Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

அரசியல்





மூன்று லட்சம் பேருக்கு வீடு - 18 லட்சம் பேருக்கு "அல்வா"

‘‘எதிர்க்கட்சிகள் மண்ணை வாரித் தூற்றினாலும் இலவசங்களை நிறுத்துவ தில்லை என்ற முடிவுடன் இருக்கிறது ஆளும் தரப்பு. சமீபத்தில் சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட கவர்னர் உரைக்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அடுத்த நடவடிக்கையில் இறங்கஆயத்தமாகி விட்டார் முதல்வர்.

கவர்னர் உரையில் எதற்கெல்லாம் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பதை ஸ்பெஷல் டீம் மூலம் விசாரித்து முடித்து விட்ட நிலையில், இலவசவீடுகள் கட்டித் தரும் திட்டத்துக்கு முதலில் டிக் அடித்திருக்கிறார் முதல்வர்.

முதல் கட்டமாக மூன்று லட்சம் பேருக்கு வீடு கட்டித்தருவதெனவும், அந்தத் திட்டத்தை 2011க்குள் முடித்து விடவேண்டும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறதாம். அப்போதுதான் மீதமுள்ள 18 லட்சம் குடும்பமும் தங்களுக்கும் நிச்சயம் வீடு கிடைக்குமென்ற நம்பிக்கையில் திமுகவுக்கே வாக்காளிப்பார்கள் என்று நம்புகிறார் முதல்வர். ஒரு வீட்டுக்கு 60 முதல் 70 ஆயிரம் வரை பட்ஜெட் நிர்ணயித்துள்ள நிலையில்,இதற்கும்இலவச கலர் டி.வி., திட்டம் போலகுளோபல் டெண்டர் விடலாம் என்ற எண்ணமும் இருக்கிறதாம்’’.

டி.ஜி.பி தேர்வில் மும்முனை போட்டி நடந்த ரகசியம்

”லத்திகா சரண், நட்ராஜ், போலோநாத் மூவரின் பெயருமே டி.ஜி.பி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டதாம். இதில நட்ராஜுக்கு மட்டும் ஹெவியா சிபாரிசு செய்தாராம் தளபதி. முதல்வரின் ஒரே ஆப்ஷன் லத்திகா மட்டும்தான்”. டி.ஜி.பி போஸ்ட்டில் இதுவரை எந்த பெண் போலீஸ் அதிகாரிகளும் இருந்ததில்லை. அதனால் முதல்முறையா ஒரு பெண் அதிகாரியை பெரிய போஸ்ட்டில் அமரவைத்த பெருமை நமக்கு வரும்” என்று தளபதியை சம்மதிக்க வைத்தாராம் முதல்வர்.

இருந்தாலும் இது லத்திகாவின் விசுவாசத்திற்குகிடைத்த பரிசு என்ற தகவலும் கசிகிறது. அதாவது 2006-ல் சென்னை கமிஷனராக இருந்தலத்திகா, தேர்தலின் போது ஆளுங்கட்சிக்கு ஏற்றார் போல சுமூகமாக நடந்த கொண்டதால் தான் லத்திகா பெயரை முதல்வர் "டிக்"அடித்தாராம்”.

அரசியல் - 2009

Read More     Comments (33)