Welcome to South Indian Crime Point

டிசம்பர் மாதம் பத்தாம் நாள் ஹாட் நியூஸ்

ஹெட்லி பிடிபட்டது எப்படி?அமெரிக்க அதிகாரிகள் தகவல்

மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்த அமெரிக்க வாழ் பாகிஸ்தானியரான டேவிட் கோல்மேன் ஹெட்லி, விமான நிலைய அதிகாரிகளிடம் பொய்யான தகவலை கூறியதால் சிக்கிக் கொண்டான் என, சட்ட அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் கடந்த ஆண்டு நவம்பரில் தாஜ் ஓட்டல், விக்டோரியா ரயில் நிலையம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 166 பேர் கொல்லப் பட்டனர்.இத்தாக்குதலை நடத்த, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்தவன் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானிய வம்சாவழியைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹெட்லி.இவனையும், ராணா என்பவனையும் அமெரிக்க எப்.பி.ஐ., அதிகாரிகள் கடந்த அக்டோபரில் சிகாகோவில் கைது செய்தனர்.

ஹெட்லி மீது சிகாகோ கோர்ட்டில் 12 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.கடந்த ஆகஸ்ட்டில் வெளிநாடு சென்று திரும்பி வந்த ஹெட்லியிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரித்த போது, தான் ஒரு வர்த்தக நிறுவனத்தில் பணி புரிவதாகக் கூறியுள்ளான்.

ஆனால், அந்நிறுவனம் தொடர்பான எந்த ஆவணங்களும் ஹெட்லியிடம் இல்லை. அந்நிறுவனம் தொடர்பாக வரி கட்டும் பட்டியலிலும் ஹெட்லியின் பெயர் இல்லை. இதனால், அதிகாரிகளுக்கு ஹெட்லி மீது சந்தேகம் ஏற்பட்டது. அது முதல் கொண்டு ஹெட்லியின் நடவடிக்கையை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் கண்காணித்து கடந்த அக்டோபரில் கைது செய்துள்ளனர் என, சட்ட அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக வால் ஸ்ட்ரீட் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

  • வந்தவாசியில் ஒரே நாளில் ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்த் பிரசாரம்: இடைத்தேர்தல் சூடுபிடிக்கிறது

    வந்தவாசி (தனி) தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வந்த எஸ்.பி.ஜெயராமன் கடந்த நவம்பர் மாதம் 2-ந் தேதி புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து வந்தவாசி தொகுதியில் வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இதில் தி.மு.க. சார்பில் எஸ்.பி. ஜெயராமனின் மகன் ஜெ.கமலக்கண்ணன், அ.தி.மு.க. சார்பில் பி.முனுசாமி, தே.மு.தி.க. சார்பில் என்.ஜனார்த்தனன் உள்பட 14 பேர் போட்டியிடுகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகளை சேர்ந்தவர்கள் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

    இதில் தி.மு.க. சார்பில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அமைச்சர்கள் துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, வெள்ளக்கோயில் சாமிநாதன், தா.மோ.அன்பரசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.பி.பி.சாமி, மத்திய அமைச்சர் காந்தி செல்வன், முன்னாள் அமைச்சர்கள் கு.பிச்சாண்டி, முல்லை வேந்தன், செல்வகணபதி மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் வந்தவாசி தொகுதியில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அவரவர்களுக்க ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    மேலும் கனிமொழி எம்.பி. திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய 2 தினங்கள் தொகுதியில் தீவிர பிரசாரம் செய்துள்ளது தி.மு.க.வினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று அன்பழகன் பிரசாரம் செய்தார். இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்கிறார். 12-ம் தேதி மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், 13-ம் தேதி காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய இணை அமைச்சர் நெப்போலியன், 15, 16, 17-ந் தேதிகளில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். இது தி.மு.க.வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.அ.தி.மு.க. சார்பில் மக்களவை உறுப்பினர் தம்பிதுரை தலைமையில் அமைப்பு செயலாளர்கள் சுலோச்சனா சம்பத், அனந்தன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், மதுசூதனன், செம்மலை, சோமசுந்தரம், வளர்மதி, சி.வி.சண்முகம், வில்வநாதன், இளம்பெண் இளைஞர் பாசறை செயலாளர் டாக்டர் வெங்கடேஷ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 4 பேர் கொண்ட பணிக்குழுவினர் வந்தவாசி தொகுதியில் முகாமிட்டுள்ளனர்.

