Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

ஹாட் நியூஸ்



காணாமல் போன வரதராஜன் உடல் ஏரியில் கிடந்ததாக பரபரப்பு



மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் டபிள்யூ. ஆர் வரதராஜன் (வயது 58). கட்சி மத்திய குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு கட்சி பதவிகளை வசித்தவர்.சென்னை அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 11-ந்தேதி திடீரென மாயமானார்.

குடும்ப பிரச்சினையால் அவர் கோபத்தில் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்பட்டது. அவர் எழுதி இருந்த ஒரு கடிதம் கிடைத்தது. அதில் எனது உடலை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் பரிசோதனைக்கு தானமாக கொடுத்து விடுங்கள் என்று எழுத இருந்தார்.

எனவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

வரதராஜனின் மனைவி சரஸ்வதி போலீஸ் கமிஷனர் டி.ராஜேந்திரனிடம் இது பற்றி கூறி கணவரை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொண்டார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் போலீஸ் டி.ஜி.பி. லத்திகாசரணை சந்தித்து முறையிட்டனர்.

இதையடுத்து மத்திய குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து வரதராஜனை தேடி வந்தனர். தமிழகம் முழுவதும் போலீசாரை உஷார்படுத்தி அனைத்து இடங்களிலும் தேடினார்கள்.

அனாதையாக கிடந்த பிணங்களில் வரதராஜன் உடல் இருக்கிறதா? என்றும் தேடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி போரூர் ஏரியில் ஆண் பிணம் ஒன்று கிடந் தது. அதை போரூர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அவர் யார்? என்பதை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி பிண அறையில் வைத்தனர்.

வரதராஜன் உடலாக இருக்குமோ? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதை அடையாளம் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இன்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரை அழைத்து சென்று பிணத்தை காட்டினார்கள்.

பிணம் அழுகிய நிலையில் சரியாக அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்தது. கட்சி தலைவர்கள் உடலை பார்த்து விட்டு எங்களால் அடையாளம் காண முடியவில்லை என்று கூறிவிட்டனர்.

உடனே வரதராஜனின் வளர்ப்பு மகன் அரவிந்த் பிரகாசை அழைத்து வந்த னர். அவர் பிணத்தை பார்த்தார். அவரும் என்னால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை என்று கூறிவிட்டார்.

இதனால் மனைவி சரஸ்வதியை ஆஸ்பத்திரிக்கு வந்து அடையாளம் காட்டும் படி போலீசார் கேட்டுள்ளனர். அவர் இன்று பிற்பகல் ஆஸ்பத்திரிக்கு வர உள்ளார். அதன் பிறகே அது வரதராஜன் உடலா? இல்லையா? என்பது தெரிய வரும்.

Read More     Comments (33)