Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

ஹாட் நியூஸ்







அழகிரி - தயாநிதி சந்திப்பு: ஸ்டாலின் டென்ஷன்!

‘ஒரு கான்ஃப்ரன்சில் கலந்துக்கறதுக்காக மும்பை போன தயாநிதிக்கு டெல்லியில இறங்கினதுமே உடல்நிலை சரியில்லையாம். பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகக்கல் இருப்பதாக ரிசல்ட் வர, டெல்லி ஹாஸ்பிடலிலேயே அட்மிட் ஆகியிருக்கிறார். அவரை நலம் விசாரிக்க அழகிரி வர, அந்த ஏரியாவே கொஞ்ச நேரம் பரபரப்பாகி இருக்கிறது. பொதுவான விசாரிப்புக்குப் பிறகு தயாநிதியும் அழகிரியும் அரசியல் பற்றிப் பேசியிருக்கிறார்கள். டெல்லி அரசியல் தனக்கு சரிப்பட்டு வரவில்லை என்று வருத்தப்பட்ட அழகிரி, அடுத்து நடக்க இருக்கும் தேர்தலில் மதுரையில் போட்டியிட இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். அவரது கருத்தை ஆமோதித்த தயாநிதியும் மதுரைதான் உங்களுக்கான இடம், தைரியமாக களம் இறங்கலாம் மாமா என்று உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

இந்த விஷயம் எப்படியோ ஸ்டாலின் காதுக்கு போக படு டென்ஷனில் இருக்கிறாராம் துணை முதல்வர். குடும்ப இணைப்புக்குப் பிறகும் அவ்வளவாகப் பேசிக்கொள்ளாத அழகிரியும் தயாநிதியும் பேசிக்கொண்டது ஒரு பக்கம் என்றால், இத்தனை நாட்களாக ஸ்டாலினின் ஆதரவாளராக இருந்த தயாநிதி, அழகிரியின் பக்கம் சாய்ந்திருப்பது ஸ்டாலினை எரிச்சல்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். தன்னைப் பற்றித் தவறான செய்திகள் வர தயாநிதிதான் காரணம் என்று கடுப்பில் இருந்த அழகிரி, தற்போது பழைய பகையை மறந்து பேசியதற்குப் பின்னால் இருக்கும் மர்மத்தைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.’

‘ஸ்டாலினை விட்டு அழகிரி பக்கம் முழுவதுமாக போவாரா தயாநிதி? இரண்டு பேரையும் அனுசரிச்சு போலாமேன்னு நினைச்சிருப்பார்.... என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

விரைவில் அதிமுகவில் அதிரடி மாற்றம்

அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாநிலச் செயலாளர் வெங்கடேஷ் மீது சசிகலா தரப்பு கடுப்பில் இருப்பது ஊரறிந்த விஷயம். தற்போது மாவட்டச் செயலாளராக இருக்கும் சத்தியமூர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

தான் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்றால் 50 லட்ச ரூபாய் தர வேண்டும் என்று வெங்கடேஷ் கேட்டதால்தான் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக சொல்லும் சத்தியமூர்த்தி, வெங்கடேஷ் தன்னிடம் பேரம் பேசியதை ரெக்கார்ட் செய்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார். சமீபத்தில் சசிகலாவின் தம்பி திவாகரனைச் சந்தித்த சத்தியமூர்த்தி, வெங்கடேஷின் இந்தக் கட்சி விரோத செயலை அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்றும் அதற்காக அம்மாவை சந்திக்க ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டிருக்கிறார். வெங்கடேஷை வீழ்த்த எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்த திவாகரன், இந்த விஷயத்தால் ஏக குஷியில் இருக்கிறார். அம்மாவின் காதுக்கு விஷயம் எட்டியதும் கூடிய விரைவில் அம்மா பாணி அதிரடி மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

Read More     Comments (33)