எங்களைப் பற்றி சாட்டிங் கனவுத் தொழிற்சாலை e-புத்தகம்

 
 
 
 
 
Welcome to South Indian Crime Point

இன்றைய முக்கிய செய்திகள் (19-04-2017) காலை, IST-07.00 PM மணி, நிலவரப்படி,

South Indian Crime Point as your Homepage

SOUTH INDIAN CRIME POINT Follows.... Please Click the Buttons

Youtube Link

South Indian Crime Point

South Indian Crime Point Update

South Indian Crime Point Politics

South Indian Crime Point Devotional

South Indian Crime Point Controversy

South Indian Crime Point Accident

South Indian Crime Point Channel Web TV


அ.தி.மு.க. அணிகள் இணைப்பு
ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை
எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முடிவு

சென்னை, புதன், ஏப்ரல் 19, 2017, சித்திரை 6, ஹேவிளம்பி வருடம்

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முயற்சி ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முடிவு செய்யபட்டு உள்ளது.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரையுடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சந்தித்து அ.தி.மு.க. ஒற்று மையாக இருக்க வேண்டுமானால் சசிகலா, தினகரன் குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தம்பித்துரை சந்தித்துப் பேசி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தினகரனை சந்தித்து பேசினார்கள். இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், வெற்றிவேல் எம்.எல்.ஏ., கலைராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பின்னர் செங்கோட்டை யன் நிருபர்களிடம் கூறுகையில், “அ.தி.மு.க. இணைப்பு முயற்சிக்கு தினகரன் வரவேற்பு தெரிவித்ததாக கூறினார். மற்ற நிபந்தனைகள் பற்றி பதில் சொல்ல மறுத்து விட்டார்.

ஆனால் வெற்றிவேல் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், “அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்காக சசிகலா, தினகரன் குடும்பத்தை விலக்கி வைக்க வேண்டும் என்ற நிபந் தனையை தினகரன் ஏற்க மறுத்து விட்டார் என்றும் ஓ.பன்னீர்செல்வம் முதல்- அமைச்சர் மற்றும் 6 முக்கிய அமைச்சர் பதவி கேட்டு நிபந்தனை விதித்து இருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

அதன் பிறகு நேற்று மாலை யில் தலைமைச் செயலகத்தில் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், அமைச்சர் செங்கோட்டையன் அறையில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் அடையாறில் உள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இல்லத்தில் சந்தித்தும் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த கூட்டத்துக்குப் பின் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்காக கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரம் செலுத்துவதில் இருந்து டி.டி.வி.தினகரன் குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டதாகவும் இதுதான் ஒட்டு மொத்த தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் விருப்பம் என்றும் தெரிவித்தார்.அமைச்சர்கள் கூட்டத் தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு அ.தி.மு.க. நிர்வாகி கள், தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் விடுத்த முக்கிய கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

இன்று காலை அவர் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அவைத் தலைவர் மதுசூதனன், மைத்ரேயன் செம்மலை, பொன்னுசாமி, விஸ்வநாதன்,பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், செம்மலை, மாபா.பாண்டியராஜன், கே.சி. பழனிச்சாமி, ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சி பெயரை மீட்பதற்காக அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டதுடன் தாங்கள் விதித்த நிபந்தனைகள் தொடர்பாக அமைச்சர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

இதற்கிடையே இன்று காலையில் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர் செல்வம் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு குழு அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

முக்கிய நிபந்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டு இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், எடப்பாடி பழனிசாமி அணியினரும் சந்தித்து பேசும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இதற்காக ஓ.பி.எஸ். அணி சார்பில் ஒரு குழு அமைக்கப்படுகிறது.இன்று மாலையில் இரு அணியினரும் சந்தித்து பேசு வார்கள் என்று அ.தி.மு.க. தலைமை கழக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இது போல் எடப்பாடி பழனிசாமி அணி சார்பிலும் ஒரு குழு அமைகப்படுகிறது . இரண்டு தரப்பினரும் சந்தித்து பேச உள்ளனர்.

இதில் கட்சியையும், ஆட்சியையும் எவ்வாறு வழி நடத்திச் செல்வது என்று ஆலோசிக்கப்படுகிறது. கட்சியை வழி நடத்திச் செல்ல இரு அணியினரும் அடங்கிய நிர்வாக குழு அமைப்பது குறித்தும் பேச்சு நடத்துகிறார்கள். ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பும் நடக்கும் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அ.தி.மு.க. அணிகள் இணைப்பு இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாகவும், விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினகரனுக்கு 9 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே ஆதரவு

சென்னை, புதன், ஏப்ரல் 19, 2017, சித்திரை 6, ஹேவிளம்பி வருடம்

அ.தி.மு.க., வின் இரு அணிகளையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை துவங்கி நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த அமைச்சரவையும் தினகரன் குடும்பத்தை ஒதுக்கி விட முடிவு செய்து விட்டது.

9 பேர் மட்டுமே..

