Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

புலனாய்வு ரிப்போர்ட்

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை

பிரதமர் கிலானியை நீக்க சர்தாரி ரகசிய திட்டம் : பாகிஸ்தானில் அரசியல் சதி

அசின் மீது அடுத்தடுத்து வரும் குற்றச்சாட்டுகள்

===> போலீஸ் சங்கம் அமைக்கும் முயற்சி!. - ஒரு திகில் ரிப்போர்ட்

""ஐகோர்ட் சம்பவத்தை அடுத்து, "போலீஸ் அதிகாரிகளுக்கு ஆஜராக மாட்டோம்'னு வக்கீல்கள் சங்கம் தீர்மானம் போட்டுருச்சுங்க... அதைப் பார்த்ததும் நீண்டகாலமா அடங்கிக் கிடந்த போலீஸ் சங்கம் அமைக்கும் முயற்சி திரும்பவும் கிளம்பிருச்சுங்க... "நமக்குன்னு சங்கம் இருந்தா நாமும் ஒற்றுமையா போராடலாமே'ங்கற குரல் வர ஆரம்பிச்சிருக்கு... "இந்த கருத்துல தீவிரமா இருக்கும் சிலர், ரகசிய நோட்டீஸ் அடிச்சு எல்லா போலீஸ் நிலையத்துக்கும் வினியோகம் பண்ணிருக்காங்க... "வக்கீல்களுக்கு எதிரா மனித வெடிகுண்டா மாறுவோம்'னு அதுல வாசகங்கள் இருக்காம்... அதைப் பார்த்த உயர் அதிகாரிகள் உடனே அந்த நோட்டீஸ்களை கைப்பற்றி வெளியில வராம முடக்கிட்டாங்களாம்.



===> மரணத்தைத் தரும் மதுரை கோயில் கும்பாபிஷேகம் ?

ஏப்ரலில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம். அதே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல்... இப்படி இரண்டும் ஒரே சமயத்தில் நடக்கவுள்ளதால் கோயில் விழாவில் அரசியல் சர்ச்சைகள் கூடி நின்று கும்மாளம் போடுகின்றன.

"ஏப்ரல் எட்டாம் தேதி கும்பாபிஷேகம்' என கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டார் அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சித் தரப்பு வெற்றி பெறும் நோக்கிலேயே ஏப்ரல் மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவதாக ஆளாளுக்கு முடிச்சு போட ஆரம்பித்துள்ளார்கள் மாமதுரையில். இந்நிலையில், "கும்பாபிஷேகத் தேதியால் ஆட்சியாளர்களுக்கு ஆபத்து' என்ற புதிய சர்ச்சை வெடித்துக் கிளம்பியுள்ளது.

மன்னர்கள் காலத்திற்குப் பிறகு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இவ்வளவு பெரிய திருப்பணி நடப்பது இதுவே முதல் முறை என்று சொல்கிறார்கள். சுமார் பன்னிரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடப்பதாகச் சொல்லியிருக்கிறது கோயில் நிர்வாகம். நான்கு திசைகளில் உள்ள பெரிய கோபுரங்களைச் சீரமைக்க மட்டுமே ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் செலவழிக்கப்படுகிறதாம்.

அதேபோல சுவாமி சன்னதியின் தங்க விமானம், பதினைந்து லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படுகிறது. அதை தன் சொந்தச் செலவில் செய்து கொடுக்கிறார் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கருமுத்து கண்ணன். இவரைப் போல நன்கொடையாளர்கள் பலரும் ஒவ்வொரு பணியையும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என அதிகாரிகள் சிலரும் திருப்பணியில் பங்கெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், "திருப்பணி வேலைகள் முழுமையாக முடிவடையாமல் அவசர கதியில் கும்பாபிஷேகமா?' என்ற கேள்வி, மதுரை சிவனடியார்கள் மத்தியில் கொடிகட்டிப் பறக்கிறது. அதைவிட "ராஷ்ட்ரிய நாசத்தை உண்டாக்கும் ஏப்ரல் எட்டாம் தேதியில் கும்பாபிஷேகம் நடத்துவது எப்படி?' என்றும் ஜோதிடர்கள் தரப்பிலிருந்து குடைச்சலான வினாக் கணைகள் புறப்பட்டுள்ளனவாம். ஏப்ரல் எட்டாம் தேதி புதன் கிழமை... அதாவது பங்குனி 26. "வளர்பிறை முகூர்த்தமான இந்த நாள் அப்படியென்ன குறைபாடு கொண்டது? அந்தத் தேதியை ஏன் தேர்வு செய்தார்கள்?' என்பது குறித்து கோயில் வட்டாரத்திலேயே விசாரித்தோம்.

