எங்களைப் பற்றி சாட்டிங் கனவுத் தொழிற்சாலை e-புத்தகம்

 
 
 
 
 
Welcome to South Indian Crime Point

இன்றைய முக்கிய செய்திகள் (07-08-2019) காலை, IST-08.30 AM மணி, நிலவரப்படி,

South Indian Crime Point as your Homepage

SOUTH INDIAN CRIME POINT Follows.... Please Click the Buttons

Youtube Link

South Indian Crime Point

South Indian Crime Point Update

South Indian Crime Point Politics

South Indian Crime Point Devotional

South Indian Crime Point Controversy

South Indian Crime Point Accident

South Indian Crime Point Channel Web TV


நாளை முதல் 2 நாட்கள்
மாவட்ட கலெக்டர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை, ஆகஸ்ட் 07, 2019 08:30 AM

தமிழக அரசு அறிவிக்கும் மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தலையாய பணி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உண்டு. அந்த வகையில் ஒவ்வொரு திட்டமும் உரிய காலத்தில் மக்களைப் போய் சேர்ந்துள்ளதா? என்பதை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி கலெக்டர்கள் நேரடியாக முதல்- அமைச்சரிடம் விளக்கம் அளிப்பார்கள். அதுபோல, அரசுத் திட்டங் களை செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் பற்றி வந்த குற்றச்சாட்டுகளுக்கும் கலெக்டர்கள் பதிலளிக்க வேண்டியதிருக்கும்.

பாராட்டும், பரிசும்

மேலும் அரசு திட்டங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், அவற்றின் தற்போதய நிலை போன்றவை பற்றியும் கலெக்டர்கள் எடுத்துரைப்பார்கள். திட்டங்களை அமல்படுத்தியதில் சிறப்பாக செயல்பட்ட கலெக்டர்களுக்கு பாராட்டும், பரிசும் வழங்கி முதல்-அமைச்சர் உற்சாகப்படுத்துவார்.

எனவே ஒவ்வொரு திட்டத்தின் செயலாக்கம் தொடர்பாக பக்கம் பக்கமாக கோப்புகளை கலெக்டர்கள் தயாரித்து வைத்திருப்பார்கள்.

2 நாட்கள் ஆய்வுக் கூட்டம்

கலெக்டர்கள் மாநாடு சமீபத்தில் நடத்தப்படவில்லை. என்றாலும், அரசு திட்டங்கள் குறிப்பாக நீர் மேலாண்மை திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களிடம் சேர்ந்துள்ளது என்பதுபற்றி கலெக்டர்களை நேரில் அழைத்து ஆய்வு நடத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்படி, நாளை (வியாழக் கிழமை) மற்றும் நாளை மறுதினம் (8, 9-ந் தேதி) ஆகிய 2 நாட்களிலும் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் கலெக்டர் களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர் களும் சென்னையில் 2 நாட்கள் தங்கியிருந்து கலந்து கொள்வார்கள்.

அத்திவரதர் தரிசனம் 17-ந் தேதி மதியம் 12 மணிக்கு நிறைவடையும் கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம், ஆகஸ்ட் 07, 2019 08:30 AM

அத்திவரதர் தரிசனம் 17-ந் தேதி மதியம் 12 மணிக்கு நிறைவடையும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர் தற்போது நின்றகோலத்தில் காட்சி தருகிறார். நேற்று அத்திவரதர் வெள்ளை மற்றும் நீல நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முதியோர், மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் அத்திவரதரை தரிசித்தனர். அவர்களுக்கு வசதியாக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பல்வேறு அமைப்பினர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, சென்னை- கிழக்கு கடற்கரை சாலை போன்றவற்றில் இருந்து ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் காஞ்சீபுரம் நோக்கி வந்தவண்ணம் இருந்தனர்.

காஞ்சீபுரம் நகரமே பக்தர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது.

17-ந் தேதி மதியம் 12 மணியுடன்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனம் வருகிற 17-ந் தேதி மதியம் 12 மணியுடன் நிறைவடைகிறது. அன்று கிழக்கு ராஜகோபுரம் மதியம் 12 மணியுடன் மூடப்படும். அதன் பின்னர் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். வருகிற 16-ந் தேதி காஞ்சீபுரம் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படும்.

