Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

திரை(மறைவு)ச் செய்திகள்

 

ஹீரோயினை தேடிக்கிட்டிருக்காங்க !

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 22,

சிறுத்தையாரின் புதுப்படத்துக்கு நாயகி அமையாமல் தவிக்கிறார் மலையாள இயக்குனர்.

இவர் போடும் கண்டிஷன் நாயகிகளை இடிக்கிறதாம். இருவரை தேர்வு செய்துவிட்டு கழற்றி விட்டு விட்டார்.

படப்பிடிப்பு பெரும் பகுதி முடித்து படக்குழு மூட்டை முடிச்சை கட்ட தயாராகிறது. ஆனாலும் இன்னும் நாயகி கிடைக்கவில்லை.

ஆடின காலும் கூடிய வாயும்......

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 22,

ஆட்ட நடிகருடன் காதல் வயப்பட்டு கல்யாணத்துக்கு தயாரான நயனச்சி சினிமாவுக்கு முழுக்கு போட்டு ஒதுங்கினார்.

நீண்ட நாட்கள் பொது விழாக்களில் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்த அவர் திடீரென தனது படத்தின் வெற்றி விழாவில் மேடை ஏறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இதன்மூலம் நடிகைக்கு மீண்டும் நடிப்பாசை துளிர்விட்டுள்ளது என பட உலகினர் கிசுகிசுக்கின்றனர்.

கவர்ச்சி உடையில் பிரபல நடிகை!

ஒரு காலத்தில் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்த நான்கெழுத்து நடிகை, இப்போது குணச்சித்ர வேடங்களுக்காக கம்பெனி கம்பெனியாக சென்று வாய்ப்பு கேட்கிறாராம்.

அதுவும் கவர்ச்சியாக உடுத்திக்கொண்டு...! எப்படியாவது தமிழ் பட உலகில் இன்னொரு ரவுண்டு வருவது என்பதில் குறியாக இருக்கிறார், அந்த நடிகை!

முந்தைய திரை(மறைவு)ச் செய்திகள்

தமிழ்மொழி பாவமடா! தனுஷ் மீது பாயும் யாழ்ப்பாணம் இளைஞர்


  • Bookmark and Share