Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

ஹாட் நியூஸ்



ஜெயலலிதா 62-வது பிறந்த நாள் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்



அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு இன்று 62-வயது பிறந்தது. அவரது பிறந்த நாளை அ.தி. மு.க. வினர் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கி கொண்டாடினார்கள்.

ஜெயலலிதா பிறந்த நாள் விழா அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கொண்டாடப்பட்டது. ஜெயலலிதா பிறந்த நாள் விழா சிறப்பு மலரை அவைத்தலைவர் மதுசூதனன் வெளியிட திருவள்ளூர் மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி பெற்றுக் கொண்டார்.

பின்னர் சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., ஏற்பாட்டின் பேரில் தயாரிக்கப்பட்ட 62 கிலோ எடை உள்ள “கேக்” கை மதுசூதனன் வெட்டி கூடி இருந்தவர்களுக்கு வழங்கினார்.

வட சென்னை மாவட்ட அ.தி.மு.க.சார்பில் வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. 1062 பேருக்கு லட்டு வழங்கப்பட்டன. ஆதி திராவிட இல்லத்தில் கம்ப்யூட்டர், இலவச உணவு, ஒரு மாத சமையல் பொருட்கள் வழங்கப்பட்டன.

ராயபுரம் வரதப்பா நாயுடு இல்லத்தில் 268 பேருக்கு சீருடை, உணவு, வடசென்னையில் 8 இடங்களில் 1000 பேர் ரத்ததானம் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை சேகர்பாபுஎம்.எல்.ஏ. செய்து இருந்தார். மது சூதனன், வளர்மதி, சாவித்திரி, வீரராகவன், வள்ளி, கிருஷ்ணவேணி, பரிமளா, எஸ்.பி.எஸ்.ராஜா, சாக்ரடீஸ், ஆர்.டி.சாம்சன், நாசர், பழனி, நா.குமரன், புருஷோத்தமன், ராமஜெயம், நேதாஜி, யு.கணேசன், முனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சின்மயா நகர் ஸ்ரீ சேவா மந்திர் ஆதரவற்றோர் இல்லத்தில் சென்னை மாவட்ட இளைஞர் அணி முன்னாள் மாவட்ட செயலாளர் வி.நாகராஜன் உணவு, பழம், பிஸ்கட் மற்றும் முதியோருக்கு புடவைகள் போன்றவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் மண்ணடி ஆர்.பாபு, திருவள்ளூர் வி.துளசிராமன், சின்மயா நகர் டி.உமாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தப்பட்டது.

இதில் இளைஞர் பாசறை செயலாளர் டாக்டர் வெங்கடேஷ், மைத்ரேயன் எம்.பி., மாவட்ட செயலாளர் செந்தமிழன் எம்.எல்.ஏ. பகுதி செயலாளர் அசோக், பழனி உள்பட பலர் பங்கேற்றனர்.

சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவில் கடும்பாடி அம்மன் கோவில் காரணீசுவரர் கோவில் களிலும் செந்தமிழன் எம்.எல்.ஏ. சிறப்பு பூஜை வழிபாடு நடத்தினார். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் என்.எஸ். மோகன், பழனி, பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.

சைதை நரிக்குறவர் பள்ளியில் சாப்பாடும், அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தேவையான சோப்பு போன்ற பொருட்களையும் செந்தமிழன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

சைதாப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கி “கேக்” வெட்டியும் கொண்டாடினர்.

மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் தென்சென்னை மாவட்ட தொழிற்சங்க பேரவை சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலைராஜன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மைத்ரேயன் எம்.பி., அன்ன தானத்தை தொடங்கி வைத்தார். பேரவை செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், முகமது அலிஜின்னா, ஆயிரம் விளக்கு சிவராஜ், பி.எஸ்.வாசன், பாலகிருஷ்ணன், வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை அண்ணா தொழிற்சங்க செயலாளர் அர்ஜூனன் செய்து இருந்தார்.

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வளர்மதி போரூரில் மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார். எம்.ஜி.ஆர். நகர், கே.கே.நகரில் 500 பேருக்கு இலவச வேட்டி சேலை வழங்கினார். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் நடந்த சிறப்பு வழிபாட்டிலும் பங்கேற்றார். வால்மீகி தெருவில் மாணவ- மாணவிகளுக்கு சீருடை மற்றும் பிரியாணியும் வழங்கினார்.

ஆலந்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் பாசறை செயலாளர் டாக்டர் வெங்கடேஷ், மைத்ரேயன் எம்.பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி., மாவட்ட செயலாளர்கள் திருத்தணி அரி, செந்தமிழன், ஆலந்தூர் நகர செயலாளர் வி.என்.பி.வெங்கட்ராமன், அ.தி.மு.க. நிர்வாகிகள் சிவராஜ், நந்தகுமார், ஜி.பி.குணா, நரேஷ்குமார், வாணுவம் வரதன், மாரீசன் ரவி, புரு ஷோத்தமன், தனசேகரன், அம்மன் வைரமுத்து, கோபாலகிருஷ்ணன், வேம் பரசன், கவுன்சிலர்கள் குட்டி ராமதாஸ், டார்வின், பரணிபிரசாத், ராஜேந்திர சரவணன், மது உள்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர் ஆலந்தூர் எம்.கே.என்.சாலையில் ரத்ததான முகாமையும் டாக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.

