அண்மைச் செய்திகள் ஹாட் நியூஸ் அரசியல் நம்மைச் சுற்றி சம்பவங்கள் புலனாய்வு ரிப்போர்ட் திரை(மறைவு)ச் செய்தி பிரபல கொலைகள் கனவு தொழிற்சாலை சிறப்பு பக்கம்
About Us Breaking News Hot News Politics Incident Investigation Ceni (Hide) News Models Special Focus The dream factory

   

Welcome to South Indian Crime Point

South Indian Crime Point as your Homepage

Retta Vaalu Movie Review

ரெட்ட வாலு திரைவிமர்சனம்


நடிகர் : அகில் பாறூக்
நடிகை : சரண்யா நாக்
இயக்குனர் : தேசிகா
இசை : செல்வகணேஷ்.வி
ஓளிப்பதிவு : பானு முருகன்

ரெட்ட வாலு :சிம்பு, ஹன்சிகா நடிக்கும் புதிய படத்துக்கு ‘வாலு’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தம்பி ராமையாவிடம் உதவியாளராக பணியாற்றிய தேசிகா என்பவர் இயக்கும் படத்துக்கும் ‘வாலு’ என பெயரிடப்பட்டது. மாதக்கணக்கில் நிலவிவந்த இந்த பெயர் குழப்பத்துக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. தேசிகா தனது படத்துக்கு ‘ரெட்ட வாலு’ என்று பெயர் மாற்றிக் கொண்டதன் மூலம் சிக்கல் தீர்ந்தது. படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:

படத்தில் ஹீரோ அகில், ஹீரோயின் சரண்யா இருவரும் குறும்புத்தனமும், அரட்டையும் நிறைந்த வாலுத்தனமான கதாபாத்திரங்கள் ஏற்றுள்ளனர். இதனால் ரெட்ட வாலு என்று பெயர் மாற்றப்பட்டது. எதிர்காலத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்ற லட்சியம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். சிலரால் மட்டுமே அதை சாதிக்க முடிகிறது. பலருக்கு அது பகல் கனவாகவே இருக்கிறது. இதற்கு காரணம் என்ன, தீர்வு உண்டா என்பதற்கு படம் பதில் சொல்லும். தம்பி ராமையா, கோவை சரளா, ‘பசங்க’ சிவகுமார், செந்தி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். வைரமுத்து பாடல்களுக்கு செல்வ கணேஷ் இசை. ஜெய இளவரசன் தயாரிக்கிறார்.

தமிழ் சினிமாவில் இரண்டு கோஷ்டிகள் உண்டு. கோடம்பாக்கம் மற்றும் ஆழ்வார்பேட்டை. கோடம்பாக்கம் என்றால் தென்னக கிராமத்திலிருந்து மஞ்சப்பையுடன் சினிமா கனவுடன் ரயிலோ லா‌ரியோ ஏறியவர்கள். ஆழ்வார்பேட்டை என்றால் கொஞ்சம் இன்டலெக்சுவல் டைப். கமல், மணிரத்னம் போன்றவர்களின் அலுவலகங்கள் ஆழ்வார்பேட்டையில் இருப்பதால் வந்த பெயர் இது. சினிமாவுக்கு இன்டெலக்சுவல் எவ்வளவு தேவையோ அதைவிட அதிகமாக ஆத்மார்தம் தேவை.

ஓகே. இந்த சின்ன அறிமுகம் தமிழ் சினிமாவின் இரண்டு போக்குகளை தெ‌ரியப்படுத்துவதற்காக மட்டுமே. தேசிகா இயக்கியிருக்கும் ரெட்ட வாலு படத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அகில், சரண்யா நடித்திருக்கும் இந்தப் படத்தைப் பார்த்தால் கிராமத்துப் படம் போல தெ‌ரிகிறது. ஆனால் இது ஆழ்வார்பேட்டையில் நடந்த உண்மைச் சம்பவம் என்கிறார் தேசிகா.

எனக்குத் தெ‌ரிந்த கதை, கதை மாந்தர்கள் என்பதால் செயற்கைத்தனம் இல்லாமல் ஒவ்வொருவரும் இயல்பாக அந்த கேரக்டராகவே வாழும்படி படத்தை எடுத்திருக்கிறேன் என்றார் நம்பிக்கையுடன். உண்மை கதை நடந்த இடங்களில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறாராம்.

அப்பா மகளுக்கு இடையேயான பாசத்தை சொல்லும் இந்தப் படத்தில், தனது நடிப்பு தன்னையே கலங்கடித்துவிட்டதாக தம்பி ராமையா தெ‌ரிவித்திருக்கிறார்.

எங்களுக்கும் அதுதான் கொஞ்சம் உதறலாக இருக்கு.

சென்னையில் திருட்டு தொழில் செய்து வரும் நாயகன் அகிலை போலீஸ் தேடி வருகிறது. அவர்களுக்கு பயந்து திருவண்ணாமலை செல்லும் பஸ்ஸில் ஏறி தப்பித்து செல்கிறார்.

அந்த பஸ்ஸில் பயணம் செய்யும் ஜோஸ் மல்லூரி திடீரென்று மயங்கி விழுகிறார். அப்போது அகில் அவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றுகிறார். இதனால் அகில் மீது ஜோஸ் மல்லூரிக்கு நல்ல எண்ணம் வருகிறது.

அகில் அனாதை என்று அறிந்துகொள்ளும் மல்லூரி தன்னுடைய ஊருக்கு அவனை அழைத்துச் செல்கிறார். போலீசில் இருந்து தப்பிக்க இதுதான் சரியான வழி என்று ஜோஸ் மல்லூரியுடன் செல்கிறார் அகில்.