"நாள் குறித்துக் கொடுக்கும் பொறுப்பு கோயில் சிவாச்சாரியார்களிடம் ஒப்படைக்கப்பட்டாலும், கூடவே இந்த சர்வதாரி வருடத்திலேயே அதுவும் பங்குனி மாதத்திலேயே நாள் குறிக்கும்படி குறிப்பால் உணர்த்தியிருக்கிறது கோயில் நிர்வாகம். நிர்வாகத்தோடு அட்ஜஸ்ட் பண்ணியாக வேண்டிய அர்ச்சகர்கள், இருப்பதிலேயே எது குறைவான குறைபாடுடைய நாளோ அதைக் குறித்துக் கொடுத்திருக்கிறார்கள்'' என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரத்தில் உள்ளவர்கள்."தமிழ் வருடங்களில் விரோதி, மன்மத, விஷூ, துன்முகி உள்ளிட்ட ஆண்டுகளில் கும்பாபிஷேகங்களை விலக்குதல் வேண்டும் என்கிறது ஆகம விதி. தவிர்க்க முடியாமல் சில தனியார் கோயில்களில் இந்த வருடங்களில் குடமுழுக்கு நடத்தப்படலாம்.ஆனால் மீனாட்சியம்மன் போன்ற பெரிய சிவாலயங்களில் நடப்பதில்லை'' என்று சொல்கிறது அந்த வட்டாரம், ""அடுத்த ஆண்டு விரோதி வருஷம். கும்பாபிஷேகம் நடத்த ஆகம விதி தடையாக இருக்கும். விரோதி ஆண்டு முடிந்து அதற்கு அடுத்த ஆண்டு நடத்தலாம் என்றால் அதுவரை இந்த ஆட்சி நீடிக்கும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. எனவே "இன்றைய சூழ்நிலையிலேயே' மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்திப் பார்க்கச் சிலர் விரும்பியிருக்கலாம். தி.மு.க. ஆட்சியின் சாதனைப் பட்டியலில் அதை இடம்பெறச் செய்யவும் எண்ணியிருக்கலாம். எனவேதான் மேலிடத்திலிருந்து சிக்னல் தரப்பட்டு தேதி முடிவு செய்யப்பட்டதோ என்ற சந்தேகம் வலுக்கிறது'' என்கின்றனர் நம்மிடம் பேசிய சில வெளியூர் ஆகம விற்பன்னர்கள்.

பொதுவாக கோயில் கும்பாபிஷேகங்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. மீனாட்சியம்மன் கோயிலைப் பொறுத்தவரை பதிமூன்று வருடங்கள் முடிந்து போயிருக்கின்றன. ஆனால், ""12 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பது கட்டாயமில்லை: ஆகமத்திலும் அப்படித் தீர்மானமாகச் சொல்லப்படவில்லை'' என்று மேற்கோள் காட்டும் ஒரு கோயில் குருக்கள், ""கும்பாபிஷேகத்தின் போது விக்கிரகங்களுக்கு அடியில் வைக்கப்படும் அஷ்ட பந்தன மருந்துக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே சக்தி இருக்கும்.





இதற்கிடையே,"குடமுழுக்கு நடத்த 100 சதவிகித விதிகளுக்கு உட்பட்டு நாள் கிடைப்பது அரிதுதான். ஆனால் குரு, புதன், சுக்கிரன் அஸ்தமனம் இருக்கக் கூடாது. அதிலும் சுக்கிரன் அஸ்தமனம் கூடவே கூடாது. ஆனால் ஏப்ரல் எட்டாம் தேதியில் சுக்கிரன் அஸ்தமனம் இருப்பதாக பல பஞ்சாங்கங்கள் குறிப்பிடுகின்றன.பங்குனி முதல் தேதியில் 27 டிகிரியில் உச்சமடைகிறார் சுக்கிரன். பிறகு படிப்படியாக குறைகிறது என்றாலும் பங்குனி மாதம் அஸ்தமனம் இருப்பதாகவே சேலம் ஸ்ரீனிவாஸன் பஞ்சாங்கம் உள்ளிட்ட பல பஞ்சாங்கங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கும்பாபிஷேகங்கள் நடந்தால் ராஜ ராஷ்ட்ர நாசம் (அரசாட்சி நிலை குலைதல்) உண்டாகும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. மேலும் பல விபரீத(?) பலன்களையும் தரும். உயிரிழப்புகளை உண்டாக்கலாம். இந்த சுக்கிர அஸ்தமனத்தில் மஹா அஸ்தமனம், அல்ப அஸ்தமனம் என இரண்டு வகை உண்டு. இதில் அல்ப அஸ்தமனம் என்பது குறைவானதைக் குறிக்கும். மேற்கில் தொடங்கி கிழக்கில் உதயமாகும். என்றாலும் குறிப்பிட்ட அந்த நாளில் வக்கிர அஸ்தமனத்தில் இருக்கிறார் சுக்கிரன்.

