Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

கனவு தொழிற்சாலை

கிளாமரில் கலக்கப் போகிறார் தபு



















பாலிவுட் முன்னணி நாயகிகளில் ஒருவரான தபு, அடுத்து நடிக்கவிருக்கும் சீசன்ஸ் கிரீட்டிங்ஸ் படத்தில் கிளாமரில் கலக்கப் போகிறாராம்.

இந்த படத்தில் தபுவுக்கு ஆடை வடிவமைப்பாளராக கவின் மிங்குல் ஒப்பந்தமாகியிருக்கிறார். நடிகை பிரியங்கா சோப்ராவின் ஆஸ்தான டிசைனரான கவின், முதன் முறையாக தபுவுக்கு டிசைனராக பணியாற்றுகிறார்.

காமெடிமை மையமாக கொண்டு எடுக்கப்படும் இப்படத்தில் நடிகை தபு அதிக அளவில் கவர்ச்சி காட்டுகிறாராம்.

இதுபற்றி ஆடை வடிவமைப்பாளர் கவின் கூறுகையில், தபுவின் உயரத்துக்கு ஏற்றாற்போல ஆடைகளை வடிவமைத்துள்ளேன். அவரை எந்த அளவுக்கு அழகாகவும், கவர்ச்சியாகவும் காட்ட முடியுமோ... அந்த அளவு இந்த படத்தில் கவர்ச்சியாக காட்டியிருக்கிறோம், என்றார்.

பைட் கிளப் படத்தை இயக்கிய டைரக்டர் விக்கி சோப்ரா இயக்கும் இப்படத்தை யு. டி.வி., நிறுவனத்தினர் தயாரிக்கிறார்கள்.

Read More     Comments (33)