    இவர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று உள்ளூர் நிர்வாகிகளுடன் சேர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வந்தவாசி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டது அ.தி.மு.க.வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் 15, 16-ம் தேதிகளில் ஜெயலலிதா வந்தவாசி தொகுதியில் சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார். இதுவும் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தே.மு.தி.க. சார்பில் கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார், துணைச்செயலாளர்கள் இளங்கோவன், சுரேஷ் குமார், தேர்தல் பிரிவு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் வந்தவாசி தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணி செய்து வருகின்றனர். இக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் 14, 15-ம் தேதிகளில் வந்தவாசி தொகுதியில் தீவிர பிரசாரம் செய்ய உள்ளார். இது அக்கட்சியினரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் டிச. 15-ம் தேதியன்று ஒரே நாளில் ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் ஆகியோர் வந்தவாசி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வது வாக்காளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • இன்றைய செய்திப் புகைப்படங்கள்













    பின்லாடனை கொன்றால் தான் அல்-குவைதாவை வெல்ல முடியும்

    மறைந்திருந்து,அல்-குவைதாவை இயக்கும் ஒசாமா பின்லாடனைகொன்றால் அல்லது உயிரோடு பிடித்தால் மட்டுமே அந்த இயக்கத்தை அழிக்க முடியும், என்று அமெரிக்க, "நேட்டோ' படைகளின் தளபதி தெரிவித்துள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் அமெரிக்க நேட்டோ படைகளின் தளபதி ஸ்டேன்லி மெக் கிரிஸ்டல், செனட்டர்கள் உடனான உரையாடலில் இது பற்றிக் கூறுகையில், "எங்கோ இருந்து கொண்டு அல்-குவைதா அமைப்பை ஒசாமா பின்லாடன் இயக்குகிறது தெரிகிறது."பயங்கரவாதி ஒசாமாவைப் பிடிக்க வேண்டும் அல்லது கொல்ல வேண்டும். அப்போதுதான் அல்-குவைதாவை அழிக்க முடியும். ஆனால், அவனது அழிவு வரை நாம் காத்திருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

    ஆப்கனுக்கான அமெரிக்க தூதர் கார்ல் எய்க்கன்பெர்ரி கூறுகையில், 2001 செப்., 11 சம்பவத்தில் உலக மக்களும் அமெரிக்கர்களும் பலியானதற்கு தண்டனையாக, ஒரு நாள் பின்லாடன் உயிருடனோ பிணமாகவோ பிடிபடுவான் என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன்' என்று தெரிவித்தார்.

  • மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் கருணாநிதிக்கு பாராட்டு விழா சென்னையில் 13-ந் தேதி நடக்கிறது

    சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இன மக்கள், அவர்கள் வாழும் இடத்திலேயே சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று முதல்- அமைச்சர் கருணாநிதி அரசாணை பிறப்பித்துள்ளார்.

    மூவேந்தர் முன்னேற்ற கழகம் மற்றும் தேவர் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்களின் கோரிக்கையை ஏற்று அரசாணை பிறப்பித்த முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு தேவரினம் ஒன்று கூடி நன்றி பாராட்டும் விழா வள்ளுவர் கோட்டத்தில்13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடத்துகிறது.

    பசும்பொன் இலக்கிய அணி தலைவர் கே.பி.செல்வராஜ் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார், பொதுச் செயலாளர் ஆர்.ஆர்.எம்.சுப்பிரமணியகாடு வெட்டியார், கொள்கை பரப்பு செயலாளர் கலியபெருமாள் அமர கொண்டார், பசும்பொன் இலக்கிய அணி செயலாளர் கே.ஏ.தண்டாயுதபாணி ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.

    தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர் டாக்டர் வரதராஜன், முன்னாள் நீதிபதி ஆர்.குரு சாமி, முனைவர் பிச்சை, நடிகர் பிரபு ஆகியோர் பாராட்டி பேசுகிறார்.

    முதல்- அமைச்சர் கருணா நிதி ஏற்புரை வழங்குகிறார். விழாவையொட்டி மாலை 3 மணிக்கு சங்கர் கணேஷ் குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை மூவேந்தர் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு முக்குலத் தோர் சங்க தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் தேவர் அமைப்புகள் செய்துள்ளன. நம்பிலயல் ரவீந்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து பேசுகிறார். முடிவில் கு.நடராசன் நன்றி கூறுகிறார்.













  • நடுவானில் விமானத்தில் குழந்தை பெற்ற பெண்

    நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், கர்ப்பிணிப் பெண் குழந்தை பெற்ற சம்பவம் அமெரிக்காவில் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. "சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்' விமானத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் பயணம் செய்து கொண்டிருந்தார். விமானம், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் மீது ஒன்பதாயிரத்து 100 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, அந்தப் பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது.

    எதேச்சையாக, அந்த விமானத்தில் இருந்த இரண்டு டாக்டர்கள், நிலைமையைப் புரிந்து கொண்டு காரியத்தில் இறங்கினர். விமானப் பணியாளர்களின் உதவியுடன், அந்தப் பெண் விமானத்தின் பின்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டாள். மருத்துவர்களின் உதவியுடன் அங்கேயே குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

    குழந்தை பிறந்தவுடன், விமானப் பயணிகள் அனைவரும் கைதட்டி குழந்தையை வரவேற்று மகிழ்ந்தனர். விமானம் டென்வாரில் இறங்கிய பிறகு, தாயும் சேயும் ஏர்போர்ட்டிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதுபோன்று பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் குழந்தை பிறப்பது என்பது மிக அரிது என்கின்றனர்.

    Bookmark and Share
  • Read More     Comments (33)