Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

கனவு தொழிற்சாலை

"பட்டாளம்" படத்துக்காக நதியாவுக்கு, ரோகிணி குரல் கொடுத்தார்!





டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மீடியா நிறுவனம் தயாரித்து வந்த "பட்டாளம்" படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. இந்த படத்தில் நதியா ஒரு பள்ளிக்கூடத்தின் தாளாளராகவும், மனநல மருத்துவராகவும் நடித்து இருக்கிறார்.

அவருக்கு படத்தில், ஜோடி இல்லை. 8 சிறுவர்களும், ஒரு சிறுமியும் அவருடன் நடித்துள்ளனர். கவலை என்றால் என்ன என்றே தெரியாத விடலைகள் அடிக்கிற லூட்டிகளை சமாளித்து, ஒரு முன்னுதாரணமான பள்ளிக்கூடத்தை நதியா எப்படி உருவாக்கி காட்டுகிறார்? என்பதே கதை.

இந்த படத்துக்காக அவருக்கு, நடிகை ரோகிணி "டப்பிங்" பேசியிருக்கிறார். படத்தில் 35 நாட்கள் நடித்த நதியாவுக்கு, 21/2 நாட்களில் `டப்பிங்' பேசி முடித்தார், ரோகிணி.

விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் கதையை ஷீபா ரோஹன் எழுத, ரோஹன் கிருஷ்ணா டைரக்டு செய்து இருக்கிறார். மோனா.பழனிச்சாமி வசனம் எழுதியுள்ளார். நா.முத்துக்குமார், யுகபாரதி, நெல்லை பாரதி ஆகியோர் பாடல்களை எழுத, ஜாஸிகிப்ட் இசையமைத்து இருக்கிறார். என்.சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்து இருக்கிறார்.

Read More     Comments (33)