Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

* மன்மோகன் சிங் மற்றும் சோனியா நாளை சென்னை வருகை * சிலி நாட்டில் மீண்டும் நிலநடுக்கம் * பென்னாகரம் இடைத் தேர்தல் : 33 மனுக்கள் ஏற்பு * கற்பழிப்பு புகாரில் உண்மை இல்லை: நித்யானந்தா பேட்டி

இன்றைய முக்கிய செய்திகள்

Download latha tamil font


South Indian Crime Point as your Homepage

முக்கிய செய்திகள் (12-03-2010) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

மன்மோகன் சிங் மற்றும் சோனியா நாளை சென்னை வருகை

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகத் திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, விமானம் மூலம் நாளை சென்னை வருகின்றனர். டில்லியில் இருந்து நாளை பிற்பகல் கிளம்பும் அவர்கள் 5மணியளவில் புதிய சட்டசபை வளாகத்திற்கு வருகின்றனர். 6 மணியளவில் நடைபெற உள்ள திறப்பு விழாவில் கலந்துகொண்டு, பின் அவர்கள் டில்லி திரும்புகின்றனர். இவர்களின் வருகையையொட்டி சென்னையில் பலஅடுக்கு பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்கு 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல். போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் டெக்கான்-கொல்கத்தா மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி ஏப்ரல் 25-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

  • பாகிஸ்தானில் 22 சதவீதம் மகளிர் இடஒதுக்கீடு

    பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு, இந்தியாவில் அரசியல்வாதிகள் தயங்கிக் கொண் டிருக்கும் வேளையில், பாகிஸ்தானில் 22 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக் கது. உலகளாவிய நிலையில் பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு பொதுவாக 30 சதவீதம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. 2009 டிசம்பரில், பார்லிமென்டுகளுக்கு இடையிலான யூனியன் எடுத்த ஆய்வின்படி, உலகில் சராசரியாக 18.8 சதவீதம் பெண்கள்தான் ஆட்சியில் இடம்பெற்றுள்ளனர்.

    இதில், முன்னணியில் இருப்பது மத்திய ஆப்ரிக்க நாடான ருவாண்டா தான். அங்கு பெண்களுக்கு 56 சதவீதம் இட ஒதுக்கீடு வழங் கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுவீடன்(47 சதவீதம்), தென் னாப்ரிக்கா (45 சதவீதம்), ஐஸ்லாந்து (43 சதவீதம்), அர்ஜென்டினா (42 சதவீதம்), நெதர்லாந்து (41 சதவீதம்), நார்வே (40 சதவீதம்) ஆகிய நாடுகள் இடம்பிடிக்கின்றன. பாகிஸ்தானில் பார்லிமென்ட்டில் 22 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. நேபாளத் தில் சட்ட அமைப்புகளில் 33 சதவீதம், கட்சியில் 50 சதவீதம் வழங்க முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. வங்கதேசத்தில் தற்போது எம்.பி.,க்கள் 19 சதவீதமாக இருக்கின்றனர். சீனாவில் 21 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ருவாண்டா, அர்ஜென்டினா, அங் கோலா, கோஸ்டாரிக்கா ஆகிய நாடுகளைத் தவிர பிற நாடுகளில் சட்டப்பூர்வமாக இட ஒதுக்கீடு அறிவிக்கப்படாமலே இத்தனை சதவீதம் பெண்கள் ஆட்சி அமைப்புகளில் இடம் பிடித் துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நளினி விடுதலை பற்றி 29-ந் தேதி முடிவு; ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்று 19 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் நளினி, அரசிடம் விண்ணப்பித்தார். ஆனால், இதுவரை விடுதலை கிடைக்கவில்லை.

    ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில், ஆலோசனைக்குழு கூட்டப்பட்டது. இந்த குழு, நளினி விடுதலை தொடர்பாக அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த அறிக்கையை அரசுக்கு, இந்த ஆலோசனை குழு அனுப்பி வைத்தது. நளினி விடுதலை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசீதரன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். அரசுக்கு ஆலோசனை குழு அனுப்பியுள்ள அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதைத்தொடர்ந்து நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

    பி.எஸ்.ராமன்:- ஆலோசனை குழுவிடம் இருந்து நாங்கள் அறிக்கையை பெற்றிருக்கிறோம். தற்போது அதை அரசு ஆய்வு செய்து வருகிறது. ஆலோசனை குழுவின் அறிக்கை வெறும் பரிந்துரை மற்றும் அறிவுரை தானே தவிர, அரசை கட்டுப்படுத்தும் உத்தரவு ஆகாது. ஆலோசனை குழு அறிக்கையின் நகல் `சீல்' வைத்த கவரில் என்னிடம் உள்ளது. அதில் உள்ள கருத்துக்கள் எனக்கும் தெரியாது. இந்த அறிக்கையின் மீது அரசு ஆய்வு செய்து வருவதால் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இன்னும் 2 வார காலத்துக்குள் முடிவெடுத்தால் அந்த முடிவோடு, இந்த அறிக்கையையும் நான் கோர்ட்டில் சமர்ப்பிக்கிறேன். மற்றபடி இந்த ஆலோசனைக்குழு அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டால் அதை நான் இப்போது தாக்கல் செய்கிறேன்.

    நீதிபதிகள்:- அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்.

    (அதைத்தொடர்ந்து `சீல்' வைத்த வெள்ளை கவரை கோர்ட்டு ஊழியர் மூலமாக நீதிபதிகளுக்கு பி.எஸ்.ராமன் கொடுத்து அனுப்பினார். அந்த கவரை பிரித்து நீதிபதிகள் இருவரும் படித்தனர். அதில் 4 தாள்கள் இருந்தன. சில நிமிடங்களுக்குள் படித்து முடித்துவிட்டு, அதை மடித்து அதே கவரில் வைத்து கோர்ட்டு ஊழியர் மூலமாக பி.எஸ்.ராமனிடம் திருப்பி அனுப்பினர்.)

    பி.எஸ்.ராமன்:- இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வேறு யாருக்கும் தெரியாது.

    நீதிபதிகள்:- அந்த அறிக்கையின் அடிப்படையில் நாங்கள் எதையும் இப்போது பேச போவதில்லை.

    பி.எஸ்.ராமன்:- இந்த விவகாரத்தில் மேலும் சில விளக்கங்களை ஆலோசனை குழுவிடமிருந்து தமிழக உள்துறை பெறுவதற்கு முடிவு செய்துள்ளது. அந்த விவரங்களும் வந்து சேரவேண்டும். தற்போது என்னிடமுள்ள ஆலோசனை குழு அறிக்கையை நான் `சீல்' வைத்து மீண்டும் அரசுக்கு அனுப்பிவிடுவேன். இந்த அறிக்கையின் அடிப்படையில் முடிவெடுப்பதற்கு முன்பு, அதிலுள்ள விவரங்கள் வெளியே தெரியவந்தால், அது சம்பந்தப்பட்டவர்களுக்கு அநீதி இழைத்ததாக ஆகிவிடும்.

    நீதிபதிகள்:- இந்த விவகாரத்தில் சீக்கிரம் முடிவு ஏற்படும் வகையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அப்படியொரு நம்பிக்கையை ஏற்படுத்தியபிறகு அதில் காலதாமதம் செய்யவேண்டாம்.

    பி.எஸ்.ராமன்:- இன்னும் 2 வார காலத்துக்குள் அரசு, நளினி விடுதலை தொடர்பாக முடிவெடுக்கலாம். வழக்கை 29-ந் தேதிக்கு தள்ளி வையுங்கள். ஒருவேளை அதற்கு முன்பே அரசு முடிவெடுத்தால் அதை கோர்ட்டுக்கு அப்போதே தெரிவிப்பேன். கூடிய விரைவில் முடிவெடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர் சிறையிலேயே தொடர்ந்து துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கமாட்டார்.

    இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    ஐகோர்ட்டு உத்தரவிட்டதன் பேரில், ஆலோசனைக் குழுவின் அறிக்கையை அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை நாங்கள் படித்துப் பார்த்தோம். இதன் அடிப்படையில் பரிசீலனை செய்து அரசுதான் தகுந்த முடிவை அறிவிக்க வேண்டும். அதற்கு அட்வகேட் ஜெனரல் கால அவகாசம் கேட்டார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு 29-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

  • சிலி நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்

    சிலி நாட்டில் மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் சாண்டியாகோ அருகில் ஏற்பட்ட நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. கடந்த மாதம் 27ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சி இது என்று அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    குஜராத் கலவர வழக்கு:முதல்-மந்திரி நரேந்திரமோடி 21-ந் தேதி ஆஜராக வேண்டும்; சிறப்பு விசாரணை குழு சம்மன்

    "குஜராத் கலவர வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், 21-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும்'' என்று குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடிக்கு சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ள சிறப்பு விசாரணை குழு சம்மன் அனுப்பி உள்ளது.

    கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் கடந்த 2002-ம் ஆண்டு பயங்கர கலவரம் வெடித்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    அகமதாபாத் நகரத்தில் குல்பர்க் சொசைட்டி பகுதியில் நடந்த கலவரத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. எசான் ஜாப்ரி உள்பட 70 பேர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர்.

    இதுதொடர்பாக ஜாப்ரியின் மனைவி ஜகியா ஜாப்ரி ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், "மோடி மற்றும் அவரது ஆட்கள் கலவரத்தில் ஈடுபடுவோரை கண்டுகொள்ளாமல் விடும்படி போலீசாரையும், அதிகாரிகளையும் ஏவினர். கலவரத்தின்போது அமைதியை ஏற்படுத்தவே என் கணவர் ஜெப்ரி முயன்றார். ஆனால், அவரை எரித்துக்கொன்று விட்டனர். இதற்கு மோடியும் அவரது ஆட்களுமே காரணம்'' என்று அந்த வழக்கில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

    குஜராத் கலவரம் தொடர்பாக, ஜகியா ஜெப்ரியின் புகார் உள்பட பல புகார்கள் நரேந்திரமோடி மீது நிலுவையில் உள்ளன. அவை பற்றி விசாரணை நடத்த சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ஆர்.ராகவன் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணை குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது.

    இந்த குழு, ஜகியா ஜெப்ரியின் வழக்கில் நரேந்திர மோடிக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

    "குஜராத் கலவர வழக்குகளில் ஜாப்ரி எரித்துக்கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 21-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும்'' என்று அந்த சம்மனில் கூறப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சிறப்பு விசாரணை குழுவின் தலைவர் ராகவன் அளித்த பேட்டியில், "ஜாப்ரி கொலை வழக்கில் சாட்சிகள் மற்றும் சாட்சியங்களில் இருந்து ஏராளமான ஆதாரங்களை நாங்கள் திரட்டி உள்ளோம். அவை பற்றி விசாரணை நடத்த முதல்-மந்திரி நரேந்திரமோடியை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளோம். அப்போது அவரிடம், இதுவரை நாங்கள் சேகரித்துள்ள ஆதாரங்கள் பற்றி விளக்கம் கேட்போம். ஜாப்ரி வழக்கில் மட்டுமே சம்மன் அனுப்பி உள்ளோம்'' என்று கூறினார்.

    ராகவன் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு, தனது விசாரணையை முடித்து, அடுத்த மாதம் (ஏப்ரல்) 30-ந் தேதிக்குள் தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும்.

  • பென்னாகரம் இடைத் தேர்தல் : 33 மனுக்கள் ஏற்பு

    பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த 37 மனுக்களில் நான்கு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 33 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் கடந்த 3ம் தேதி முதல் துவங்கி 10ம் தேதி வரையில் நடந்தது. தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரன், அ.தி.மு.க., வேட்பாளர் அன்பழகன், பா.ம.க., வேட்பாளர் தமிழ்குமரன், தே.மு.தி.க., வேட்பாளர் காவேரிவர்மன் மற்றும் சுயேச்சைகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 37 பேர் மனு தாக்கல் செய்தனர்.

