Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
Design By SICP
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
மாதவரத்தில் நிலத்தடி நீர் திருட்டு: வருவாய் துறை அதிரடி
== = => விசாரணைக்காக அழைத்து சென்று சித்ரவதை:போலீஸ் மீது ஐகோர்ட்டில் மாணவர் புகார்
சென்னை, பிப்.27-
தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார் எச்சிலை துப்பி சித்ரவதை செய்ததாக பள்ளி மாணவர் ஐகோர்ட் கிளையில் புகார் தெரிவித்தார். இவ்வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்டம் ஓடைப்பட்டியை சேர்ந்த முருகானந்தரவி மனைவி ஜெயலட்சுமி தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு: என் கணவர் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் இன்ஜினியராக உள்ளார்.
நான் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிகிறேன். எனக்கு இரு மகள்களும், ஜோதி பாசு(14) என்ற மகனும் உள்ளனர். காயத்ரி பள்ளியில் எனது மகன் 9ம் வகுப்பு படித்து வருகிறார். பிப்., 21ம் தேதி புதுக் கோட்டை இழுப்பூர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் என் வீட்டிற்கு வந்து ஒரு குற்றவாளியை பற்றி சில தகவல்களை கேட்டனர். அந்த குற்றவாளிக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறினோம். மறுநாள் அதே போலீசார் வீட்டில் இருந்த ஜோதிபாசுவை அழைத்து சென்றனர். தேனி, புதுக்கோட்டை எஸ்.பி.,க்களிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
என் மகனைஆஜர் படுத்த உத்தரவிட வேண் டும். இவ்வாறு கோரினார். நேற்று இம்மனு நீதிபதிகள் சித்ராவெங்கட்ராமன், பி.முருகேசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந் தது. தாயாருடன் ஆஜரான ஜோதிபாசு கூறுகையில், "விசாரணைக்காக போலீசார் என்னை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி சென்றனர். வேனில் இருந்தபெண் எஸ்.ஐ., என் பேன்ட்டில் எச்சில் துப்பினார். போலீசார் எனது விரல் களில் லத்தியால் தாக்கினர். தொடர்ந்து சித்ரவதை செய்தனர்.
இயற்கை உபாதை கழிக்க வேண்டும் எனக்கூறி அவர்களிடமிருந்து தப்பி என் வீட்டிற்கு சென்று விட்டேன்' என கூறினார். அரசு வக்கீல் பாண்டித்துரை நீதிபதிகள் சேம்பரில் ஆஜராகி போலீஸ் விசாரணை குறித்து விளக்கமளித்தார். அதனை பதிவு செய்த நீதி பதிகள் அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டனர். விசாரணையை மார்ச் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
= = = => கைதான லஞ்ச இன்ஸ்பெக்டரால் உயிருக்கு ஆபத்து பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் கமிஷனரிடம் பரபரப்பு புகார்
சென்னை, பிப்.21-
கைதான லஞ்ச இன்ஸ்பெக்டரால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார்.
சென்னை அடையாறு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். வியாசர்பாடியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஜீவிதாவிடம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இன்ஸ்பெக்டர் கீதா சிக்கினார்.
தன்னுடைய கணவர் நடத்தையில் சந்தேகப்படுவதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், இதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜீவிதா, இன்ஸ்பெக்டர் கீதாவிடம் புகார் மனு கொடுத்தார். புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பதற்காக இன்ஸ்பெக்டர் கீதா "ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்றும், இல்லாவிட்டால் உன்னுடைய தாலி சரடை கழற்றி கொடு" என்றும் புகார் எழுந்தது. இந்த நிலையில்தான் கீதா கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கீதாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஜீவிதா நேற்று பகலில் தனது பெற்றோருடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் ஏழை என்றபோதிலும், கொஞ்சம்கூட இரக்கமில்லாமல் இன்ஸ்பெக்டர் கீதா, என்னிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். என்னால் தரமுடியாது என்றேன். அப்படியென்றால், `உன் கணவனிடமிருக்கும் உன்னுடைய 5 சவரன் நகையையோ, அல்லது தாலி சரடையோ கொடு' என்று கேட்டார். இதனால்தான் நான் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தேன். லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் கீதாவை கைது செய்துவிட்டு, உடனடியாக ஜாமீனில் விட்டு விட்டார்கள் என்று தெரிய வந்துள்ளது. இதை கேட்டு நானும், எனது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தோம்.
இன்ஸ்பெக்டர் கீதா ஏற்கனவே மிரட்டல் விடுத்துள்ளார். லஞ்சம் கேட்கும் விஷயத்தை வெளியே சொன்னால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் தீர்த்துக்கட்டிவிடுவோம் என்று மிரட்டியுள்ளார். இதனால் அவரால் எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஆபத்து உள்ளது. எனவே, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது கணவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இன்ஸ்பெக்டர் கீதா லஞ்சம் வாங்கிய பணத்தில் வீடுகள், சொத்துக்கள் வாங்கியிருக்கிறாரா? என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். நேற்று முன்தினம் கீதா கைது செய்யப்பட்டவுடன், அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். போலீசார் சோதனை நடத்துவதற்கு முன்பே, வீட்டில் இருந்த ஆவணங்களை எல்லாம் கீதா, தனது மகன் மூலம் மறைத்துவிட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இதனால் எந்த ஆவணங்களும் போலீசார் கையில் சிக்கவில்லை.
கைதான கீதாவின் கணவர் என்ஜினீயராக உள்ளார். கீதாவுக்கு 2 மகன்களும் உள்ளனர். கீதா கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.