ஆலந்தூர் தர்காவில் நகர சிறுபான்மை பிரிவு சார்பில் 62 வகையான இனிப்புகளை நகர இணை செயலாளர் எம்.எச்.உமர்கத்தா வழங்கினார். நகர செயலாளர் வி.என்.பி.வெங்கட்ராமன், 42 வார்டுகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தினார்.

மணப்பாக்கம் உள்ளகரம், புழுதிவாக்கத்திலும் சிறப்பு பூஜை நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் மணப்பாக்கம் காமராஜ் ரத்ததான முகாம் நடத்தி அன்னதானம் வழங்கினார். இதில் தலைவர் பாண்டியன் பங்கேற்றார்.

உள்ளகரம்-புழுதி வாக்கத்தில் நகர மன்ற தலைவர் ஜெ.கே.ஜெயசந்திரன், துணை தலைவர் ஜெ.கே.மணி கண்டன் ஆகியோர் பாதாள விக்னேஸ்வர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி மாணவ- மாணவிகளுக்கு இனிப்பு, பிரியாணி வழங்கினர்.

பள்ளிக்கரணையில் தலைவர் பஞ்சலிங்கம், நிர்வாகிகள் ராமதாஸ், எத்திராஜ், ஜெயபிரகாஷ், சிறப்பு பூஜை நடத்தி அன்னதானம் வழங்கினர். தொழில் அதிபர் ரமேஷ், இலவச நோட்டு புத்தகம் வழங்கினர்.

வாணுவம்பேட்டையில் ஏழுமலை தலைமையில் இனிப்பு வழங்கினர். கோவி லம்பாக்கத்தில் இலவச கம்ப்யூட்டர்களை ஒன்றிய கவுன்சிலர் மணிமாறன், சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி. வழங்கினர். மடிப்பாக்கத்தில் பி.எம்.ராமதாஸ் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது.

பெருங்குடியில் கே.பி.கந்தன் தலைமையில் நடந்த ரத்ததான முகாமை டாக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார். இதில் சிட்ல பாக்கம் ராஜேந்திரன், டி.சி.கோவிந்தசாமி, பெரும்பாக்கம் ராஜசேகர், டி.வி.நாராயணன், ஜானகி ராமன் பங்கேற்றனர்.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் அசோக் தலைமையில் கோ-பூஜை நடந்தது. சிட்லபாக்கம் ராஜேந்திரன், மைத்ரேயன், செந்தமிழன் எம்.எல்.ஏ. பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருவான்மியூர் பாஸ்கர் செய்து இருந்தார். 1000 பேருக்கு பிரியாணியும் வழங்கப்பட்டது. அவ்வை இல்லத்தில் எம்.கே.அசோக் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. செந்தமிழன் எம்.எல்.ஏ. திருவான்மியூர் பாஸ்கர் பங்கேற்றனர்.

துரைப்பாக்கம் அடுத்த காரப்பாக்கத்தில் ஸ்ரீகங்கையம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிசேகம், சிறப்பு பூஜைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சோழிங்கநல்லூர் தொகுதி கழக செயலாளர் லியோ சுந்தரம் தலைமையில் காரப்பாக்கம் சமூக நலக்கூடத்தில் ரத்ததான முகாம் நடந்தது. இதை டாக்டர் மைத்ரேயன் எம்.பி. தொடங்கி வைத்து பேசினார்.

சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி., 6020 பெண்களுக்கு சேலை வழங்கினார். நிகழ்ச்சியில் பெருங்குடி நாராயணன், மகான், புருஷோத்தமன், ஞானமூர்த்தி, சகாதேவன், அன்பழகன், கோமளா, துரைசாமி, புஷ்பலதா, வரதராஜன், கிருஷ்ணவேனி, வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வடசென்னை இளைஞர் அணி சார்பில் துறைமுகம் பைராகிமடம் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடும் எஸ்.பி.எஸ்.சி. மேல் நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு இனிப்பும் வழங்கி பல் மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கு.சீனிவாசன் எம்.எல்.ஏ., வட சென்னை மாவட்ட அ.தி. மு.க. பொருளாளர் வி.வெற்றிவேல், ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வக்கீல் ஆர். பிரதாப்குமார் செய்து இருந்தார்.

எம்.ஜி.ஆர்.நகரில் பி.பி. மகேஷ், புகழேந்தி ஆகியோர் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர்.

அரும்பாக்கம் பகுதியில் உள்ள பாஞ்சாலி அம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடும் இனிப்பு அன்னதானம், இலவச வேட்டி -சேலையை தென்சென்னை மாவட்ட கழக அவைத்தலைவர் வ.கோதண்டராமர் வழங்கினார்.

உடன் பகுதி செயலாளர் வெங்கடேசன், தொகுதி செயலாளர் அமீர்பாட்சா, பாகச் செயலாளர் ராதாகிருஷ்ணன், வட்டச் செயலாளர் என்.கந்தன், மகளிர் அணி செயலாளர் ஜீவாதீனன், ராமநாதன், ஆழ்வார், தாமோதிரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மத்திய சென்னை மாவட்ட அ.தி.மு.க. பேரவை துணைத் தலைவர் வக்கீல் புகழேந்தி, மதுரவாயலில் உள்ள நம்பிக்கை இல்லத்தில் 200 ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கினார்.

Read More     Comments (33)