    நேற்று காலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் மனு பரிசீலனை நடந்தது. தேர்தல் பார்வையாளர்கள் சஞ்சய்பூஸ்ரெட்டி, அஹுஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ம.க., வேட்பாளர் தமிழ்குமரன், தே.மு.தி.க., வேட்பாளர் காவேரிவர்மன் மற்றும் சில சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், தேர்தலில் போட்டியிட டிபாசிட் கட்டாத திருப்பத்தூரை சேர்ந்த சுயேச்சை மனிதன் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பா.ம.க., மாற்று வேட்பாளர் மனு தாக்கல் செய்த சாந்தா, அ.தி.மு.க., மாற்று வேட்பாளர் வேலுமணி, தி.மு.க., மாற்று வேட்பாளர் ஜானகி ஆகிய நான்கு பேர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது, 33 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. நாளை (மார்ச் 13) மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    கற்பழிப்பு புகாரில் உண்மை இல்லை: நித்யானந்தா பேட்டி

    வாரணாசி கும்பமேளாவில் கலந்து கொள்ள சென்றிருக்கும் நித்யானந்தாவை, டெல்லியைச் சேர்ந்த எழுத்தாளர் விஜய மல்கோத்ரா சந்தித்து பேட்டி கண்டார்.

    அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- பெங்களூரில் உள்ள ஆசிரம கட்டிடம் இருக்குமிடம் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதா?

    பதில்:- வள்ளல் பரம்பரையைச் சேர்ந்த பிரதாப் ராவ், ஜீவன்ராவ், கேசவ் ராவ் ஆகிய 3 சகோதரர்கள் ஆசிரமத்துக்கு நன்கொடையாக வழங்கிய இடம் அது. 2003-ம் ஆண்டு ஆசிரமத்தின் மீது கொண்ட பற்று காரணமாக இந்த இடத்தை வழங்கினார்கள். இதற்கான பத்திர பதிவுகள் அனைத்தும் சட்ட ரீதியாக செய்யப்பட்டுள்ளன.

    கேள்வி:- உங்கள் சொத்து தொடர்பான எல்லா விவரங்களையும் வெப்சைட்டில் வெளியிடுவீர்களா?

    பதில்:- நிச்சயமாக அனைத்து விவரங்களையும் வெளியிடுவேன்.

    கேள்வி:- ஆசிரமத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் மர்மமாக இறந்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளதே?

    பதில்:- கனடா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தவறி விழுந்தார். அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே இறந்து விட்டார். பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கேள்வி:- உங்கள் மீது தமிழக போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளார்களே?

    பதில்:- எனக்கு எதிராக கிளப்பப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று. அதில் எள் அளவும் உண்மை இல்லை.

    எந்தப் பெண்ணும் என்னால் பாதிக்கப்பட்டதாக இதுவரை புகார் சொல்லவில்லை.

    கேள்வி:- உங்கள் ஆசிரமத்தில் இளம் சிறுவர்களை அடைத்து வைத்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளதே?

    பதில்:- எனது ஆசிரமத்தில் தங்கி உள்ள அனைவரும் அவர்களுடைய விருப்பப்படிதான் தங்கி இருக்கிறார்கள். கட்டாயப்படுத்தி யாரும் தங்க வைக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் ஆசிரமத்துக்கு வந்து விசாரிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

  • போதை கடத்தல் புள்ளி துபாயில் திடீர் கைது

    சர்வதேச போலீசான, 'இன்டர்போல்' அமைப்பால் தேடப்படும் இந்தியாவைச் சேர்ந்தவர், துபாயில் கைது செய்யப்பட்டார். இந்தியாவைச் சேர்ந்தவர் குலாம் ஹைதர் தாவூத் மதியா. போதை மருந்து கடத்தலில் உலகப் பிரசித்தி பெற்ற 10 பேரில் ஒருவர் இக்பால் மிர்ச்சி; இவரும் இந்தியாவைச் சேர்ந்தவர் தான். இந்த இருவரும் கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டதாக இந்திய அரசால் தேடப்பட்டு வருபவர்கள்.

