Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

புலனாய்வு ரிப்போர்ட்

 

திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா!

முதல்வர் ஜெயலலிதாவால் சசிகலா குடும்பமே வெளியேற்றப்பட்ட நிலையில் ஆட்சியிலும் கட்சியிலும் அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்த உப கதாபாத்திரங்கள் தொடர்பாகத்தான் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், இந்த உப கதாபாத்திரங்கள் எல்லாமே காட்சிக்குள் வருவதற்கு காரணமாக இருந்த மெயின் கதாபாத்திரம் சசிகலா தொடர்பாக அவ்வளவாக தகவல் வெளியாவதில்லை.
அவருக்கு என்ன நடக்கிறது?
போயஸ் கார்டனில் இருந்து வெளியேறியபின் ஒரே வீட்டில் தொடர்ந்து தங்காமல் மாறிமாறி தங்கி வருவதாகத் தெரிகிறது. இரு தடவைகள் பாண்டிச்சேரிக்கு சென்று வந்ததாகவும் தகவல் உள்ளது.
இவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்ற அறிக்கை ஜெயலலிதாவிடம் இருந்து வெளியானபோது, அதில் தனது பெயரும் இருந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்கிறார்கள். மற்றையவர்களைக் கட்டம் கட்டினாலும், நட்பு காரணமாக தனது பெயரை ஜெயலலிதா அதில் சேர்த்துக் கொள்ள மாட்டார் என்று அவர் நினைத்திருக்கலாம்.
எல்லாமே சில தினங்களில் சரியாகிவிடும் என அவர் நினைத்திருந்தார் என்கிறார்கள். “அக்கா கோபத்தில் அப்படிச் செய்திருக்கிறார். சில நாட்களில் எல்லாமே ஓகேயாகிவிடும்” என்று தனக்கு ஆறுதல் தெரிவிக்க தொடர்பு கொண்டவர்களிடம் இவரே சொல்லியிருக்கிறார். மீண்டும் போயஸ் கார்டனுக்குள் போய்விடலாம் என்று அந்தளவுக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது.
ஆனால், அதன்பின் தொடர்ந்து அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக அவரது நம்பிக்கையை தகர்க்கும் வகையில் இருக்கவே மிகவும் உடைந்து போய் உள்ளார் என்கிறார்கள்.
தனது நிலையை விளக்கி சசிகலா எழுதிய இரண்டு கடிதங்கள் ஜெயலலிதாவிடம் சேர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், பதில்தான் வரவில்லை.
அரசியல் மற்றும் கட்சிக்கு வெளியே சசிகலாவுக்கு ஒரு நட்பு வட்டாரம் உண்டு. அபவ்-அவரேஜாக ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள நட்பு வட்டாரம் அது. ஜெயலலிதா அறிவிப்பு வெளியான பின்னரும் ஓரிரு நாட்கள் இந்த நட்பு வட்டாரம் சசிகலாவுடன் தொடர்பில் இருந்தது. சில கோவில்களில் சசிகலா பெயரில் அபிஷேகங்களும் இந்த நபர்களால் செய்யப்பட்டன. அத்தோடு சரி.
அதன்பின் சிறிதுசிறிதாக அவர்களும் விலகத் தொடங்கி விட்டார்கள். அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலா தொடர்பான மறைமுக அறிவிப்புடன், இந்த நட்பு வட்டாரம் முழுமையாகவே காணாமல் போய்விட்டது. போன் நம்பர்களும் மாறிவிட்டன.
ஆரம்பத்தில் சசிகலா உறவுகள் என்று செல்வாக்குப் பெற்ற தினகரன், திவாகரன் போன்றவர்கள் அகலக்கால் வைத்ததில்லை. நிலைமை சிக்கலாகிறது என்று தெரிந்தவுடன் தலையை உள்ளே இழுத்துக் கொள்வார்கள். சசிகலா பெயரைச் சொல்லி காரியம் செய்து பிரச்னைகளை கொண்டுவந்தது இருவர்தான். ஒருவர் நடராஜன். மற்றையவர் சுதாகரன்.
ஆனால் இம்முறை ராவணன் முதல்கொண்டு பலரும் கண்களை மூடிக்கொண்டு புகுந்து விளையாடி விட்டார்கள். அவர்கள் தொட்ட பல விஷயங்கள் சிக்கலை ஏற்படுத்தக் கூடியவை என்பதைத் தெரிந்துதான் செய்தார்களா, அல்லது அறியாமையில் செய்தார்களா தெரியாது. ஆனால், பல தடவைகள் பயமில்லாமல் நெருப்போடு விளையாடினார்கள்.
இந்த விபரமெல்லாம் இப்போதுதான் சசிகலாவுக்கு மற்றைய குடும்ப உறவுகளால் ஓரளவுக்கு சொல்லப்பட்டு வருகிறது.
சசிகலா குடும்பத்தோடு நெருக்கமானவராக மாயவரம் பக்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர் இருந்தார். (இந்த நபர் சசிகலாவின் உறவுக்காரர் என்றும் சிலர் சொல்கிறார்கள்) இவர் அவ்வப்போது பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதும் நபர். முன்பு இவருடன் அரசியல் விஷயங்கள் தொடர்பாக சசிகலா பேசுவதுண்டு. கடந்த சில வருடங்களாக இவராக ஒதுங்கியோ, அல்லது ஒதுக்கப்பட்டோ இருந்தார்.
நீண்ட நாட்களின்பின் இவரைச் சந்தித்திருக்கிறார் சசிகலா.
அப்போதுதான், சசிகலா உறவினர்கள் யார்யார் எப்படிப்பட்ட இடங்களில் எல்லாம் வம்பு வளர்த்துக் கொண்டார்கள் என்று இந்த நபர் விலாவாரியாக விளக்கம் கொடுத்தாராம்.
சசிகலா உறவினர்களில் இருவர், இம்முறை அ.தி.மு.க. ஆட்சி ஏற்பட்டபின் தொழில் ரீதியாக இடைஞ்சல் கொடுக்க முயன்ற சில தொழிலதிபர்களின் பெயர்களையும், அந்தத் தொழிலதிபர்களுடன் உறவு முறையில் உள்ள வேறு சில நபர்களின் பெயர்களையும் கூறிவிட்டு, “இவர்கள் யார், இவர்களது பின்னணி என்ன என்றாவது உங்க ஆட்களுக்கு தெரியுமா” என்று சொன்னபோது, சசிகலா தலையில் கை வைத்தபடி கேட்டுக் கொண்டிருநதாராம்!
மொத்தத்தில் தாம் வெளியேற்றப்பட்டதற்கு சரியான காரணம் என்ன என்பதை சசிகலா இப்போது புரிந்து கொண்டார் என்கிறார்கள்!

 

  • முந்தைய புலனாய்வு ரிப்போர்ட்


    Bookmark and Share