Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அரசியல் செய்திகள்
சோனியா அழைத்தால் தான் கூட்டணி : பாஸ்வான் நிபந்தனை
"பிரபாகரன் படத்தை பார்த்து பயப்படும் காங்கிரசார் "- மணிவண்ணன்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வடகாடு கிராமம். வடகாடு கிராமத்தில் தமிழின உணர்வாளர்கள் சார்பில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு பொதுக்கூட்டம் 26ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு அப்பகுதியின் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விசை ஆனந்த் தலைமை தாங்கினார். (இது புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் புஷ்பராஜின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.)
இந்தக் கூட்டத்தில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன், திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, ஓவியர் புகழேந்தி ஆகியோர் சிறைப்புரை ஆற்றினார்கள்.
மணிவண்ணன் பேசும்போது, பிரபாகரன் படத்தைப் பார்த்து காங்கிரஸ் கட்சிக் காரர்கள் கோபம் அடைகிறார்கள். பிரபாகரன் படத்தை பார்க்கவே பயப்படுகிறார்கள். அத்வானி, வாஜ்பாய் போன்றவர்களின் படங்கள் சமீபத்தில்தான் தமிழ் நாட்டுக்குள் வந்தது. அதை எல்லாம் ஏற்றுக்கொண்டவர்கள் ஏன் பிரபாகரன் படத்தைப் பார்த்து பயப்படுகிறார்கள்.
பிரபாகரன் படத்தை செய்தித்தாள்களில் போடுகிறார்கள். ஆனால் சட்டையில் குத்திக்கொண்டால் கைது செய்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பிரபாகரனின் படங்களை எடுக்க காங்கிரஸ் கட்சியினர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இந்தப் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் தங்களின் தலைவர்கள் படங்களை வைத்தால், இந்தக் கூட்டத்தினர் சும்மா விடுவார்களா? வரும் தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வரக்கூடாது என்பதே நமது நோக்கம்.
படத்தில் நடிக்கிற மணிவண்ணன், வடிவேலுவை விட காமெடிகாரர்களாக இருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். ஈழத்தை உடைத்து அதில் ஆட்சி செய்வது நமது நோக்கம் அல்ல. அமைதி நிலவ வேண்டும் என்பதே நமது நோக்கம்.
கடந்த 15 வருடங்களாக பிரபாகரன் இறந்துவிட்டார், இறந்துவிட்டார் என செய்திகளை பரப்பி வருகின்றனர். கடந்த 15 வருடமாக ஒரு நபர் தொடர்ந்து இறந்து கொண்டிருக்கிறார் என்றால் அது பிரபாகரன் மட்டும்தான். தமிழினத்துக்கு துரோகம் செய்யும் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டோம். தமிழகத்தை விட்டே துரத்துவோம் என்றார்.
ஜெ., எறிந்த அஸ்திரத்தால் காங்., உடையும்

கூட்டணிக்கு அழைப்பு விடுத்து ஜெ., எறிந்துள்ள அஸ்திரத்தால் காங்., கட்சி விரைவில் உடையும் என தேனியில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் வரதராஜன் தெரிவித்தார்.தேனியில் அவர் கூறியதாவது:
காங்., கட்சி தி.மு.க.,விற்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்று, அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜெ., பேசியிருப்பது குறித்து அவரிடம் நான் எந்த வ விளக்கமும் கேட்கவில்லை. தமிழகத்தில் ஒவ்வொரு முக்கிய கால கட்டத்திலும் காங்., கட்சி உடைந்திருக்கிறது. இதுபோன்ற ஒரு காலகட்டத்தில் மூப்பனார் தலைமையில் கட்சி உடைந்தது.
கூட்டணியில் சேர காங்., கட்சிக்கு ஜெ., அழைப்பு விடுத்திருப்பதன் மூலம் அக்கட்சி விரைவில் மீண்டும் ஒரு உடைப்பை சந்திக்கும் என்று பொருள் கொள்ளலாம். தமிழகத்தில் போலீசார் கண்மூடித்தனமான அத்துமீறல்களை நடத்தி வருகின்றனர். சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் கோரிக்கையை முன்னிருத்தி 40 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு தலையிட்டு நீதிபதி, வக்கீல்களிடம் பேசி தீர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும். அரசின் மெத்தனத்தால் பிரச்னை பெரிதாகி, வக்கீல்களை குறிவைத்து போலீசார் கண்மூடி தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.மொரப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் சில தினங்களுக்கு முன்னர் புகார் கொடுக்க சென்ற கவுரி என்ற ஆசிரியர் போலீஸ் அதிகாரியால் தாக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் உடல்நலம் குறைந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், போலீஸ் துறையில் நடந்து வரும் சீர்கேடு, கட்டுப்பாடற்ற நிலை பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் வசம் உள்ள போலீஸ் துறையை வேறு ஒரு அமைச்சரிடம் ஒப்படைத்து கவனிக்க வேண்டும்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அ.தி.மு.க., தி.மு.க., ஏற்றுக்கொண்டு அறிக்கை வெளியிடுகின்றன. ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் சுயாட்சி, மொழி பாதுகாப்பு வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் அரசியல் உள்நோக்கம் கருதி உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி வருகின்றன. இவ்வாறு வரதராஜன் கூறினார்.