நள்ளிரவு 2 மணி வரை

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரையின் பேரில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் நள்ளிரவு 2 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தின நாளாகும். விடுமுறை தினமான அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி அன்றையதினம் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தற்போது 7 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூட்டம் அதிகமாக வரும் நாட்களில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் டோனர் பாஸ் மூலம் முக்கிய நபர்கள் தரிசப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுஷ்மா சுவராஜ் மறைவு:
மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி, ஆகஸ்ட் 07, 2019 08:30 AM

சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் மந்திரி சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் காலமானார்.

சுஷ்மா சுவராஜ் மறைவிற்கு மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

* சுஷ்மா சுவராஜ் மறைவு இந்திய அரசியலுக்கும் பாஜகவுக்கும் பேரிழப்பு - உள்துறை மந்திரி அமித்ஷா

* சுஷ்மா சுவராஜ் காலமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த செய்தியை ஏற்றுக்கொள்வது கடினம். ஒட்டுமொத்த தேசமும் வருத்தமடைகிறது - வெளியுறத்துறை மந்திரி ஜெய்சங்கர்

* 'சுஷ்மா சுவராஜ் கண்ணியமான நாடாளுமன்றவாதி' சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு பாஜக செயல் தலைவர் - ஜே.பி.நட்டா

* சுஷ்மா சுவராஜ் மறைந்தது அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஒரு சிறந்த அரசியல் தலைவர். திறமையான சொற்பொழிவாளர். நாடாளுமன்றத்திற்கு கிடைத்த ஒரு அபூர்வ மனிதர். கட்சி வழியே சிறந்த நட்புடன் பழகியவர். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரித்துக்கொள்கிறேன் - ராகுல்காந்தி

* சுஷ்மா சுவராஜ் காலமானதை அறிந்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அவர் எங்களை விட்டு விரைவில் செல்வார் என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. நான் இளைஞர் காங்கிரசில் இருந்தபோது 1977 முதல் அவரை எனக்கு நன்கு தெரியும். கடந்த 42 ஆண்டுகளாக நாங்கள் நண்பர்களாக இருந்தோம் - காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்.

* மிகத் திறமையான வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ். விவரங்களுடன் எதையும் பேசக்கூடியவர்; மகத்தான திறமையும் சக்தியும் கொண்டவர் - மார்க்சிஸ்ட் எம்.பி., ரெங்கராஜன்

* பாஜகவில் உள்ள பெண் நிர்வாகிகளுக்கு உதாரணமாக இருந்தவர் சுஷ்மா சுவராஜ். பெண்கள் வாழ்வில் முன்னேறுவது தான் சுஷ்மா சுவராஜூக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

* ஆளுமையும் அன்பும் நிறைந்த பெண் தலைவராக இருந்தவர். கட்சிகள், மாநிலங்களுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு உதவியவர் சுஷ்மா சுவராஜ் - திமுக எம்.பி., கனிமொழி

* சுஷ்மா சுவராஜின் மறைவு இந்திய அரசியலுக்கு இழப்பு. சுஷ்மா சுவராஜ் மிகச்சிறந்த பேச்சாளர்; அறிவுப்பூர்வமான உரைகளை நிகழ்த்தியவர் - அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன்

* சுஷ்மா சுவராஜ் மறைவு இந்தியாவுக்கு பேரிழப்பு. எளிய மக்களுடன் அன்புடன் பழகும் தலைவராக திகழ்ந்தவர். அவருடைய மறைவால் மிகப்பெரிய ஆளுமையை இழந்திருக்கிறோம் -பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

* நல்ல நாடாளுமன்றவாதி எப்படி திகழ வேண்டும் என வாழ்ந்து காட்டியவர் சுஷ்மா சுவராஜ் - காங். மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

 

திருமதி ஒய்.ஜி.ராஜலட்சுமி பார்த்தசாரதி காலமானார்

சென்னை, ஆகஸ்ட் 07, 2019 08:30 AM

கல்வியாளர் ராஜலட்சுமி பார்த்தசாரதி(93), மாரடைப்பால் இன்று(ஆக.,6) சென்னையில் காலமானார். மறைந்த ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மனைவியும், ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாருமானவர் இவர், பத்மா சேஷாத்ரி கல்வி குழுமத்தை உருவாக்கி அதன் தாளாளராக இருந்தார்.

வயது மூப்பால் சிகிச்சை பெற்று வந்த இவர், கிரீம்ஸ் சாலையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு, கல்வியாளர்கள், நாடக மற்றும் திரையுலக பிரமுகர்கள், பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தி.நகர், திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில், பொது மக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். இறுதிச்சடங்கு நாளை மாலை 4:00 மணியளவில் பெசன்ட்நகரில் நடக்கிறது.

