Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

கனவு தொழிற்சாலை

திருமண செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஷில்பா









கல்யாணம் என்றால் அலறி அடித்துக் கொண்டு ஓடிய நடிகைகளில் முதலிடத்தில் இருந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. பிக் பிரதர் நிகழ்ச்சியில் மறைந்த ஜேட்கூடியுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் பிரபலம் ஆன ஷில்பா, திருமணத்தை தள்ளிப் போட்டார். காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் ஒருவழியாக திருமண செய்தியை கடந்த இரு தினங்களுக்க முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஷில்பா. மாப்பிள்ளை ராஜ்குந்த்ரா லண்டனில் பெரும் தொழில் அதிபர்களில் ஒருவர். அக்டோபர் மாதம் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

இது பற்றி மும்பையில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கில இதழுக்கு ஷில்பா அளித்துள்ள பேட்டியில், ராஜ்குந்த்ரா ரொம்ப நல்லவர். அவர் எனக்கு முதலில் நல்ல நண்பர். அவருடனான இல்லற வாழ்க்கையை நினைத்து பார்க்கும்போதே சந்தோஷமாக இருக்கிறது என்றார்.

கல்யாணத்தை தள்ளிப்போட்டதுதான் எனக்கு இப்படி‌யொரு நல்ல மனிதர் கணவராக வாய்க்க காரணமாக அமைந்துள்ளது என்று சொல்லும் ஷில்பா, தங்களது திருமணம் இந்திய முறைப்படித்தான் நடக்கும் என்றும் கூறினார்.

Read More     Comments (33)