திருவண்ணாமலையில் தனது மனைவி கோவை சரளாவுடன் வாழும் மல்லூரிக்கு ஒரு பிரச்சினை. தனது மகளை வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்ட தம்பி ராமையா மீது கோபத்துடன் இருக்கிறார். நீண்ட நாட்களாக இருவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.

இந்நிலையில், ஜோஸ் மல்லூரியின் வீட்டுக்கு வந்திருக்கும் அகிலை, தம்பிராமையாவின் மகளான நாயகி சரண்யா நாக், பார்த்ததும் காதல் வயப்படுகிறார். அகிலையே சுற்றி சுற்றி வருகிறார். இது அகிலுக்கு பிடிக்கவில்லை.

ஒருகட்டத்தில் சரண்யாவை அகில் கண்டிக்கிறார். இதனால் கோபமடைந்த அவள் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவளை காப்பாற்றும் அகில், அவளுடைய காதலை ஏற்றுக் கொள்கிறார். ஒருநாள் இவர்களுடைய காதல் ஜோஸ் மல்லூரிக்கு தெரிய வருகிறது. அதனால் அகிலை ஊரை விட்டே அனுப்புகிறார்.

பேருந்தில் செல்லும் அகிலை தம்பி ராமையா பார்க்கிறார். ஜோஸ் மல்லூரிக்கு வெறுப்பை வரவழைக்க வேண்டும் என்பதற்காக அகிலை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வருகிறார். அகில் தன்னுடைய மகளைத்தான் காதலிக்கிறார் என்பது தம்பி ராமையாவுக்கு தெரியாமலேயே இருந்து வருகிறது.

ஒருநாள் அகில் தம்பி ராமையா வீட்டில் இருக்கிறான் என்பதை தெரிந்து கொண்ட போலீஸ் அவரது வீட்டில் வந்து அவனை தேடுகிறது. அகில் அங்கு இல்லாததால் அவனுக்கு அடைக்கலம் கொடுத்த தம்பி ராமையாவை ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு தம்பி ராமையா தனக்கு அகிலும் தொடர்பில்லை என்று போலீசிடம் எடுத்துச் சொல்கிறார்.

இதற்கிடையில், தான் ஒரு திருடனை காதலித்துவிட்டோம் என்று மிகுந்த மனவேதனையடைகிறாள் சரண்யா. அவளிடம் அகில் தான் எதற்காக திருடன் ஆனேன் என்பதை விளக்கிக் கூறுகிறார் அகில். இதைக் கேட்டதும் சமாதானமடைந்த சரண்யா, அவனுடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டு இருவரும் சென்னைக்கு தப்பித்து செல்கிறார்கள்.

சென்னைக்கு சென்ற அவர்களை போலீஸ் உதவியோடு தேடி கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் தம்பி ராமையா. இறுதியில் அவர்களை தேடிக் கண்டுபிடித்தாரா? அகிலும் சரண்யாவும் சந்தோஷமாக வாழ்ந்தார்களா? என்பதை பல்வேறு திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.

அகில் வழக்கம்போல் அப்பாவி பையன் போலே இந்த படத்திலும் வருகிறார். சரண்யா நாக் உடன் காதல் காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார். மற்றபடி ஒவ்வொரு காட்சிகளில் நடிப்பை வரவழைக்க ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.

காதல் படத்தில் நாயகியின் தோழியாக நடித்த சரண்யா நாக் இந்த படத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுத்திருக்கிறார். இவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்புகள் குறைவுதான் என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார்.

ஜோஸ் மல்லூரி, தம்பி ராமையா, கோவை சரளா ஆகியோர் தங்களது கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பிற்பாதியில் வரும் சோனா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். இவர் வரும் 15 நிமிட காட்சிகள் வெகுவாக ரசிக்க வைக்கிறது.

பெற்றோர் பேச்சை மதிக்காமல் பருவ வயதில் தவறான முடிவுகள் எடுக்கும் இளைஞர், இளைஞிகளுக்கு ஒரு பாடமாக படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் தேசிகா. படம் ஆரம்பம் முதலே சோகம் தொற்றிக்கொண்டதுபோல் திரைக்கதை மெதுவாக நகர்கிறது. பிற்பாதியும் அதேவேகத்தில் செல்வது ரசிக்க முடியவில்லை.

படத்திற்கு மிகப்பெரிய பலம் வசனம்தான். கிளைமாக்சில் தம்பி ராமையா பேசும் வசனம் பெற்றோர்களை அழவிட்ட பிள்ளைகளுக்கு பெரிய படிப்பினையாக இருக்கும்.

செல்வகணேஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை சுமார் ரகம்தான். சிட்டி பாபுவின் கேமரா கண்கள் காட்சிகளை தெளிவாக படமாக்கியிருக்கிறது.

மொத்தத்தில் ரெட்டவாலு வாலாட்டவில்லை.

நேற்றைய செய்திகள்

முகப்பு -Home

© 2014
All Rights Reserved
* இந்த "சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட்" இணையத்தளத்திலுள்ள அனைத்து ஆக்கங்களும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன.
* மறுபதிப்பு செய்ய விரும்பின் www.southindiancrimepoint.com இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
News and Advertisement Please Contact:
SOUTH INDIAN CRIME POINT
Investigation Weekly Tamil Magazine
POST BOX 137
AMBATTUR,
CHENNAI-600 053
Tamil Nadu
India
Yuganesan,

+91-9043000355
+91-9841005412
+91-9444264100
+91-7299140319
044-64541144,
+91-9841523276

Our Online & Printing Media Partner : Mr.Jainendra Chouraria,

No : 198, (Old No : 10) Rasappa Chetty Street,

Chennai - 600003
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "SOUTH INDIAN CRIME POINT"- Weekly Magazine
send your comments