Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.



மணிரத்னத்தை ஆதரித்த தரப்பு அப்செட்
கோவையில் நடக்கப் போற செம்மொழி மாநாட்டுக்காக முதல்வர் தலைமையில் மக்கள் தொடர்பு குழு மீட்டிங் நடந்தது. ‘வந்தே மாதரம்’ பாணியில் செம்மொழி மாநாட்டுக்காக ஒரு தீம்பாடலை உருவாக்கலாம் என்று ஐடியா தந்திருக்கிறார் கலாநிதி மாறன். அதற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் தானே பேசிவிடுவதாகவும், அதை இயக்குனர் ஷங்கரை வைத்து இயக்கலாம் என்றும் சொல்லியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் ஓகே, ஷங்கருக்கு பதில் மணிரத்னத்தை வைத்துக் கொள்ளலாம் என்றுசில உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்க, விஷயம் விவாதமாகி இருக்கிறது. யார் என்ன சொன்னாலும் கலங்காமல் போராடி தாத்தாவை கன்வின்ஸ் செய்துவிட்டாராம் கலாநிதி மாறன். இருதரப்பு ஆலோசனைகளையும் கேட்ட கலைஞர் முடிவில் கலாநிதி பக்கம் சாய்ந்துவிட, மணிரத்னத்தை ஆதரித்ததரப்பு அப்செட்.
மண்டை காய்ந்து போய் இருக்கிறார் - சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்
‘‘ஏகப்பட்ட வதந்தி வலையில சிக்கித் தவிக்கிறார் சென்னைபோலீஸ் கமிஷனர் ராஜேந்திரன். சில நாட்களுக்கு முன் இவர் பெங்களூருவுக்குப்போனதாகவும், அப்போதுஇவருடன் நட்பு பாராட்ட சினிமாவில் போலீஸ் வேடம் போட்டு நடிக்கும் ஒரு நடிகை கூடவேபோனதாகவும் வதந்தி பரவியது.
இந்தத் தகவலைக் கேட்டு பயங்கர மூட்அவுட்டில் இருக்கிறார் ராஜேந்திரன். ஏற்கனவே ஒருமுறை சிலர் இப்படி தவறான தகவலைப்பரப்ப, ராஜேந்திரனின் கமிஷனர் பதவியே ஆட்டம் காணும் அளவுக்கு பெரிதானது பிரச்னை. அவருக்குப் பதில்ஏ.டி.ஜி.பி ரேங்கில் இருக்கும் அர்ச்சனா ராமசுந்தரம் அல்லது சேகர் இருவரில் ஒருவர் கமிஷனர் நாற்காலியில் அமரலாம் என்ற பேச்சும் அடிபட்டது. இப்போதுதான் அந்த சிக்கலை ஒரு வழியாக சமாளித்து முடித்தார். அதற்குள் இன்னொன்றா என மண்டை காய்ந்து போய் இருக்கிறார் கமிஷனர். சம்பந்தப்பட்ட தேதியில் இவர் சென்னையில்தான் இருந்தார் எனஆதாரத்துடன் நிரூபித்தாலும், யாரும் அதை நம்பாமல் நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார்களாம். இப்படி வதந்தியைக் கிளப்பும் விஷமிகளை அடையாளம் காண்பதற்காக உளவுத்துறையில்சிலருக்கு ஸ்பெஷல் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்’’ .