Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

ஹாட் நியூஸ்



ரத்தோரை தூக்கில் போட வேண்டும்: ருச்சிகா தந்தை ஆவேசம்



அரியானா போலீஸ் டி.ஜி.பி. ரத்தோர் மானபங்கம் செய்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ருச்சிகாவின் தந்தை சுபாஷ் சந்தர் கிர்கோத்ரா ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரத்தோர் என் மகளை மானபங்கம் செய்த போது அவள் மைனர் பெண். அவள் தற்கொலை செய்த போது மேஜர் பெண்ணாக இருந்தாள்.

மைனர் பெண்ணாக இருந்த நேரத்தில் அவள் மானபங்கம் செய்யப்பட்டாள். எனவே ரத்தோர் மீது ஐ.பி.சி. 305 சட்டப்படி வழக்கு தொடரலாம்.

இந்த சட்டப்படி வழக்கு தொடரப்பட்டால் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கொடுக்கலாம். எனவே வழக்கை 305 பிரிவுக்கு மாற்றி தூக்கு தண்டனை வழங்க வேண்டும். ருச்சிகாவுக்கு நடந்த கொடுமையால் அவள் உயிர் இழந்தாள். ஆனால் அந்த சம்பவத்துக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.

19 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்காதது நமது நாட்டு நடைமுறைகளில் உள்ள கோளாறை எடுத்து காட்டுகிறது. இவை எல்லாம் மாற்றப்பட வேண்டும்.

இது போன்ற முக்கிய வழக்குகளில் கோர்ட்டு தினமும் விசாரணை நடத்தி உடனே தண்டனை வழங்க வேண்டும்.

ரத்தோருக்கு 6 மாதம் மட்டும் தான் ஜெயில் தண்டனை வழங்கினார்கள். அவருக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறேன். அதுவும் விரைவாக நடக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Read More     Comments (33)