    பின் குலாமைத் தேடி, இன்டர்போல் போலீசார் வாரன்ட் பிறப்பித்தனர். 1997ல் கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள மலாவியில் குலாம் கைது செய்யப்பட்டார். பின் ஜாமீனில் வெளியே வந்த அவர், பாகிஸ்தானுக்கு தப்பித்து சென்றார். பாகிஸ்தானில் பாஸ்போர்ட் பெற்று துபாயில், 'எமிரேட்ஸ் ஹில்ஸ்' பகுதியில் தன் குடும்பத்துடன் குடியேறி பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவரை கடந்த மாதம் துபாயில் போலீசார் கைது செய்தனர். ஆனால், துபாயில் இவர் சட்டவிரோத காரியம் எதிலும் ஈடுபடவில்லை என்றும், துபாயில் அவர் ஒரு தொழிலில் ஈடுபட்டு வந்தார் என்றும், அங்குள்ள போலீசார் தெரிவித்துள்ளனர்.குலாம் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுவாரா என்பது குறித்து விவரம் தெரியவில்லை. ஐக்கிய அரபு நாடுகள் பிரதமரும் துணை அதிபருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், நேற்று டில்லிக்கு வந்த நேரத்தில் இச்சம்பவம் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பாராளுமன்றத்தில் பெண்கள் மசோதாவை நிறைவேற்ற அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை

    பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முலாயம்சிங்கின் சமாஜ்வாடி, லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. மேலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறது. இந்நிலையில் இன்று பாராளுமன்றம் கூடியபோது பிரணாப் முகர்ஜி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பாராளுமன்றத்தில் மகளிர் சட்ட மசோதாவை சமர்ப்பிக்கும் முன்பாக, சில உறுதிமொழிகளை அளிக்குமாறு கோரப்பட்டு உள்ளது. எனவே, மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி இந்த மசோதா மீது முழுமையான அளவில் விவாதம் நடத்தும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

    பொள்ளாச்சியில் சி.பி.ஐ., அதிகாரி போல் நடித்து தொழிலதிபரிடம் பணம் பறித்த பெண் கைது



    பொள்ளாச்சியில் சி.பி.ஐ., அதிகாரி போல் நடித்து, "ரியல் எஸ்டேட்' உரிமையாளரிடம் பணம் பறித்த, "டிப்-டாப்' பெண்ணை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள சீலக்காம்பட்டியைச் சேர்ந்தவர் நந்தகோபாலகிருஷ்ணன் (எ) தம்பு; பொள்ளாச்சி சுற்றுப் பகுதிகளில், "ரியல் எஸ்டேட்' தொழில் செய்து வருகிறார். பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவர், தம்புவுக்கு போன் செய்து சி.பி.ஐ., பெண் அதிகாரி ஒருவர் பொள்ளாச்சி வந்திருப்பதாகவும், தம்புவை பற்றி விசாரித்ததாகவும் கூறியுள்ளார்.அதேபோன்று, தம்புவுக்கு நேற்று முன்தினம் புதிய எண்ணில் இருந்து போன் வந்துள்ளது. போனில் பேசிய பெண் தன்னை, சி.பி.ஐ., அதிகாரி சூர்யகலா என்று அறிமுகம் செய்து, "ரியல் எஸ்டேட் வியாபாரத்திற்கு எப்படி பணம் வந்தது, எப்படி சொந்தமாக கார் வாங்கினாய், வருமானவரி முறையாக செலுத்தியுள்ளாயா' என்று சரமாரியாக கேள்வி கேட்டு விசாரித்துள்ளார்.

    மறுபடியும் மாலையில் போன் செய்து, பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் திப்பம்பட்டி அருகே நிற்பதாகவும், நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்றும், வெள்ளை நிற டீ சர்ட்டும், நீல நிற ஜீன்ஸ் பேன்ட் அணிந்திருப்பதாகவும் அடையாளம் கூறினார்.அதன்படி, மாலை 6.00 மணிக்கு திப்பம்பட்டிக்கு சென்று ரோட்டோரத்தில் தனியாக காத்திருந்த, சி.பி.ஐ., அதிகாரி சூர்யகலாவை சந்தித்தார்.

    "செய்யும் தொழிலுக்கு முறையாக வருமான வரி செலுத்தவில்லை, அதை கண்டுகொள்ளாமல் இருக்க, 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்; இல்லாவிட்டால், வீட்டில், சி.பி.ஐ., ரெய்டு நடத்தும்' என, "டிப்-டாப்' பெண்மணி மிரட்டியுள்ளார்.அவரது பேச்சு தோரணையை பார்த்து நிஜ அதிகாரி என்று நம்பிய தம்பு, பாக்கெட்டில் இருந்த, 10 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். மீண்டும் போன் செய்யும் போது மீதிப்பணத்தை கொடுக்க வேண்டும் என்று சூர்யகலா எச்சரித்துள்ளார்.

