைதிக்கும் இடையே சாப்பிடும் போது சாம்பார் தொடர்பாக நடந்த மோதலில் கிருஷ்ணா அடித்துக் கொல்லப்பட்டார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் கைதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க சிறைத்துறை மேலிடம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் கொலை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் என 1,200 பேர் உள்ளனர். கைதிகள் சாப்பிடும் போது சிறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதே போன்ற நடைமுறை வேலூர் பெண்கள் சிறையிலும் கடைபிடிக்கப்படுவதாக' சிறைத்துறை வட்டாரங்களில் தெரிவித்தனர்.
முதல்-அமைச்சர் கருணாநிதியின் பேனா, சமூக மாற்றத்தையே கொண்டு வந்துள்ளது: அமிதாப்பச்சன் புகழாரம்
தமிழ் திரையுலகம் சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழாவில் நடிகர் அமிதாப்பச்சன் பேசியதாவது:- தமிழ் சினிமா எப்போதும் ஒழுக்கம் நிறைந்ததாகவும், திறமை மிக்கதாகவும், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியும் வருகிறது. இந்தியாவில் சிறந்த படங்கள் எடுக்கப்படும் போதெல்லாம் தமிழகத்தில் இருந்துதான் அதிக அளவில் அவை வெளிவந்திருக்கின்றன. தமிழ் திரையுலகில் உள்ள இதுபோன்ற திறமைகள் மும்பை படவுலகத்தில் இல்லை. அதை தமிழ் திரையுலகத்திடம் இருந்து நாங்கள் கற்கவேண்டியுள்ளது. இந்த உணர்ச்சிகரமான மாலைப் பொழுதில் உங்களது முதல்-அமைச்சரின் பார்வை மற்றும் பேனா வழியாக ஒரு சிறப்பான கலைப்பயணத்தை நான் கண்டிருக்கிறேன். உங்களது பேனா வலிமையானது தமிழகத்தில் சிறந்த திரைப்படங்கள் வெளி வருவதற்கு மட்டும் அது காரணமாக இல்லை. தமிழகத்தில் ஒரு சமூக மாற்றத்தையே கொண்டு வந்திருக்கிறது. அதற்கு உங்களுக்கு நாங்கள் பெரிதும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம் என்று பேசினார்.
இன்றைய செய்திப் புகைப்படங்கள்





இணையதள மைய அதிபரை கடத்திய 4 பேர் கைது
நெல்லையில் வாலிபரை அடித்து உதைத்து கடத்த முயன்றதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி, வண்ணார்பேட்டை பைபாஸ் ரோட்டில் இன்டெர்நெட் சென்டர் நடத்திவருபவர் சுமன்குமார்ராஜா(27). ஓசூரை சேர்ந்த இவர் ஏற்கனவே தான் நடத்திய டெம்பிள் லேண்ட் ஹட்கோ என்ற பெயரில் இணையதள விளம்பர ஏஜன்சிக்காக ஓசூரை சேர்ந்த கலாக்(25) என்பவரிடம் 12.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.
அங்கு கடனை திரும்ப செலுத்தாமல் சுமன்குமார்ராஜா தலைமறைவாகி நெல்லையில் இருந்துள்ளார். நெல்லையில் இணையதள மையம் நடத்துவது குறித்து ஓசூர் கலாக்கிற்கு தகவல் தெரியவந்ததால், தமது நண்பரான ஓசூரை சேர்ந்த பரத்துடன் நெல்லை வந்தார். பரத் ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் உள்ளாராம். எனவே இவர்கள் இருவரும் நெல்லை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் இளைஞரணி செயலாளர் சந்திரசேகரை அணுகிறார். அதே கட்சியின் பாளை ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி(23) ஆகியோர் நேற்று இரவில் வண்ணார்பேட்டையில் உள்ள சுமன்குமார்ராஜா, நிறுவனத்திற்கு சென்று அவரிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர். கடன் பணத்தை எப்போது தருவாய் என கேட்டு கடத்தினர். அவர்களிடம் இருந்து தப்பிய சுமன்குமார்ராஜா, பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் கலாக், பரத், சந்திரசேகர், வேலுச்சாமி ஆகியோர் மீது ஆள்கடத்தல், அத்துமீறீ நுழைந்து தாக்குதல் உள்ளிட்ட வழக்குகளில் நால்வரையும் கைது செய்தனர்.
