அண்மைச் செய்திகள் ஹாட் நியூஸ் அரசியல் நம்மைச் சுற்றி சம்பவங்கள் புலனாய்வு ரிப்போர்ட் திரை(மறைவு)ச் செய்தி பிரபல கொலைகள் கனவு தொழிற்சாலை சிறப்பு பக்கம்
About Us Breaking News Hot News Politics Incident Investigation Ceni (Hide) News Models Special Focus The dream factory

   

Welcome to South Indian Crime Point

South Indian Crime Point as your Homepage

Aranmanai Movie Review

அரண்மனை

படம் : அரண்மனை
நடிகர் : வினய்
நடிகை : ஹன்சிகா மோத்வானி

இயக்குனர் :சுந்தர்.சி

தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்குப் பிறகு சுந்தர் சி இயக்கும் படம் அரண்மனை.

இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குவதுடன் அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார். மேலும் இன்னொரு கதாநாயகனாக வினய் நடிக்க, ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் மூன்று பேரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சரவணன், நிதின் சத்யா கோவை சரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், சந்தான பாரதி, ஆர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன், கிரேன் மனோகர், இயக்குனர் ராஜ்கபூர், வெள்ளை பாண்டி தேவர், சிவஷங்கர் மாஸ்டர், சீர்காழி சிவசிதம்பரம், பாடகர் மாணிக்கவிநாயகர் என ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்திருக்கிறது.

“இது என்னுடைய வழக்கமான படமில்லை. திகில் சஸ்பென்ஸ் கலந்த ஹர்ரர் மூவி…” என்கிறார் சுந்தர் சி. இந்தப் படத்தில் முக்கியமாக இடம் பெறும் அரண்மனைக்காக பல இடங்களில் தேடியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைத்த மாதிரி அரண்மனை எங்கு தேடியும் அமையவில்லையாம். மேலும் தேடினால் சரிபட்டு வராது என்பதை உணர்ந்த சுந்தர்.சி ஐதராபாத்தில் அரண்மனை போன்ற மிகப் பிரம்மாண்டமான செட்டை அமைத்து, முழுக்க முழுக்க அந்த செட்டில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.

மிகப் பிரமாண்டமான இந்த அரண்மனையை கோடி ரூபாய் செலவில் 400 ஊழியர்கள் 3 மாத காலம் இரவு, பகலாக உழைத்து உருவாக்கியுள்ளனர். பரத்வாஜ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். சுந்தர்.சியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான யு.கே.செந்தில்குமார் தான் ஒளிப்பதிவு செய்கிறார். தனது வழக்கமான காமெடி பாணியிலிருந்து விலகி இதனை ஒரு த்ரில்லார் படமாக இயக்குகிறார் சுந்தர்.சி.

அரண்மனை படத்தில் தான் சம்பந்தப் பட்டுள்ள காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன என்று வந்துள்ள செய்திகளை நடிகை ராய் லக்ஷ்மி மறுத்துள்ளார். மேலும், அவருக்கும் இயக்குனர் சுந்தர்.சி.க்கும் பனிப்போர் நிலவுவதாகவும் வெளியாகியுள்ளது வெறும் வதந்திதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ள அவர், தான் முழுவதும் அந்தப் படத்தைப் பார்த்ததாகவும், தான் நடித்துக் கொடுத்த எந்தக் காட்சியும் வெட்டப்படவில்லை என்றும், தனக்கும் சுந்தர்.சி.க்கும் எந்தவிதக் கருத்துமோதலும் தகராறும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படம் அழகாக வெளிவந்துவிட்டது, இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் ஒட்டுமொத்தக் குழுவுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதகாவும் அவர் கூறியுள்ளார்.

இதுநாள் வரை காமெடி ஹிட் படங்களை இயக்கி வந்த சுந்தர் சி., முதன்முதலாக இயக்கி இருக்கும் கமர்ஷியல் பேய் படம்தான் அரண்மனை. சந்திரமுகி, அருந்ததி, காஞ்சனா, யாமிருக்க பயமேன் பட வரிசையில் அரண்மனையும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கப் போவது நிச்சயம்!

