Welcome to South Indian Crime Point
மகாத்மா காந்தி கொலை வழக்கு பாகம் - பதிநான்கு


மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை (Assasination of Mohandas Karamchand Gandhi) மகாத்மா காந்தி ஜனவரி 30, 1948 அன்று ஒளிவு மறைவின்றி நாதுராம் கோட்சே என்னும் இந்து மகா சபை அ ஆர் எஸ் எஸ் உறுப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 1934-ல் இருந்து தொடர்ந்து 5 முறை அவரை கொலை செய்ய முயன்று தோற்றதின் விளைவாக 6 வது முறையாக இந்த கொடூர நிகழ்வு நடந்தேறியது.
முதல் முயற்சி ஜூன் 25, 1934 அன்று காந்தி புனேவுக்கு தன் துணைவியாருடன் மாநகராட்சி அரங்கத்தில் உரையாற்ற மகிழுந்தில் செல்கையில் வழியில் தொடர்வண்டிப்பாதையை கடந்து செல்கையில் இவர்கள் வாகனத்தை முந்திக்கொண்டு ஆண் பெண் இருவர்பயணம் செய்த இன்னொரு மகிழுந்து சென்றது. அந்த வாகனம் அரங்கத்தினுள் நுழைந்த சில நிமிடங்களில் அதனை நோக்கி எறியப்பட்ட கையெறிக்குண்டு அதன் முன் வெடித்தது. இதனால் புனே ஊராட்சித் தலைமை அதிகாரி, இரு காவலர்கள் மற்றும் ஏழு இதர உறுப்பினர்கள் பலத்த காயமடைந்தனர். காந்தி எக்காயமுமின்றி உயிர் தப்பினார். அது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை யாரும் கைது செய்யப்படவில்லை. இது கப்பூர் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாவது முயற்சி மே 1944, காந்தி அகா கான் அரண்மணை சிறையில் இருந்து மலேரியா தாக்குதலினால் விடுவிக்கப்பட்டார். மருத்துவர் அறிவுறுத்தலின் படி பஞ்ச்கனி மலை வாழ்விடத்தில் தங்கவைக்கப்பட்டார். இவர் இருப்பிடத்தை எப்படியோ அறிந்து நாதுராம் கோட்சே குழுவினர் 20 இளைஞர்களுடன் சிறப்பு பேருந்தில் வந்திறங்கினர். மாலையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் காந்தியை நோக்கி காந்தி எதிர்ப்பு வாசகங்களைக் கூறிக்கொண்டே மிகுந்த ஆவேசத்துடன் உள்ளே நுழைந்தனர். ஆனால் அங்கு இருந்த கூட்ட நெரிசலில் அவர்களால் காந்தியை நெருங்க முடியவில்லை காந்தியை பத்திரமாக அவர் தொண்டர்கள் அழைத்துச் சென்று விட்டனர். மூன்றாவது முயற்சி காந்தி முகமது அலி ஜின்னாவுடன் பேச்சு வர்த்தை நடத்துவதற்காக செப்டம்பர் 9, 1944 ல் சேவாகிராம் ஆசிரமத்தை விட்டு மும்பைக்கு பயணமானார் வழியில் இந்து முன்னணியினர் இடைமறித்தனர். அவரை மும்பையில் ஜின்னாவுடன் சந்திப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அந்த கூட்டத்தின் தலைவனாக நாதுராம் கோட்சே அவர்கள் காந்தியைக் கொல்வதற்கு முயன்றனர். அவர்களை காவலர்கள் தடுத்து எதற்கு காந்தியை கொல்வதற்கு முயல்கிறாய் என்று வினவியதற்கு வீர் சாவர்க்கர் கட்டளைப்படி அவரைக் கொல்லவேண்டும் என்று கூறினர். டாக்டர் சுசிசிலா நாயர் கப்பூர் ஆணையத்தின் முன் இவ்விவரங்களை அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.