Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

வைகோவின் 50 ஆண்டு அரசியல் பணி சென்னையில் ம.தி.மு.க. மாநாடு

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாணவர் பருவத்தில் இருந்தே அரசியலில் ஈடுபட்டவர். தமிழ்நாடு முழுவதும் கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்த தலைவர்களில் வைகோவும் ஒருவர். அரசியலில் அவரது 50 ஆண்டு கால பணியை பாராட்டி சென்னையில் ம.தி.மு.க. வினர் பிரம்மாண்ட மாநாடு நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இது பற்றி ம.தி.மு.க. தென்சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் கூறியதாவது:-
அரசியல்-பொது வாழ்வில் 50 ஆண்டுகள் பொன்விழா காணும் பொதுச் செயலாளர் வைகோவின் மக்கள் சேவை பணியை பாராட்டி மாநாடு நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.
சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமாக இந்த மாநாடு நடத்தப்படும். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் தொண்டர்களை திரட்டி வெற்றி மாநாடாக இதை நடத்த உள்ளோம்.
இந்த மாநாட்டில் வைகோவின் சிறப்புரை மேலும் எழுச்சியை உருவாக்கும். கட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இந்த மாநாடு அமையும். மாநாட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு வேளச்சேரி மணிமாறன் கூறினார்.