சென்னையில் 1925ம் ஆண்டு நவ.,8ல் பிறந்தவர் ராஜலட்சுமி பார்த்தசாரதி. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தவர், சிலகாலம் பத்திரிகை துறையில் பணியாற்றினார். 1958ம் ஆண்டு சென்னை, நுங்கம்பாக்கத்தில் 13 குழந்தைகளுடன் பள்ளியை ஆரம்பித்தார். நாளடைவில், பத்மா சேஷாத்ரி பாலா பவன் என்ற மிகப்பெரிய கல்வி சாம்ராஜ்யமாக விரிவடைந்தது. தற்போது இந்த குழுமத்தின் பள்ளியில் சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். சிபிஎஸ்இ கல்வி திட்டம் அமைய இவரும் முக்கிய பங்காற்றினார்.

மறைந்த ராஜலட்சுமி பார்த்தசாரதி சிறந்த கல்வியாளராக திகழ்ந்தவர். தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரைப் பற்றியும் அறிந்தவர். முன்னாள் மாணவர்கள் பற்றியும் நினைவில் வைத்திருப்பவர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை ஆண்டுதோறும் தனித்தனியாக சந்தித்து ஆசீர்வதிப்பது இவரது வழக்கம்.

நாடகம், கலை, இசையில் ஆர்வம் உள்ளவர். சென்னையில் நடக்கும் அனைத்து கலை விழாக்களிலும் கலந்து கொள்பவர். நேர்மறை சிந்தனை உள்ளவர். எதையும் நேர்மறையாகவே சிந்திப்பவர்.

கல்வி சேவைக்காக, 2010ம் ஆண்டின் பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளார். இவர் சிறந்த பத்திரிகையாளராகவும் விளங்கியவர்.

துணை முதல்வர் இரங்கல்

துணை முதல்வர் பன்னீர் செல்வம் டுவிட்டரில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், ‛‛எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான ஒய்ஜி.மகேந்திரனின் தாயார், திருமதி.ராஜலட்சுமி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்! அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்

மறைந்த ஒய்.ஜி.ராஜலட்சுமி பார்த்தசாரதிக்கு டுவிட்டரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: சிங்கப்பெண்ணை, தொலைநோக்கு கல்வியாளரை நாம் இழந்து விட்டோம். ஆயிரம் மாணவ மாணவியரின் வாழ்க்கையை மாற்றியவர். அவரது ஆன்மா சாந்தி பெறட்டும் என பதிவிட்டுள்ளார்.

அனிருத் இரங்கல்

‛‛தன்னம்பிக்கை, தைரியம், நேர்மறை சிந்தனை உடையவர் திருமதி.ஒய்ஜிபி. வரவிருக்கும் பல தலைமுறையினருக்கும் எடுத்துக்காட்டானவர். இந்த உலகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மாணவர்கள், நான் உட்பட உங்களை இழந்துவிட்டோம். லவ் யூ. ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்'' என இசையமைப்பாளர் அனிருத் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் இரங்கல்

'மறைந்த ஒய்.ஜி.ராஜலட்சுமி பார்த்தசாரதி, கல்வி உலகில் முன்னோடியாக இருந்தவர். அவரது மறைவு, கல்வி துறைக்கும் மாணவர் சமுதாயத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு' என முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் இரங்கல்

மறைந்த ஒய்.ஜி.ராஜலட்சுமி பார்த்தசாரதியின் உடலுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினா். அவருடன் உதயநிதி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

நேற்றைய செய்திகள்

© 2019
All Rights Reserved
* இந்த "சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட்" இணையத்தளத்திலுள்ள அனைத்து ஆக்கங்களும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன.
* மறுபதிப்பு செய்ய விரும்பின் www.southindiancrimepoint.com இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
News and Advertisement Please Contact:
SOUTH INDIAN CRIME POINT
Investigation Weekly Tamil Magazine
POST BOX 137
AMBATTUR,
CHENNAI-600 053
Tamil Nadu
India
Yuganesan,

+91-9043000355
+91-7200557999
+91-9444264100
+91-9841523276

No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "SOUTH INDIAN CRIME POINT"- Weekly Magazine
send your comments

சந்தா விபரம் விளம்பரம் செய்ய