எங்களைப் பற்றி சாட்டிங் கனவுத் தொழிற்சாலை e-புத்தகம்

 
 
 
 
 
Welcome to South Indian Crime Point

இன்றைய முக்கிய செய்திகள் (08-07-2016) மாலை, IST- 4.15 PM மணி, நிலவரப்படி,

South Indian Crime Point as your Homepage

SOUTH INDIAN CRIME POINT Follows.... Please Click the Buttons

சாட்டிங் | Chating (06-07-2016)

Sing-In செய்ததும் உடனேயே ஆன் - லைனில் வந்தார்...பொலிட்டிக்கல் ஆப் தமிழ்நாடு....

சென்னையில் நடந்த, அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா ஆவேசமாக பேசினாராமே....? என்றோம்.

”கண் கலங்கினார்..ப்பா...”

என்னது.... முழுவிபரம்.. சொல்லுப்பா...

ஜெயலலிதா பேசியது: பிற கட்சிகளில் எல்லாம், பணம் வாங்கிக் கொண்டு, 'சீட்' தருகின்றனர். நான் கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு சீட் கொடுத்து, தேர்தல் செலவுக்கு பணமும் கொடுத்தேன்.

ஆனால், மாவட்ட செயலர்களில் பெரும்பாலானோர், பணத்தை பதுக்கி விட்டனர். வேட்பாளர்களில் சிலரும், பணத்தை செலவு செய்யவில்லை. சிலர், தங்கள் மாவட்டத்தில், வேறு யாரேனும் வெற்றி பெற்றால், தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போகலாம் என்ற எண்ணத்தில், அவர்களை தோற்கடிக்க பாடுபட்டுள்ளனர்.

இவ்வாறு செயல்பட்டவர்களில் சிலரை, வேறு வழியின்றி தற்போதும் அமைச்சராக்கி உள்ளேன். ஒருவரை மாவட்ட செயலராக்கினால், அவர் தன் உறவினரை மாவட்ட செயலராக்கி விட்டு, தி.மு.க., மாவட்ட செயலருடன் எழுதப்படாத ஒப்பந்தம் போட்டு செயல்பட்டுள்ளார். இவை எல்லாம் எனக்கு தெரியாது என, நினைக்கிறார்.

கட்சி நிதி என்ற பெயரில், அவர் பணம் வசூலித்ததும், அவரது நண்பர் எவ்வளவு சம்பாதித்தார் என்பதும், எனக்கு தெரியும். ஒரு மாவட்ட செயலர், தன் மாவட்டத்தில் மற்றவர்களை தோற்கடிக்க, வேலை பார்த்து விட்டு, அவர் மட்டும் எம்.எல்.ஏ.,வாகி உள்ளார்.

ஒரு மாவட்ட செயலர், மாவட்டத்தில், நம் கட்சியினரை தோற்கடிக்க பணம் கொடுத்துள்ளார். அந்த மாவட்டத்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, அவரை அமைச்சராக்கி உள்ளேன்.

லோக்சபா தேர்தலில், 37 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தோம். அதன்படி, சட்டசபை தேர்தலில், 217 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இரண்டு ஆண்டுகளில், அதிருப்தி ஏற்படும் வகையில், நாம் எதுவும் செய்யவில்லை; ஆனாலும், அதிக இடங்களை இழந்துள்ளோம்.

இதற்கு காரணம், நம் கட்சியினர் செய்த உள்ளடி வேலைதான். நான் நம்பிய பலர் துரோகம்செய்து விட்டனர். (இவ்வாறு கூறும் போது கண் கலங்கினார்)

பதவி இல்லாமல், சாதாரண தொண்டனாக இருக்கும் போது நல்லவராக இருக்கின்றனர். அவர்கள் கஷ்டத்தை பார்த்து, பதவி கொடுத்தால், தங்களுடைய சுயரூபத்தை காட்டுகின்றனர். நான் யாருக்காக உழைக்கிறேன்; உங்களுக்காக உழைக்கிறேன். அதை புரிந்து கொள்ளவில்லை.