சுக்கிர அஸ்தமனத்தில் கும்பாபிஷேகம் நடத்துவது மரணத்தைத் தரும் என்பதுதான் மேலே உள்ள வரிகளின் பொருள். அந்த மரணங்கள் எந்தத் தரப்பில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இதுபோக சுக்கிரனின் ஆதிபத்திய பலன்கள் 94. "வெண்குடை கெட்டுப் போகும்; அரசு மற்றும் தனிநபர் வருமானம் பாதிக்கும்; பணக்காரர்கள் குறைந்து போவார்கள்; வியாபாரிகளுக்கு நஷ்டம் உண்டாகும். வேதம் ஓதுபவர்கள் நலிவடைவர். அரசாங்கத்தில் மெய்யான காரியங்கள் குறைந்து பொய் பேசுவது அதிகரிக்கும்; ராஜ்யம் மாறுபடும்' என்பதெல்லாம் அதில் ஒருசில பலன்கள்'' என்று சொல்லி மிரள வைக்கின்றது ஜோதிட வட்டாரம்.

மேலும், ""அதேசமயம் அர்ச்சகர்கள் சங்க பஞ்சாங்கத்திலும், ஆற்காடு பாம்பு பஞ்சாங்கத்திலும் பங்குனி 23ந் தேதியோடு சுக்கிரன் அஸ்தமனம் முடிவடைந்துவிடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையே மேற்கோள் காட்டி கும்பாபிஷேகத் தேதியை தற்போது முடிவு பண்ணியிருக்கிறார்கள். என்றாலும் அஸ்தமனத்தின் தொடர்ச்சி, அடுத்த மூன்று நாட்களுக்கு இருக்கவே செய்யும்.

பன்னிரண்டு கால யாக பூஜை என்பதால் ஏழு நாட்கள் முன்னதாகவே அது ஆரம்பமாகிவிடும். ஆக சுக்கிர அஸ்தமனத்தில்தான் யாக பூஜைகளும் நடக்கப் போகின்றன. இது தீய பலன்களையே தரும் என்பது ஜோதிடத்தில் உள்ள உண்மை'' என்று சொல்லி அதிர வைக்கிறார்கள்.ஆனால் தேதியை முடிவு செய்ய குழுமிய குருக்களில் முக்கிய நபரான திருப்பரங்குன்றம் ராஜா பட்டர், ""1963-க்குப் பிறகு கோயில் முழுவதற்கும் மராமத்துப் பணிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பணியிலும் இஞ்ச் பை இஞ்ச் கவனித்துச் செயல்படுகிறார்கள். அதோடு இறை சக்தியை இன்னும் அதிகரிக்கும் வகையில் இந்தத் தடவை யாக சாலை பூஜைகள் நடக்கப் போகின்றன.கும்பாபிஷேகம் என்பது குறைபாடு இல்லாத நாளாக இருக்க வேண்டும். திதி, லக்னம் நன்றாக இருக்கிறதா என்று பார்த்துத்தான் அதை முடிவு செய்வோம். அதன்படி ஏப்ரல் எட்டு என்பது உகந்தநாள்தான்.

உத்தமம், மத்திமம், அதமம் என்று பார்க்கிற போது அந்த நாள் 99 சதவிகிதம் உயர்நிலையில் உள்ளது. இதில் ஆட்சியாளர்கள், நிர்வாகஸ்தர்கள், உதவி செய்தவர்கள், வழிபாடு செய்ய வரக்கூடியவர்கள், அதற்கு வர இயலாமல் போனவர்கள் என்று அனைவருக்குமே நலன் உண்டாக வேண்டும் என்றுதான் நாங்கள் சங்கல்பம் செய்வோம். தனிப்பட்ட நபருக்கென்று எதுவும் பார்ப்பதில்லை.தேர்தலுக்கும், இந்தக் கும்பாபிஷேகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அரசியல் தலையீடும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கடந்த விஜயதசமியன்றே தேதி முடிவு செய்து அறிவிக்கப்பட்டுவிட்டது'' என்கிறார்.

அதேசமயம் அரசியல்வாதிகளோடு போட்டி போட்டு அந்தப் பதவியில் இருக்க அவர் விரும்புவதில்லை. கோயிலுக்காக சொந்தப் பணத்தை நிறைய செலவு செய்திருக்கிறார். ஆகவே தன்னுடைய பதவிக் காலத்திலேயே கும்பாபிஷேகத்தை நடத்திப் பார்க்க வேண்டும் என்று அவருக்கு ஆசை இருந்திருக்கலாம். இருந்தாலும் ஏறத்தாழ ஒரு ஜோதிடரைப் போலவே அவரும் விஷயம் அறிந்தவர். கோயில் குருக்கள் அனைவரையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதன் பிறகே தேதியை முடிவு செய்திருக்கிறார்கள்.எனவே ஆட்சியாளர்களைக் காரணம் காட்டி கும்பாபிஷேகத் தேதியில் குறை காண நினைப்பதும், நாடாளுமன்றத் தேர்தலோடு முடிச்சு போட்டுப் பார்ப்பதும் வேண்டாத வேலை. இலக்கு வைத்து செயல்பட்டால்தான் குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க முடியும். அந்த அடிப்படையில்தான் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. அதில் கோளாறுக்கு வாய்ப்பில்லை'' என்கிறார்கள் அறநிலையத்துறையைச் சேர்ந்தவர்கள். இவற்றில் எது உண்மை என்பது அந்த மதுரை மீனாட்சிக்கே வெளிச்சம்!

Read More     Comments (33)