பீகாரில் ரெயில் தண்டவாளத்தில் பெண் உள்பட 6 பிணங்கள் கிடந்தன
பீகார் மாநிலம் அருகே உள்ள மாசாகி ரெயில் தண்டவாளத்தில் 6 பேரின் உடல்கள் சிதறி கிடந்தன. இதுபற்றி போலீசார் கூறுகையில், `ரெயில் தண்டவாளத்தில் பிணங்கள் கிடப்பது பற்றி கிராம மக்கள் இன்று காலை தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரெயில் தண்டவாளத்தில் கிடந்த ஒரு பெண் உள்பட 6 பேரின் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம். பிணமாக கிடந்தவர்கள் யார்? அவர்கள் எப்படி இறந்தார்கள்? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.
தி.மு.க., கூட்டணியிலிருந்து காங்., வெளியேறும்: முன்னாள் அமைச்சர்
தி.மு.க., கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விரைவில்வெளியேற உள்ளதாக அ.தி.மு.க., பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனியில் நடந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் தி.மு.க., அரசின் திரைமறைவு நடவடிக்கைகளால், 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. தினமும் இந்த அரசு கடனுக்கு 20 கோடி ரூபாய் வட்டி செலுத்துகிறது. தமிழகத்தில் பொருளாதாரம் பாதாளத்திற்கு செல்வதை பிரதமர் மன்மோகன்சிங் கண்டித்துள்ளார். மின்சார தட்டுப்பாட்டைபோக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. வரும் சட்டபை தேர்தலில் தி.மு.க., தனித்து நின்றால் படுதோல்வியை சந்திக்கும். சட்டசபை தேர்தலுக்குள், அந்த கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறும். வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வர் ஆவது உறுதி என்றார்.
நைஜீரியா நாட்டில் துப்பாக்கி முனையில் இந்திய அதிகாரி கடத்தல்
நைஜீரியா நாட்டில் எண்ணை நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியில் ஒரு நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வந்த இந்தியர் ஒருவரை துப்பாக்கிகளுடன் வந்த சில மர்ம ஆசாமிகள் துப்பாக்கி முனையில் மிரட்டி, கடத்தி சென்று விட்டனர். இந்த தகவலை தெரிவித்த போலீஸ் செய்தி தொடர்பாளர் ரீட்டா அப்பெய், அவரையும், வியாழக்கிழமை கடத்தப்பட்ட ஒரு குழந்தையையும் மீட்க துரித நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். ஆனால் கடத்தப்பட்ட இந்திய அதிகாரியின் பெயர் மற்றும் விவரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.





மைக்கேல் ஜாக்சன் டாக்டர் மீது விரைவில் வழக்கு
பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் தொடர்பாக, அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் முர்ரே மீது வழக்கு தொடர அமெரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், கடந்தாண்டு ஜூனில் மரணம் அடைந்தார். இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவங்கினர். ஜாக்சன் உயிர் பிரிவதற்கு முன், அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் முர்ரே மீது சந்தேகம் எழுந்தது. இந்த வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிகை, லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், டாக்டர் முர்ரே மீதும், கொலை வழக்கு பதிவு செய்யப்படலாம் என, தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, போலீசாரின் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக, வக்கீல்கள் மூலமாக முன் ஜாமீன் பெறும் முயற்சியில் டாக்டர் முர்ரே தீவிரமாக உள்ளார்.
கோவையில் 75 ஆயிரம் திருட்டு சி.டி.க்கள் பறிமுதல்
கோவை ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து, சென்னைக்கு அனுப்பப்பட இருந்த 75 ஆயிரம் திருட்டு சி.டி.க்களை போலீசார் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் மேற்கு ராமலிங்க ரோட்டை சேர்ந்த ராஜேந்திரகுமார் குப்தா என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 528 மாஸ்டர் சி.டி.க்களும், சி.டி. ரைட்டர் மற்றும் பல கம்ப்யூட்டர் கருவிகளும் கைப்பற்றப்பட்டன.