Welcome to South Indian Crime Point

மகாத்மா காந்தி கொலை வழக்கு பாகம் - பதினைந்து







நான்காவது முயற்சி

ஜூன் 29,1946 ல் காந்திக்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு தொடர்வண்டியில் பிராயாணித்தபொழுது அத்தொடர்வண்டி மும்பை அருகேயுள்ள நேரல் க்கும் கர்ஜட் க்கும் இடையே தடம் புரண்டது. தொடர் வண்டியின் ஒட்டுநர் அறிக்கை இருப்புப்பாதையின் கடையாணிகளை விசமிகள் வேண்டுமென்றே காந்திக்கு குறிவைத்து கழற்றியுள்ளதால் தடம் புரண்டது என்ற அறிக்கையை சமர்ப்பித்தார். ஏனென்றால் காந்தியின் சிறப்பு தொடர்வண்டி மட்டுமே அவ்வழியில் செல்வதாயிருந்தது. வேறு எந்த வண்டியும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது முயற்சி

ஜனவரி 20, 1948, மதன்லால் பக்வா, சங்கர் கிஸ்தயா, திகம்பர் பட்கே, விஷ்ணு கார்கேற், கோபால் கோட்சே, நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் அப்தே இவர்கள் அனைவரும் தில்லியில் பிர்லா பவனில் கூடி அடுத்தக்கட்டத் தாக்குதலைத் தீர்மானித்தனர். அதன்படி காந்தி பேசும் மேடை அருகே வெடிகுண்டை வெடிக்கச்செய்து அதன்மூலம் கலவரம் ஏற்பட்டவுடன் காந்தியை சுட்டுக் கொல்லத் தீர்மானிக்கப்பட்டது. சுட்டுக்கொல்ல திகம்பர் பக்டேவும் அல்லது சங்கர் கிஸ்தி இருவரில் யாராவது நிலைமைக்குத் தகுந்தார்போல் செயல்படவேண்டும் என்ற தீர்மானத்தின்படிப் பறப்பட்டனர்.அதன்படி தனியார் வாகனத்தை பயன்படுத்தி காந்தி பேசும் மேடையருகே மத்னலால் பக்வாவால் பற்றவைக்கப்பட்டது எதிர்பாராதவிதமாக குண்டு வெடிக்கவில்லை இதனால் இந்த முயற்சியும் தோல்வியுற்றது.மதன்லால் பக்வாவை விட்டுவிட்டு மற்றவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர். காவல்துறை மதன்லால் பக்வாவை விசாரித்ததில் உண்மைகள் தெரிந்தன ஆனால் காவல்துறையால் உடனிருந்தவர்களை பிடிக்கமுடியவில்லை. அவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்தைவிட்டு தப்பிவிட்டனர்.

படுகொலை

பிர்லா இல்லத்தில் ஏற்பட்டத் தோல்வியினால் நாதுராம் கோட்சே, நாராயண் அப்தேயும் மும்பை வழியாக புனேவுக்குத் திரும்பினர். தத்தாத்திரேயா பர்கூர் மற்றும் கங்காதார் தண்டவதே உதவியுடன் பெரேட்டாஇத்தாலிய துப்பாக்கி நிறுவனம்) அரைத் தன்னியக்கமுள்ள (Semi Automatic) 11 சுற்று சுடக்கூடிய துப்பாக்கி குண்டுகளுடன் கூடிய சுழல் துப்பாக்கியை குவாலியரில் வாங்கி தில்லியை ஜனவரி 29,1948 அன்று தில்லி தொடர் வண்டி நிலையத்தை அடைந்தனர்.

ஜனவரி 30, 1948 அன்று மாலை 5;17 மணிக்கு நாதுராம் கோட்சே மாகாத்மா காந்தியின் அருகே சென்று மூன்று முறை ஒளிவுமறைவின்றி, தயக்கமின்றி சுட்டான். காந்தியின் பேரன் தரம் ஜிட் ஜிகயசு அவர் உடன் இருந்தார் அவர் நாதுராமால் சுடப்பட்டு வீழ்ந்தபோது அவர் பேரன் கேட்ட கடைசி வார்த்தைகளான ஹே ராம்! ஹே ராம்! ஹே ராம்! என்ற முனகலோடு அவர் தலை தரையில் மோதியது. பின் நாதுராம் கோட்சே அம்பாலா சிறையில் நவம்பர் 15,1949 ல் தூக்கிலிடப்பட்டான். காந்தி சுடப்பட்டபொழுது முனகிய ஹே ராம்! என்ற வார்த்தைகள் குறித்து நிறைய சர்ச்சைகள் எழுந்துள்ளன. காந்தி அது மாதிரி எந்த வார்த்தையும் உச்சரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Bookmark and Share

Read More     Comments (33)