Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

கனவு தொழிற்சாலை

நடிகை சார்மி காதலில் விழுந்திருப்பதாக தகவல்

































கோலிவுட், டோலிவுட் என கால் பதித்து ரசிகர்களை கிளாமரில் கிறங்கடித்துக் கொண்டிருக்கும் நடிகை சார்மி காதலில் விழுந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துக்கும், சார்மிக்கும் இடையே ஏற்பட்டுள்ள காதல் விவகாரம்தான் டோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்.

இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும், விரைவில் கல்யாணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதுபற்றி சார்மியிடம் கேட்டால் பதில் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று மவுனம் காக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத்தும் இந்த விவகாரத்தில் வாய் திறக்க மறுக்கிறார்.

இருவரில் ஒருவர் மவுனம் கலைத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு பதில் கிடைக்கும். ஏற்கனவே தேவிஸ்ரீ பிரசாத்துக்கும், நடிகை மம்தா மோகன்தாசுக்கும் இடையே காதல் என்று தகவல் டோலிவுட்டை வலம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More     Comments (33)