Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அண்மை செய்திகள்
"கள்ளழகர்"பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார்
"கள்ளழகர்" நாளை வைகை ஆற்றில் இறங்குகிறார்
அமைச்சரவை கூட்டம்: லாலு, பாஸ்வான் புறக்கணிக்க முடிவு
16 தொகுதியில் போட்டியிடும் காங்.வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு
அம்பேத்கார் சிலைக்கு ஜெயலலிதா மாலை
நல்ல அரசியல்வாதி வாய்ப்புகளை நழுவ விடமாட்டார் : ஜெயலலிதா
தமிழ்நாட்டில் நடிகை லட்சுமிராய் தேர்தல் பிரசாரம்
இலங்கைப் பிரச்னை: மத்திய அமைச்சரவை எத்தனை முறை விவாதித்திருக்கிறது?
சிதம்பரத்துக்கு ராமதாஸ் கேள்வி
11 தொகுதிகளில் பாஜக போட்டி; சரத்குமாருடன் கூட்டணி இல்லை: இல. கணேசன்
மூன்றாவது அணி பேரணியை புறக்கணித்தார் பவார்
அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதி உடன்பாடு : ம.தி.மு.க., - மா.கம்யூ.,வுக்கு நாளை பங்கீடு
அரசியல் கட்சிகள் அன்னதானம்: தேர்தல் கமிஷன் தடை
முதல் நாள் ஆட்டம் : இந்தியா ரன் குவிப்பு; சச்சின், தோனி, ஹர்பஜன் சிங் அரைசதம்
டாடா கார் ஷோரூம்களில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது நானோ கார்
இந்தியா அபாரம்: டிராவை நோக்கி இரண்டாவது டெஸ்ட்
காங்., பா.ஜ.,வுக்கு ஆதரவு இல்லை : நவீன்பட்நாயக் திட்டவட்டம்
பண்டிகைக்கு பணம் கொடுப்பது பாரம்பரிய பழக்கம் : தேர்தல் கமிஷனுக்கு முலாயம் விளக்கம்
கோட்டைக்கு வந்த முதல்வர் கருணாநிதி உற்சாகம்
இலங்கையில் போரை நிறுத்தகோரி ஜெயலலிதா உண்ணாவிரதம்
சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக கோகலே பதவி ஏற்றார்
"அண்மை செய்திகள்,03/04/2009,நண்பகல்,IST 12.40 மணி,நிலவரப்படி,
லாலு-பாஸ்வான்-முலாயம் கூட்டணி தேர்தலுக்கு பின்னரும் தொடரும் : முலாயம்
லாலு-பாஸ்வான்-முலாயம் கூட்டணி லோக்சபா தேர்தலுக்கு மட்டுமல்ல சட்டசபை தேர்தலுக்கும் தான் என சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் தெரிவித்துள்ளார் . காங்.,- பா.ஜவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், லாலு, ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் இடம்பெற்றுள்ள நான்காம் அணி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை லக்னோவில் இன்று துவங்கியது.
கூட்டத்துக்கு தலைமையேற்று பேசிய முலாயம் கூறியதாதவது : எங்களுக்குள் கடந்த காலத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் முடிந்து விட்டது. சஞ்சய்தத் போட்டியிட தடை விதிக்கப்பட்டதற்கு அரசியல் சதி தான் காரணம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எங்களது கூட்டணி போராடும். தொடர்ந்து பேசிய லாலு கூறியதாவது : முலாயம் எனது மூத்த சகோதரர் மாதிரி. ஐக்கிய முற்போக்கு கூட்டணயில் ராஷ்டிரிய ஜனதா தளம் நீடிக்கிறது . சோனியாவுடனும், பிரதமருடன் நட்புறவு நீடிக்கும். மத்தியில் ஐ.மு., கூட்டணி தான் ஆட்சியமைக்கும். காங்கிரசில் உள்ள சிலருடன் தான் கருத்து வேறுபாடு நீடிக்கிறது. முலாயம் நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஐ.மு., கூட்டணியின் வெற்றிக்கு வித்திட்டுவர் என்பதை மறக்க கூடாது. இவ்வாறு லாலு கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சக்தி வாய்ந்த கூட்டணியாக உருவெடுக்கும்: சுஷ்மா
தேசிய ஜனநாயக கூட்டணி சக்தி வாய்ந்த கூட்டணியாக உருவெடுக்கும் என மூத்த பா.ஜ., தலைவரான சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். ராய்சென் பகுதியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த சுஷ்மா, தேசிய ஜனநாயக கூட்டணி மையத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கூட்டணியாக உருவெடுக்கும் என்றும், இதற்காக தான் 101 சதவீதம் நம்பிக்கை கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
விவசாயிகள் கடன் ரத்து : பா.ஜ., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
பா.ஜ., கட்சி லோக்சபா தேர்தல் அறிக்கையை ராமநவமி நாளான இன்று வெளியிட்டது. தேர்தல் அறிக்கையை பா.ஜ., தலைவரும் பிரதமர் வேட்பாளருமான அத்வானி வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள் சிறப்பம்சங்கள் : பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடன் ரத்து செய்யப்படும் .விவசாயிகள் கடன் வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்படும் . ராமர் கோயில் கட்டும் பணியில் பா.ஜ., முணைப்புடன் செயல்படும். சேதுசமுத்திர திட்டத்தை பொறுத்தவரை ராமர் பாலத்தின் புனித தன்மை பாதுகாக்கப்படும். சேதுசமுத்திர திட்டம் மாற்றுப்பாதையில் நிறைவேற்ப்படும். வெளிநாட்டு வங்கிகளில் முடங்கி கிடக்கும் கருப்புப்பணம் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் . வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் குடும்பங்களுக்கு 1 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ கோதுமை 3 ரூபாய் 50 காசுகளுக்கு வழங்கப்படும் . கிராமங்களில் சாலை வசதி செய்து கொடுக்கப்படும்.
இந்தியா வரும் வெளிநாட்டுப்பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்படும். பாதுகாப்பு படையினருக்கு வரி விலக்கு அளிக்கப்படும். பயங்கரவாதத்தை ஒழிக்க பொடா போன்ற கடுமையான சட்டம் அமல்படுத்தப்படும் . கிராமங்களிலும் இணையதள வசதி செய்து தரப்படும். வருமான வரி கட்ட வருமாண வரம்பு 3 லட்சமாக உயர்த்தப்படும் . நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். எரிசக்தி ஆதாரம் பெருக்கப்படும். மற்ற கட்சிகள் போல் இல்லாமல் பா.ஜ., சொன்னதை நிறைவேற்றும். நாட்டில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம் ஒடுக்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திதர புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும். ஒட்டுமொத்தத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்படும்.
இந்தியா - நியூசி., 3வது டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்ஸ் : 375/9
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் நடைபெறுகிறது. முன்னதாக நடந்த 2 போட்டிகளில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்று துவங்கிய மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 375 ரன் எடுத்தது. டெண்டுல்கர் 62 ரன்களும், சேவாக் 48 ரன்களும், தோனி 52 ரன்களும், ஹர்பஜன் சிங் 60 ரன்களும் எடுத்தனர்.