Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
டிசம்பர் மாதம் பத்தாம் நாள் ஹாட் நியூஸ்
ஜெயிலில் கஞ்சா கைதிகளோடு தரையில் படுத்து தூங்கிய நடிகை புவனேஸ்வரி
கன்னி ராசிக்கு இடம்பெயர்ந்தார் சனி பகவான் : திருநள்ளாரில் சிறப்பு பூஜை
விபசார வேட்டையில் சிக்கிய துணை நடிகை
காங்கிரஸ் தனித்து விடப்படும் : கராத் எச்சரிக்கை
ஐந்து அதிரடிப்படை தேடுதல் வேட்டை
ராகிங் விவகாரம்:ஆந்திர, இமாச்சல அரசுகளுக்கு நோட்டீஸ்
இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு என்ற கோரிக்கையை ஆதரிக்கிறோம் உண்ணாவிரதத்தில் ஜெயலலிதா பேச்சு
--> நரேஷ் குப்தா மீது முதல்வர் கருணாநிதி திடீர் பாய்ச்சல்
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் கருணாநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் கமிஷன் என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதன் செயல் குறித்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. தேர்தல் நேரத்தில் அவர்கள் எந்த அலுவலரை வேண்டுமானாலும் மாற்றலாம். அதுபற்றி மாநில அரசோ, மத்திய அரசோ கேள்வி கேட்க முடியாது. ஏனென்றால், தேர்தல் கமிஷன் சர்வ வல்லமை பொருந்தியது. லோக்சபா, சட்டசபையில் காலியிடம் வரும்போது ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதற்குள் பொதுத் தேர்தல் வந்தால், அதோடு சேர்த்து இடைத்தேர்தலை நடத்துவது தான் வழக்கம். ஆனால், திருமங்கலம் எம்.எல்.ஏ., மறைந்து ஆறு மாதங்களுக்குள் அவசரமாக இடைத்தேர்தல் நடத்தினர். மத்திய தேர்தல் கமிஷன் தான் இப்படி என்றால், மாநிலத்தில் ஒரு தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளார். அவரது அதிகாரம் குறித்து யாரும் கேட்கக் கூடாது. அவர் மத்திய தேர்தல் கமிஷனில் இருந்து தமிழக தேர்தல் அதிகாரியாக வரவில்லை. தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளில் அவரும் ஒருவர். இந்தப் பதவியில் இத்தனை ஆண்டுகளுக்கு என நியமிக்கப்பட்டுள்ளார். அந்தக் காலக்கெடு முடிந்ததும் மீண்டும் அரசுப் பணியில் இணைந்து பணியாற்ற வேண்டியவர். அவருக்கு தமிழக அரசால் ஊதியம் அளிக்கப்படுகிறது. தற்போது அந்தப் பதவியில் உள்ள நரேஷ் குப்தா தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற 2006ம் ஆண்டு மே மாதம் முதல் இன்று வரை முதல்வரை, "மரியாதை நிமித்தம்' என்ற பெயரில் கூட சந்திக்கவில்லை. மரியாதைக்காக சந்தித்தால் கூட, நேர்மை கெட்டுவிடுமாம். ஆனால், மத்திய தேர்தல் கமிஷன் தலைவரோ, உறுப்பினர்களோ அவர்களை நியமிக்கும்போது பிரதமரையும், ஜனாதிபதியையும் மரியாதை நிமித்தம் சந்திக்கின்றனர். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக இருந்த ஓசா, சந்திரசூடன், சாரங்கி, மாத்யூ போன்றோர் ஆட்சியில் இருந்த முதல்வர்களைச் சந்தித் துள்ளனர். திருமங்கலம் தேர்தலில் அ.தி.மு.க.,வினரே வன்முறைக்கு வித்திட்டு, ஆளுங்கட்சியையும், போலீசையும் குறை கூறி அறிக்கை விட்டுக்கொண்டிருந்தனர். சில போலீஸ் அதிகாரிகளை நீக்க வேண்டும் என ஜெயலலிதா அறிக்கை விடுத்தார். அதேநாளில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, ஏடுகளுக்கு அளித்த பேட்டியில் மிரட்டுதல், தாக்குதல் நடத்துதல் என்றும், விதியை மீறி ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் குறிப்பிட்டார். "தேர்தல் கமிஷன் உத்தரவை ஏற்று, நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம் காட்டியதில்லை. திருமங்கலத்தில் வெற்றி பெற வேண்டியது அமைதியும், ஜனநாயகமும் தான்' எனத் தெரிவித்தேன். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நடந்தது பற்றி, "தினமலர்' நாளேடு குறிப்பிட்டது என்ன தெரியுமா? "2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், அன்றைய சென்னை நகர போலீஸ் கமிஷனர் நடராஜை மத்திய தேர்தல் கமிஷன் மாற்ற உத்தரவிட்டபோது, அதை எதிர்த்து ஜெயலலிதா கோர்ட்டிற்குச் செல்லவில்லையா' என கேள்வி கேட்டது. திருமங்கலம் தொகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த மூன்று அதிகாரிகளை உடனே மாற்ற வேண்டும் என்றனர். அங்கு யார் யாரை நியமிக்கலாம் என பட்டியல் அனுப்ப வேண்டும் என்றனர். அதில் தேர்தல் கமிஷன் குறிப் பிட்ட