Welcome to South Indian Crime Point

இன்றைய (24-02-2010) அண்மை செய்திகள்

புதிதாக 117 ரயில்கள்; பயணிகள் வசதி பெருக்க ரூ 1, 302 கோடி ; ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்தார் மம்தா

வரும் மார்ச் மாதம் 31 ம் தேதிக்குள் 117 புதிய ரயில்கள் விடப்படும் என்றும், பயணிகள் வசதிக்காக ரூ. ஆயிரத்து 302 கோடி ஒதுக்கப்படுகிறது என்றும் , ரயில்வே அமைச்சர் தனது பட்ஜெட்டில் தெரிவித்தார். இன்று தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட் மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்டது என பட்ஜெ‌ட் தாக்கல் செய்ய பார்லி.,க்கு வந்த ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார். மத்தியில் இரண்டாவது முறையாக பதவியேற்ற ஐ.மு., கூட்டணி அரசில், ரயில்வே அமைச்சராக உள்ள மம்தா பானர்ஜி, இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்தார். ரயில்வே உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம்: அமைச்சர் மம்தா பானர்ஜி 2010 - 20111 ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்ய வந்தார். இவர் பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பாக பேசிய மம்தா கூறுகையில் : மக்கள் தொடர்பு சாதனம் அரசுக்கு மிக முக்கியமானது , ரயில்வே உள்கட்டமைப்பு வளர்ச்சி மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ரயில்வே தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. வர்த்தக ரீதியாக முன்னேற்றம் காண வேண்டிய நேரத்தில் இருக்கிறோம் என்றார். ரயில்வே துறை நுழைவுத்தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி, உருது மொழிகளிலும் நடத்தப்படும். மொபைல் இ டிக்கெட் சென்டர் : * புதிதாக 117 ரயில்கள் வரும் மார்ச் மாதம் 31 ம் தேதிக்குள் துவக்கி வைக்கப்படும். * ரயில்வே துறைக்கு 10 ஆயிரம் கோடியில் இருந்து 20 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படும்.* விளையாட்டு துறையை சேர்ந்தவர்களுக்கு உதவிகள் செய்யப்படும். * பயணிகள் வசதி பெருக்கிட ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்படுகிறது* ரயிலில் மளிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் *காமன்வெல்த் போட்டிக்குசிறப்பு ரயில்கள் * ரயில்வே துறை நுழைவுத்தேர்வு ஆங்கிலம், உருது, இந்தி மொழியிலும் நடத்தப்படும் * டபுள் டக்கர் ரயில் அறிமுகம்* சரக்கு கட்டணம் உயராது*ரயில்வே ஊழியர்களுக்கு புதி சலுகை திட்டங்கள்* மும்பையில் 101 புறநகர் ரயில்கள் விடப்படும்*80 ஆயிரம் புதிய வாகன்கள் வாங்கப்படும்*‌ ‌மொபைல் இ.டிக்கெட் சென்டர்கள் ஆஸ்பத்திரி, பல்கலை., வளாகம் கோர்ட், பகுதிகளில் செயல்படுத்தப்படும். சென்னையில் ஸ்போர்ட்ஸ் அகடமி: சென்னை, செகந்திரபாத், பெங்களூரு உள்ளிட்ட 5 விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.* ரயில்பெட்டிகள் வடிவமைப்பு மற்றும் சோதனை ஆய்வு மையம் பெங்களூரூவில் அமைக்கப்படும்.மண்எண்ணெய் மற்றும் தானிய பொருக்கு சரக்கு ரயிலில் கட்டணம் குறைக்கப்படும்*டபுள்டக்கர் ரயில் அறிமுகம்*மேலும் 10 தூரந்தோ ரயில்கள் அறிமுகம்*21 ரயில்களில் சேவை தூரத்தை அதிகரிக்க முடிவு*ஏ.சி., ரயில்களில் கட்டணச்சலுகை * 16 வழித்தடவங்களில் 16 சுற்றுலா ரயில்கள்* மதுரையில் இருந்து தூ‌த்துக்குடிக்கு புதிய ரயில் * ஆள்இல்லா ரயில்வே கேட் 13 ஆயிரம் கேட் ஆள் நியமிக்கப்படும்* சென்னை ஐ.சி.எப்., ரயில் பெட்டி தொழிற்சாலை நவீனமயமாக்கப்படும். * இன்னும் 10 ஆண்டுகளில் ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும்* அமரவாதி மகாராஷ்ட்டிராவில் வாகன் பழுது பார்க்கும் மையம் * மேற்குவங்கம் - வங்கதேசம் இணைக்கும் புதிய ரயில் * 93 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்* ரயில்வே பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் மதுரை- சென்னைக்கு புதிய ரயில்கள்: மதுரை டூ சென்னை, மதுரை டூ மும்பை, மதுரை டூ ஈரோடு, மதுரைடூ ஐதராபாத், * ராமேஸ்வரம்- தனுஷ்கோடிக்கு ரயில் விடப்படும்* திருச்செந்தூர் டூ மயிலாடுதுறை











நக்சலைட்டுகளுடன் பேச்சு வார்த்தை: மத்திய அரசுடன் டெலிபோன் எண்கள் பரிமாற்றம்

மத்திய அரசுடன் பேச்சு வார்த்தைக்கு சம்மதம் தெரிவித்து நக்சலைட்டுகள் 72 நாள் போர் நிறுத்தம் அறிவித்து உள்ளனர். பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமானால் நக்சலைட்டுகள் நிபந்தனை எதுவும் விதிக்க கூடாது. இதை ஏற்றுக் கொண்டால் மத்திய உள்துறைக்கு பேக்ஸ் செய்தி அனுப்ப வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நிபந்தனை விதித்து இருந்தார். இதையடுத்து பேச்சு வார்த்தைக்கு முன் தகவல்களை பரிமாறிக் கொள்ள நக்சலைட்டுகள் தங்கள் செல்போன் எண்ணை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளனர். மத்திய அரசு எந்த தகவலானாலும் இந்த போனில் தெரியப்படுத்தும் படி அதில் கூறியுள்ளனர். இதே போல் மத்திய அரசும் உள்துறை அமைச்சகத்தின் பேக்ஸ் நம்பரை கொடுத்துள்ளது.

எதிர்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிப்பால் லோக்சபாவில் அமளி

லோக்சபாவில் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர முன் வைத்த கோரிக்கையை சபாநாயகர் மீராகுமார் நிராகரித்தார். இதனால் எதிர்கடச்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடிய போது விலைவாசி உயர்வு குறித்த ஒரு சில எம்.பி., க்களுக்கு மட்டும் கேள்வி எழுப்ப சபாநாயகர் அனுமதித்தார்.











பென்னாகரம் இடைத்தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு

பென்னாகரம் தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் அடுத்த மாதம் மார்ச் 27-ந் தேதி நடக்கிறது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஆர். அன்பழகன் போட்டியிடுவார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆர்.அன்பழகன் தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருக்கிறார்.

ஆத்தூரில் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூரில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆத்தூரில் வஷிஷ்ட நதியின் குறுக்கே புறவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு மேற்குவங்கத்தை சேர்ந்தவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பாலம் கட்டும் பணி சீராக நடக்க நரபலி கொடுக்க முற்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே பொதுமக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரியும் , நரபலி கொடுக்க முயன்ற தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Bookmark and Share

Read More     Comments (33)