இந்நிலையில், கட்சியின் அதிகார மையம் என கருதப்படும் தினகரன் பக்கம் எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் செல்ல உள்ளனர் என்பது முழுமையாக தெரியவில்லை. இதுவரை சுப்பிரமணி (சாத்துார்), வெற்றிவேல் (பெரம்பூர்), தங்கதமிழ்ச்செல்வன் (ஆண்டிபட்டி), கதிர்காமு (பெரியகுளம்), ஜக்கையன் (கம்பம்), செல்வமோகன் தாஸ்(தென்காசி), ஏழுமலை(பூந்தமல்லி), சின்னத்தம்பி(ஆத்தூர்) மற்றும் கருணாஸ்(திருவாடனை) ஆகிய 9 பேர் மட்டுமே தினகரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் டில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரமும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இவர்கள் தவிர உடுமலை ராதாகிருஷ்ணன் (உடுமலை), செங்கோட்டையன் (கோபி), பொள்ளாச்சி ஜெயராமன் (பொள்ளாச்சி), சாந்திராமன் (குன்னூர்), கனகராஜ் (சூலூர்) பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி) இவர்களும் டி.டி.வி., தினகரனுக்கு இன்று ஆதரவு தெரவிக்கலாம் என தெரிகிறது.

தினகரனே காரணம்

அமைச்சர்களின் ஆலோசனைக்குப் பின், அமைச்சர் சண்முகம் கூறும்போது, ‛கட்சியில் கெட்டபெயருக்கு தினகரன் குடும்பமே காரணம். தினகரன் குடும்பத்தினருடன் தொடர்பை முழுமையாக துண்டிக்க வேண்டும்' என்றார்.

ஓபிஎஸ் உடன் பேச்சு எப்போது?

சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் அகற்றப்பட வேண்டும் என்று கூறினார் ஓ.பி.எஸ்., அவருடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்னும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை. எப்போது ஆரம்பிப்பார்கள் என்ற தகவலும் இல்லை.

அமைச்சர்களுக்கு ஏதோ பயம்: தினகரன்

சென்னை, புதன், ஏப்ரல் 19, 2017, சித்திரை 6, ஹேவிளம்பி வருடம்

அமைச்சர்கள் திடீர் முடிவெடுத்ததன் பின்னணியில் ஏதோ பயம் உள்ளதாகவும், இதற்கான காரணம் குறித்து தெரியவில்லை என தினகரன் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

அவசர கதி

போட்டி கூட்டம் என்பதெல்லாம் கிடையாது. சிலர் உணர்ச்சிவசப்பட்டு பேசினர். அதுபோல் நான் பேச விரும்பவில்லை. 1.5 கோடி தொண்டர்கள் சேர்ந்தது தான் இயக்கம். தொண்டர்களாலும், ஜெயலலிதாவின் ஆசியினாலும் ஆட்சி, கட்சி நடக்கிறது. ஏதோ சிலர் தங்களுக்கு உள்ள பயத்தால், என்னையும், எனது குடும்பத்தையும் ஒதுக்க முடிவு செய்தனர். அது பற்றி கவலையில்லை. அவசர கதியில் அறிவித்துள்ளனர். அவர்களுக்கு ஏதோ பயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை.14ம் தேதி வரை என்னை சந்தித்தவர்கள் திடீரென இந்த முடிவு எடுத்துள்ளனர். சில எம்எல்ஏக்கள் என்னிடம் தங்களது கவலை தெரிவித்துள்ளனர்.அனைத்து எம்எல்ஏ.,க்களையும் வர சொன்னேன்.சில காரணத்தினால் நண்பர்கள் என்னை வேண்டாம் எனகூறுவதற்கு, பயமும், சில உறுத்தலும் காரணமாக உள்ளது.கட்சி, ஆட்சியை பலவீனபடுத்த காரணமாக இருக்க மாட்டேன்.

தெரியாது

எந்த ஒரு காரணத்திற்காகவும் அதிமுக பிளவுபடக்கூடாது.எனது பலத்தை காட்டி கட்சி ஆட்சியை பலவீனப்படுத்த விரும்பவில்லை. அமைச்சர்கள் திடீர் முடிவெடுக்க ஏதோ பயம் உள்ளது. எதற்காக அமைச்சர்கள் பயப்படுகிறார்கள் என தெரியவில்லை.அமைச்சர்கள் கூட்டம் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்என்னிடம் பேசிய செங்கோட்டையன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் எதையும் கூறவில்லை.பொது செயலாளர் கொடுத்த பதவியில் இருந்து நான் எதற்கு ராஜினாமா செய்ய மாட்டேன்.என்னை அழைத்திருந்தால், அமைச்சர்கள் கூட்டத்திற்கு நானும் சென்றிருப்பேன்.எல்லாரும் சேர்ந்து ஒதுக்கியதாக கூறினர். நேற்றே நான் ஒதுங்கிவிட்டேன்.ஒதுங்குமாறு செங்கோட்டையன் என்னிடம் கூறியிருந்தால் நானே ஒதுங்குவதாக கூறியிருப்பேன்.