அதிகாரிகளின் பெயர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென குறிப் பிட்டனர். தேர்தல் கமிஷன் எந்த அளவுக்கு நடுநிலையோடு செயல்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு ஒரு எடுத்துக் காட்டை கூற முடியுமா? தேர்தல் கமிஷனுக்கு அந்த மூன்று அதிகாரிகளின் பெயர்களை இங்கிருந்து எழுதிக் கொடுத்தது யார்? கடந்த 2ம் தேதி மதியம் 3.30 மணிக்கு தான் மத்திய தேர்தல் கமிஷன் தலைவர் லோக்சபாத் தேர்தல் தேதியை அறிவித்தார். அதன் பிறகு தான் தேர்தல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன. ஆனால், 2ம் தேதிக்கு முன் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஏடுகளில் வரக்கூடாதா? வன்னியர் பொது சொத்து நல வாரியம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதற்கான அதிகாரி நியமனம் செய்யப்பட்ட அறிவிப்பு 2ம் தேதி ஏடுகளுக்குத் தரப்பட்டுள்ளது. ஆனால், தமிழக தேர்தல் கமிஷன் சில பத்திரிகையாளர்களுடன் தொலைபேசியில் பேசி அந்தச் செய்தியை ஏடுகளில் வெளியிடக் கூடாது என தடுத்திருக்கிறது. அவருக்கு இதில் ஏன் இப்படிப்பட்ட அக்கறை?. இவ்வாறு முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
--> முதல்வர் குற்றச்சாட்டு : நரேஷ் குப்தா விளக்கம்
"தேர்தல் அதிகாரிகள் அரசியல் தலைவர்களை சந்திக்கக் கூடாது என்பது தேர்தல் கமிஷன் விதி. முந்தைய முதல்வரையும் நான் சந்தித்ததில்லை,'' என்று நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பற்றி, முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் நேற்று குறிப்பிட்டிருந்தார். திருமங்கலம் இடைத் தேர்தலின் போது, ஜெயலலிதா வலியுறுத்தலுக்கு இணங்க அதிகாரிகளை தேர்தல் கமிஷன் இடம் மாற்றியதாக, முதல்வர் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், முந்தைய ஆட்சியிலும் இடைத்தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போது, இதே தேர்தல் அதிகாரி தான், சில போலீஸ் அதிகாரிகளை மாற்ற உத்தரவிட்டார். அதை எதிர்த்து ஜெயலலிதா கோர்ட்டுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னை இதுவரை மரியாதை நிமித்தமாகக் கூட சந்திக்கவில்லை என முதல்வர் கூறியிருப்பது குறித்து நரேஷ் குப்தாவிடம் கேட்டபோது, ""தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருப்பவர், அரசியல் தலைவர்களை சந்திக்கக் கூடாது என தேர்தல் கமிஷன் விதி உள்ளது. இதன் காரணமாகவே முதல்வரை சந்திக்கவில்லை. கடந்த ஆட்சியின் போதும், தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்ற பின், அப்போதைய முதல்வரை நான் சந்தித்ததில்லை. ""வன்னியர் நல வாரியம் தொடர்பான அறிவிப்பை வெளியிடக் கூடாது என பத்திரிகைகளிடம் தேர்தல் கமிஷன் தெரிவித்ததாக புகார் எழுந்துள்ளது. அப்படி ஓர் அறிவிப்பு வெளியானதே எனக்குத் தெரியாது. அந்த அறிவிப்பு பற்றிய பிரதி எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. அப்படி இருக்கும்போது, அதை வெளியிடக் கூடாது என்று எவ்வாறு கூறியிருப்பேன்?'' என பதில் கேள்வி எழுப்பினார்.
--> தேர்தலில் போட்டியிட டிக்கெட் கேட்டு சோனியாவுடன் நக்மா சந்திப்பு!.


பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட நடிகை நக்மா தீவிரமாக இருக்கிறார். இதற்காக அவர் டெல்லி சென்று நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி உள்பட பலரை நேரில் சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்ததாக கூறினார்.
தொகுதி சீரமைப்பில் வட மேற்கு மும்பை தொகுதி புதிதாக உருவாகி உள்ளது. இந்த தொகுதியை தனக்கு ஒதுக்கும்படி சோனியாவிடம் கேட்டதாகவும் நக்மா தெரிவித்தார். இந்த தொகுதியில் 50 சதவீதம் பேர் வட இந்தியர்கள். மேலும் பாலிவுட் திரை உலகமும் இந்த தொகுதிக்குள் வருகிறது. ஆகவே நடிகர்-நடிகைகள் பலர் இந்த தொகுதிக்குள் இருக்கிறார்கள். ஆகவே தனக்கு வாய்ப்பு கொடுத்தால் எளிதாக வெற்றி பெற முடியும் என்று தெரிவித்ததாகவும் அவர் கூறினார். தான் 6 வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உங்களுக்கு டிக்கெட் கொடுக்க சோனியா உறுதி அளித்தாரா என்று கேட்டதற்கு அவர் பதில் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார்.