அண்மைச் செய்திகள் ஹாட் நியூஸ் அரசியல் நம்மைச் சுற்றி சம்பவங்கள் புலனாய்வு ரிப்போர்ட் திரை(மறைவு)ச் செய்தி பிரபல கொலைகள் கனவு தொழிற்சாலை சிறப்பு பக்கம்
About Us Breaking News Hot News Politics Incident Investigation Ceni (Hide) News Models Special Focus The dream factory

 

 

 
Welcome to South Indian Crime Point

சாட்டிங் (14-02-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

South Indian Crime Point as your Homepage

இதுவரை சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட், அரசியல், புலனாய்வு வார இதழில் (அச்சில்) மட்டும் வெளிவந்த சாட்டிங் பகுதி வாசகர்களின் வேண்டுகோளுக்கேற்ப இணையத்தில் வெளியிடப்படுகிறது.
- ஆசிரியர்

தமிழ்சினிமாவில் நாளுக்கு நாள் பெப்ஸி தொழிலாளர்களின் அராஜகம் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதில் உச்சமாக இன்று அவர்களில் சிலர் விழா நடக்கும் இடத்துக்கு வந்து பத்திரிகையாளர்களுக்கே கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்சினிமாவில் 20க்கும் மேற்பட்ட சங்கங்களை உள்ளடக்கிய அமைப்பு தான் பெப்ஸி. இந்த அமைப்பில் உள்ளவர்களைத் தவிர வேறு யாரையும் தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் படங்களில் பணிகளில் அமர்த்தக்கூடாது என்பது எழுதப்படாத சட்டம்.

ஆரம்பத்தில் ஒரு ஒற்றுமை உணர்வு வேண்டும், அதே நேரம் பணியாளர்களை தேடி அலையும் நேரமும் குறையும் என்பதால் தயாரிப்பாளர்கள் இந்த அமைப்பில் உள்ள தொழிலாளர்களை தாங்கள் தயாரிக்கும் படத்தில் வேலைக்கு அமர்த்தினார்கள். ஆனால் அதுவே காலப்போக்கில் அவர்கள் ஏகபோகம் செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டது. உள்ளூரில் படப்பிடிப்பு என்றால் ஒரு சம்பளம், வெளியூரில் படப்பிடிப்பு என்றால் ஒரு சம்பளம், ஞாயிற்றுக்கிழமை என்றால் டபுள் மடங்கு சம்பளம், அதுபோக ஏகப்பட்ட அலவன்ஸ்கள் என்று அவர்களின் ஏக போகம் அதிகரித்துக்கொண்டே போனது.

இதனால் அவ்வப்போது பெப்ஸி அமைப்பினருக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் மோதல் ஏற்பட்டது. மேலும் எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் எங்க சங்கத்தைச் சேர்ந்தவர்களைத் தான் வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்தம் செய்தனர்.

ஆனால் பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ளும் ஆடியோ பங்ஷன், பிரஸ்மீட் உள்ளிட்ட சினிமா நிகழ்ச்சிகளில் மட்டும் அவர்கள் தலையீடு இல்லாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் இன்று காலை சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் "ஆதியும் அந்தமும்" படத்தின் ஆடியோ பங்ஷன் நடந்து கொண்டிருந்தது.

விழா காலை 9 மணிக்கு என்பதால் வந்திருந்த பத்திரிகையாளர்களுக்கு காலை உணவை கேட்டரிங் ஆட்கள் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த பெப்ஸி அமைப்பைச் சேர்ந்த பாபு, சந்திரன் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு உணவு பரிமாறுபவர்களிடம் உடனே பரிமாறுவதை நிறுத்து, வகொண்டு வந்த உணவுகளையெல்லாம் வண்டியில் ஏற்று என்று சத்தம் போட்டனர்.

ஏன் அப்படி செய்ய வேண்டும் என்று கேட்டபோது எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் இந்த வேலையைச் செய்வார்கள். அதற்கு தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

ஆனால் இது பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி, இதில் எப்படி நீங்கள் தலையீடு செய்ய முடியும் என்று மூத்த பத்திரிகையாளர்கள் ஜெ.பிஸ்மி, மணவை பொன்மாணிக்கம், சங்கர், வி.கே. சுந்தர், ரவிஷங்கர் ஆகியோர் கேட்டனர். ஆனால் அவர்களை நீ யாரு எங்களை கேள்வி கேட்க..? என்று சத்தமாகக் கேட்டுவிட்டு அவர்களை தரக்குறைவாகவும் பேசிய பெப்ஸி உறுப்பினர்கள் "பிரசாத் லேப் தியேட்டரை விட்டு வெளியில வந்துடுவியா..?" என்று கொலை மிரட்டல் விடுத்தனர்.

ஆடியோ பங்ஷனில் பரபரப்பு ஏற்பட்டது. வந்திருந்த பெப்ஸி அமைப்பினர் ரெளடிகளைப் போல அராஜகம் செய்தனர்.

தியேட்டருக்கு வெளியே சத்தம் அதிகமானதையடுத்து கடுப்பான பத்திரிகையாளர்கள் அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர் அவர்களின் அராஜகத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ரவிஷங்கர் என்ற மூத்த பத்திரிகையாளரின் செல்போனையும் பிடுங்கி எறிய முற்பட்டனர். இதனால் கொந்தளித்த பத்திரிகையாளர்கள் பெப்ஸி அமைப்பின் செயலாளர் டி.சிவாவிடம் விபரத்தைச் சொல்லி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் படி எச்சரித்துள்ளனர். இல்லையெல்லாம் பெப்ஸி அமைப்பின் சார்பில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பத்திரிகையாளர்கள் வருவதில்லை என்று முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை நடந்த எந்த ஒரு பத்திரிகையாளர்களின் சந்திப்பிலும் பெப்ஸி அமைப்பினர் இந்தளவுக்கு அராஜகம் செய்யவில்லை என்றும், வந்திருந்தவர்கள் போதையில் தரக்குறைவாக நடந்து கொண்டனர் என்றும் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டினர்.

சில தினங்களுக்கு முன்பு தான் சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் தயாரிப்பாளர் பெப்ஸி தொழிலாளர்களின் அராஜகங்களைக் பட்டியலிட்டார். அதற்குள் அடுத்த அராஜக வேலையில் பெப்ஸி அமைப்பினர் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் அமீருக்கு புகார் செய்யப்பட்டுள்ளது. என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதைப் பொறுத்து பத்திரிகையாளர்களின் அடுத்த கட்ட நடவடிக்கௌ இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

பெப்ஸி தொழிலாளர்களின் இந்த அராஜகப் போக்குக்கு முடிவு கட்டுவாரா அமீர்?

© 2013
All Rights Reserved
* இந்த "சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட்" இணையத்தளத்திலுள்ள அனைத்து ஆக்கங்களும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன.
* மறுபதிப்பு செய்ய விரும்பின் www.southindiancrimepoint.com இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
News and Advertisement Please Contact:
SOUTH INDIAN CRIME POINT
Investigation Weekly Tamil Magazine
POST BOX 137
AMBATTUR,
CHENNAI-600 053
Tamil Nadu
India
Yuganesan,

+91-9043000355
+91-9841005412
+91-9444264100
+91-7299140319
044-64541144,
+91-9841523276

Our Online & Printing Media Partner : Mr.Jainendra Chouraria,

No : 198, (Old No : 10) Rasappa Chetty Street,

Chennai - 600003
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "SOUTH INDIAN CRIME POINT"- Weekly Magazine
send your comments

சந்தா விபரம் விளம்பரம் செய்ய