பயமில்லை

கட்சி பதவி கொடுத்தது பொது செயலாளர் தான். அவரிடம் கேட்டுதான் முடிவு செய்வேன். எனது சகோதரர்களுடன் சண்டை போட விரும்பவில்லை. என் மீதான அதிருப்திக்கு என்ன காரணம் என எனக்கு தெரியவல்லை. பயத்தின் காரணமாக அதிமுகவில் இருந்து ஒதுங்க முடிவெடுக்கவில்லை. பயம் இல்லாத காரணத்தினால் தான் டில்லி போலீசார் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமின் பெறவில்லை.எனக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத காரணத்தினால் ஏமாற்றம் ஏற்படவில்லை. அமைச்சர்கள் பயத்தாலும், அதிருப்தியாலும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு கட்சிக்கு பாதகமாக இருக்கக்கூடாது.

சசியை சந்திப்பேன்

ஆட்சிக்கும் கட்சிக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என உறுதியாக உள்ளேன். அதிமுகவின் அழிவில் நேரடியாக பயன் அடையப்போவது திமுக தான் . பயப்படாமல் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தி செல்ல வேண்டும்.கோர்ட் விசாரணைக்கு பின்னர் சசியை சந்தித்து பேச உள்ளேன். சசி தனது பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை. நான் கட்சியில் இருப்பதால் தான் பிரச்னை என்று அமைச்சர்கள் கருதியிருக்கலாம். கட்சி இணைவதை நான்வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தினகரன் குடும்பம் ஒதுக்கிவைப்பு: ஜெயக்குமார் அதிரடி

சென்னை, புதன், ஏப்ரல் 19, 2017, சித்திரை 6, ஹேவிளம்பி வருடம்

கட்சியிலிருந்து சசி குடும்பத்தினரை முழுமையாக ஒதுக்கி வைக்க அமைச்சர்கள் முடிவு

சென்னை: தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சசி குடும்பத்தினை கட்சியை விட்டு முழுமையாக நீக்கிவிட்டு ஆட்சியை காப்பாற்ற அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அ.தி.மு.க., அணிகளை இணைப்பதற்கான பேச்சு துவங்கி உள்ளது. தினகரனை ஓரங்கட்டி விட்டு, இரு தரப்பும் இணைவதற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பச்சைக்கொடி காட்டியிருந்தார். அதற்கு, சசிகலா அணியைச் சேர்ந்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சசிகலா குடும்பத்திற்கு எதிராக, அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். சசிகலா மற்றும் தினகரனை, கட்சியில் இருந்து விலகிக் கொள்ளும்படி கூறி வலியுறுத்தி வந்தனர். அவ்வாறு . விலகாவிட்டால், அவர்களை விலக்கி வைப்பது குறித்து, முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆலோசித்து வந்தனர்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் ஜெயக்குமார் அளித்தபேட்டி.

* கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தினரின் ஆதிக்கம் இருக்க கூடாது.

* தினகரன், சசி ஆகியோரை கட்சியில் இருந்து முழுமையாக நீக்கவிட்டு கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும்.

* ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் நாங்கள் தயாராக உள்ளோம்.

* ஒற்றுமையாக செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம்.

* இனி கட்சியிலும், ஆட்சியிலும் தினகரன், சசி ஆகியோரின் தலையீடு எள்ளளவும் இருக்காது, இருக்கவும் கூடாது.

* தினகரன் குடும்பத்திற்கு இனி கட்சியில் இடம் இருக்காது.

* தொண்டர்களின் விருப்படி ஆட்சி அமையும். கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சியை வழி நடத்த குழு அமைக்கப்படும். இவ்வாறு ஜெயக்குமார் பேட்டியளித்தார்.

* எம்.எல்.ஏ.,க்கள் சுப்பிரமணி மற்றும் வெற்றிவேல் தினகரனுக்கு ஆதரவளிப்பதாக அவர்கள் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

* எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் தினகரன் பக்கம் செல்கிறார்கள் என்பது குறித்து நாளை(ஏப்-20) முழுமையாக தெரியவரும் எனத்தெரிகிறது.

நேற்றைய செய்திகள்

© 2017
All Rights Reserved
* இந்த "சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட்" இணையத்தளத்திலுள்ள அனைத்து ஆக்கங்களும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன.
* மறுபதிப்பு செய்ய விரும்பின் www.southindiancrimepoint.com இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
News and Advertisement Please Contact:
SOUTH INDIAN CRIME POINT
Investigation Weekly Tamil Magazine
POST BOX 137
AMBATTUR,
CHENNAI-600 053
Tamil Nadu
India
Yuganesan,

+91-9043000355
+91-7200557999
+91-9444264100
+91-9841523276

No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "SOUTH INDIAN CRIME POINT"- Weekly Magazine
send your comments

சந்தா விபரம் விளம்பரம் செய்ய