கதைப்படி, ஊருக்கு ஒதுக்குப்புறமாக பாழடைந்து கிடக்கும் ஜமீனின் அரண்மனையை விற்க ஏற்பாடு செய்கிறார் அதன் பொறுப்பாளர் அய்யனார் - சரவணன். அதற்காக சமையல்காரருடன் ஓடிப்போன, கோவை சரளா உள்ளிட்ட ஜமீன் குடும்பத்து வாரிசுகள் எல்லாம் தங்கள் பிள்ளை குட்டிகளுடன் மராமத்து பணிபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட அரண்மனையில் வந்து தங்குகின்றனர். இதுநாள் வரை பாழடைந்து கிடந்த அந்த அரண்மனையில் அந்த ஜமீன் வீட்டு பையன் வினய்யை காதலித்து தன் ஆசை நிறைவேறாமல் சிலரது சுயலாபத்தால் அகால மரணமடைந்த ஹன்சிகாவின் ஆவியும் குடியிருக்கிறது.

அந்த ஆவி வீட்டை விற்க வந்த வினய்யின் ஆசை மனைவி ஆண்ட்ரியாவின் உடம்பிற்குள் புகுந்து கொண்டு, எவ்வாறு தன்னை திட்டமிட்டு கொன்றவர்களை பழிவாங்குகிறது? என்பதும் தன் ஆசை நாயகனை எவ்வாறு அடைய முனைகிறது என்பதும்தான் அரண்மனை படத்தின் மிரட்டலான கரு, கதை, களம் எல்லாம்!

பேய், பிசாசு கதையையும் பிரமாதமான காமெடி கலந்து கலகலப்பாக, கலர்ஃபுல்லாக, பேன்டஸியாக வழங்கி இருக்கும் சுந்தர். சி.,க்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப் சொல்லியே ஆக வேண்டும்.

வக்கீலாக ஆண்ட்ரியாவின் அண்ணனாக வரும் சுந்தர். சி., முரளியாக ஆண்ட்ரியாவின் ஆத்துக்காரராக ஹன்சிகாவின் காதலராக வரும் வினய்., ஜமீனின் வப்பாட்டி வீட்டு பேரனாக பிறந்து சொத்துக்காக அரண்மனையில் சமையல்காரராக ஐக்கியமாகி சளைக்காமல் சிரிப்பு சிக்ஸர்களை அள்ளி வீசும் சந்தானம் என மூன்று கதாநாயகர்கள் மூவருமே தத்தமது பாத்திரங்களில் பக்காவாக பொருந்தி பளிச்சென்று நடித்திருக்கின்றனர்.

சுந்தர்.சி., சந்திரமுகியில் டாக்டராக வரும் ரஜினிகாந்தை அடிக்கடி ஞாபகப்படுத்துவது அரண்மனையின் பலமா, பலவீனமா தெரியவில்லை! வினய், ஆண்ட்ரியாவின் ஹஸ்பெண்டாக அவரிடம் பெண்டு நிமிரும் காட்சிகளை காட்டிலும் ஹன்சிகாவுடனான கண்பார்வை காதல் காட்சிகளில் வெளுத்துக்கட்டியிருக்கிறார். இவர் இருவரை காட்டிலும், தானும் ஜமீனின் வாரிசு என்பதற்கு இருந்த ஒரே ஃபோட்டோ சாட்சியையும் காக்கா எச்சத்தில் இழந்து விட்டு அரண்மனையில் தன் அசிஸ்டெண்டுகளுடன் சமையல்காரராக சேர்ந்து லட்சுமிராயை ஒன்சைடாக டாவடிக்கும் சந்தானம் தான் ஹன்சிகா பேய்க்கு ஈக்குவலான படத்தின் பெரும்பலம்! முருங்கைக்காய் சாப்பிட்டாதான் முறுக்கேறும்பாங்க இங்க என்ன? முருங்கைக்காய்க்கே முறுக்கேறி கிடக்குது என்று கமெண்ட் அடிப்பதில் தொடங்கி, கோவை சரளாவை சைனா பொம்மை, கீ-கொடுத்த பர்மா பொம்மை... என்பது வரை வயிறு வலிக்க தான் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிக்க வைப்பதில் தியேட்டரே அதிர்கிறது. சந்தானத்தின் காமெடிகளில் தற்போதெல்லாம் டபுள் மீனிங் குறைந்து மெஸேஜ் மிளிர்வது வரவேற்கத்தக்கது.

ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் மூவரில் ஹன்சிகா நடிப்பிற்கும், ஆண்ட்ரியா நடிப்பு, இளமை துடிப்பு இரண்டிற்கும், லட்சுமி ராய் கிளாமருக்கும் பக்காவாக பயன்பட்டிருக்கின்றனர். கோவை சரளா, சரவணன், கோட்டா சீனிவாஸராவ், சந்தானபாரதி, நிதின் சத்யா, விச்சு, ராஜ்கபூர், சுவாமிநாதன், கணேஷ் கர், ஆர்த்தி, மறைந்த காதல் தண்டபாணி உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே படத்திற்கு பலம் கூட்டி பலே சொல்ல வைக்கின்றனர்.

யு.கே.செந்தில் குமாரின் மிரட்டலான ஒளிப்பதிவில், கார்த்திக் ராஜாவின் இசையில், பெட்ரோமாக்ஸ் லைட் தான் வேணுமா..., சொன்னது சொன்னது நீதானே... என தொடங்கி தொடரும் பாடல்கள் ஹிட் ரகம். பரத்வாஜின் பின்னணி இசை , ஸ்ரீகாந்தின் படத் தொகுப்பு, குருராஜின் ஆர்ட் டைரக்ஷனில் அந்த அரண்மனை செட் உள்ளிட்ட பிளஸ் பாயின்டுகள், சுந்தர்.சி.,யின் எழுத்து, இயக்கத்தில் அரண்மனையை தூக்கி நிறுத்தினாலும் அரண்மனையில் ஹன்சிகாவின் ஆவி, அவரைக் கொன்றவர்களை ஆண்ட்ரியாவின் உடம்புக்குள் புகுந்து பழிவாங்குவது ஓ.கே.. ஆனால் "பிறன்மனை" ( ஆண்ட்ரியாவின் வினய்யை) யை நோக்குவது... எந்த விதத்தில் நியாயம்?! எனும் கேள்வி எழுவதை இயக்குநர் உஷாராக தவிர்த்திருந்தார் என்றால்- அரண்மனை இன்னும் அழகாக, அம்சமாக பயமுறுத்தி இருக்கும்!

சந்திரமுகி, அருந்ததி, காஞ்சனா, யாமிருக்கபயமேன் எல்லாம் கலந்த பழைய அரண்மனை என்றாலும் சுந்தர்.சி. இயக்கத்தில புதிதாக ஜொலித்திருப்பதால் பாரக்கலாம்... ரசிக்கலாம்!

நேற்றைய செய்திகள்

முகப்பு -Home

© 2014
All Rights Reserved
* இந்த "சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட்" இணையத்தளத்திலுள்ள அனைத்து ஆக்கங்களும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன.
* மறுபதிப்பு செய்ய விரும்பின் www.southindiancrimepoint.com இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
News and Advertisement Please Contact:
SOUTH INDIAN CRIME POINT
Investigation Weekly Tamil Magazine
POST BOX 137
AMBATTUR,
CHENNAI-600 053
Tamil Nadu
India
Yuganesan,

+91-9043000355
+91-9841005412
+91-9444264100
+91-7299140319
044-64541144,
+91-9841523276

Our Online & Printing Media Partner : Mr.Jainendra Chouraria,

No : 198, (Old No : 10) Rasappa Chetty Street,

Chennai - 600003
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "SOUTH INDIAN CRIME POINT"- Weekly Magazine
send your comments