சிலர் எனக்கு விசுவாசமாக இருக்காமல், மாவட்ட செயலர்களுக்கும், பிறருக்கும் விசுவாசமாக உள்ளனர். நான் முதல்வர் பதவியை தேடி செல்லவில்லை; முதல்வர் பதவி என்னை தேடி வந்துள்ளது. எனக்கு பிறகு கட்சியை வழிநடத்த வேண்டாமா?

தி.மு.க.,வை வளர விடக்கூடாது என, உழைக்கிறோம். சிலர் அக்கட்சியுடன் கைகோர்த்து, நம் வேட்பாளர்களை தோற்கடித்துள்ளனர். அவர்கள் பட்டியல் என்னிடம் உள்ளது. பணத்தை பதுக்கியவர்கள் விவரமும் உள்ளது; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்ளாட்சி தேர்தலில், கடந்த முறை போல, அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். எனவே, பணம் வாங்காமல், கட்சிக்காக உழைப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை வெற்றி பெற வைப்போம். அனைவரும் கட்சிக்காக உழையுங்கள். எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

உள்ளாட்சி தேர்தலில், எப்படி செயல்பட வேண்டும் என, நான் வியூகம் அமைத்து தருகிறேன்; அதன்படி செயல்படுங்கள்; வெற்றி நிச்சயம்.

அப்போ உள்ளாட்சி வேலைகள் .. இனி ஆரம்பம்... சரி தி.மு.க ரியாக்‌ஷன் என்ன?

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த கருணாநிதி முடிவெடுத்துள்ள தாக கூறப்படுகிறது.

* தமிழகத்தை நான்கு மண்டலங்களாக பிரித்து, கொங்கு மண்டலத்துக்கு கனிமொழி, தென் மண்டலத்துக்கு ஐ.பெரியசாமி, டெல்டா பகுதிக்கு டி.ஆர்.பாலு, வட மண்டலத்துக்கு துரை முருகன் ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்து, தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்

* உள்ளாட்சி தேர்தலில், போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை, இப்போதே தேர்ந்தெடுத்து, அவர்களை, சம்பந்தப்பட்ட பகுதிகளில், தேர்தல் வேலை செய்யச் சொல்ல வேண்டும்

* உள்ளாட்சி பொறுப்புகளுக்காக, கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள், அந்த பகுதியின் பிரதான ஜாதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்

* தேர்தல் வேலையில் ஆர்வமுள்ள - கட்சி மீது பிடிப்புள்ள மாவட்ட செயலர்களை தமிழகம் முழுவதும் நியமித்து விட வேண்டும்

* ஏற்கனவே உள்ளாட்சி பொறுப்புகளில்இருந்து, புகார்களுக்கு ஆளாகாத, மக்கள் செல்வாக்கு பெற்ற பிரமுகராக இருக்க வேண்டும்

* பெரும்பாலான இடங்களில், மாவட்ட செயலர் பரிந்துரைக்கும் நபர்களையே, உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும்

* உள்ளாட்சி தேர்தலுக்காக மாவட்ட செயலர்கள் கூட்டத்தை கூட்டி, கட்சி தனித்து போட்டியிடு வதா, கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து விவாதித்து, அதன் அடிப்படை யில் முடிவெடுக்க வேண்டும். இப்படி பல்வேறு திட்டங்களை வைத்து, விரைவில் அதை செயல்படுத்த கருணாநிதி திட்டமிட்டுள்ளாராம்...

மற்ற கட்சிகாரங்க என்ன செய்யப்போறாங்க....

Singout.....

© 2016
All Rights Reserved
* இந்த "சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட்" இணையத்தளத்திலுள்ள அனைத்து ஆக்கங்களும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன.
* மறுபதிப்பு செய்ய விரும்பின் www.southindiancrimepoint.com இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
News and Advertisement Please Contact:
SOUTH INDIAN CRIME POINT
Investigation Weekly Tamil Magazine
POST BOX 137
AMBATTUR,
CHENNAI-600 053
Tamil Nadu
India
Yuganesan,

+91-9043000355
+91-7200557999
+91-9444264100
+91-7667670699
+91-9841523276

No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "SOUTH INDIAN CRIME POINT"- Weekly Magazine
send your comments

சந்தா விபரம் விளம்பரம் செய்ய