    "டிப்-டாப்' பெண்ணுடன் தம்பு பேசிக்கொண்டிருப்பதை பார்த்த திப்பம்பட்டியைச் சேர்ந்தவர்கள், "அந்த அம்மாவை உங்களுக்கு தெரியுமா? திப்பம்பட்டி ரேஷன் கடையில் கடந்த இரண்டு நாட்களாக அந்த அம்மா விசாரணை செய்து வருகிறார். கோவையில் இருந்து வந்திருக்கும் சிவில் சப்ளை அதிகாரி எனக் கூறி, ரேஷன் கடை பணியாளர்களை மிரட்டி, பொருட்கள் வாங்குபவர்களிடமும் விசாரித்து வருகிறார்' என்று கூறியுள்ளனர்.இதனால் சந்தேகமடைந்த அவர் அந்த பெண்ணை உடனடியாக விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல் கொடுத்ததால், கோமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காயத்திரி தலைமையில் போலீசார் திப்பம்பட்டி வந்ததும், சூர்யகலாவை ஒப்படைத்தனர். பொள்ளாச்சி டி.எஸ்.பி., ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் காயத்திரி ஆகியோரின் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:மைசூரைச் சேர்ந்த சூர்யகலாவுக்கு 13 வயதில் திருமணமாகியுள்ளது. கருவுற்ற ஏழு மாதத்தில் கருக்கலைந்து விட்ட நிலையில், கணவனும் கைவிட்டுள்ளார். பெற்றோருடன் கோவை தொண்டாமுத்தூர் அருகேயுள்ள வேடப்பட்டி குரும்பபாளையத்திற்கு குடிவந்து விட்டனர்.தபாலில் பி.எல்., படித்துள்ள சூர்யகலா, பொதுப்பிரச்னைகள், தனிப்பட்ட பிரச்னைகளில் தலையிட்டு பேச்சு நடத்துவது, உயர் அதிகாரிகளிடம் அவர்களை அழைத்துச் சென்று அறிமுகம் செய்து பேசுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

    ஒருசில பிரச்னைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்ததால் பணம் கிடைத்துள்ளது. உடல் உழைப்பின்றி எளிதாக பணம் கிடைத்ததால், போலீஸ் போன்று நடித்து பணம் பறிக்க துவங்கியுள்ளார். ஆங்கிலத்தில் பேசும் திறமையை பயன்படுத்தி தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்வி நிறுவன உரிமையாளர்களுக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்து பணம் பறித்துள்ளார்.போலீஸ் அதிகாரி போன்று நடித்து பணம் பறித்ததாக, கோவை சிறுமுகை, பேரூர் போலீஸ் ஸ்டேஷன்களில் சூர்யகலா மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன. இந்நிலையில், பொள்ளாச்சியில், சி.பி.ஐ., அதிகாரி போன்று நடித்து பணம் பறித்துள்ளார்.ஒவ்வொரு இடத்திலும் பெயரை மாற்றி கூறியுள்ளார். கீதா, ராஜேஸ்வரி, சூர்யகலா என்ற பெயர்களில் ஆள் மாறாட்டம் செய்து, அரசு ஊழியர் போன்று நடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சி.பி.ஐ., அதிகாரியாக நடித்த சூர்யகலாவுக்கு, பெற்றோர் நடராஜ் - சத்யா மற்றும் இரண்டு தங்கைகள் உள்ளனர். குடும்பத்தை நிர்வாகம் செய்வது சூர்யகலா தான். அவர், 15வது வயதில் இருந்து, அரசு அதிகாரிகள் போன்று நடித்துள்ளார்.தனிப்பட்ட பிரச்னைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்ய செல்லும் போது, முக்கிய பிரமுகர்களின் போட்டோக்களை சேகரித்து வைத்துள்ளார். அவரிடம் இருந்த மொபைல்போனில் அனைத்து அதிகாரிகளின் மொபைல்போன் எண்களும், அரசியல்வாதிகள், கல்வி நிறுவன உரிமையாளர்களின் போட்டோக்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.



    நேற்றைய செய்திகள்

    Bookmark and Share
  • Read More     Comments (33)