Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
நக்சலைட்டுகள் ஜார்கண்டில் ரத்த வெறி ராஞ்சி, ஜன. 21- ஜார்கண்ட் மாநிலத்தில் நச்சலைட்டுகள் நடத்திய கண்ணி வெடி தாக்குதலில் சிக்கி 13 போலீசார் உயிரிழந்தனர். நீண்ட காலமாக மவுனமாக இருந்த மாவோ.,நகச்லைட்டுகள் இந்த வெறி தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். சம்பவ இடத்தில் உயிரிழந்த போலீசாரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஜார்கண்ட், சட்டீஸ்கர், மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் சமீப காலமாக அடங்கியிருந்தது . இந்நிலையில் கார்வா மாவட்ட வனப்பகுதிக்குள் நக்சலைட்டுகளை பிடிக்கும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கண்ணி வெடியில் சிக்கினர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி., கூறுகையில் பண்டாரியா போலீஸ் எல்கைக்குள் கண்ணிவெடி செயல் இழக்க செய்யும் வாகனத்தில் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. முழு விவரம் இன்னும் வரவில்லை. பலர் சிக்கியிருக்ககூடும் என அஞ்சப்படுகிறது என்றார். |
கொடுங்கையூரில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை பெரம்பூர், ஜன. 21- சென்னை கொடுங்கையூர் கணேஷ் புதுநகரை சேர்ந்தவர் முனுசாமி (வயது 45), ஆட்டோ டிரைவர். இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டமு கமுதி அருகே உள்ள முத்தாலம்மன் கரிசை குளம் கிராமம் ஆகும். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மணிமேகலை கோபித்துக் கொண்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். இதனால் முனுசாமி தனியாக வசித்து வந்தார். முனுசாமி இரவு நேரத்தில் மது குடித்து விட்டு கணேஷ் புதுநகர் பகுதியில் ரகளையில் ஈடுபடுவது வழக்கம். சில நேரங்களில் ஆட்டோவை வீட்டு முன்பு நிறுத்திவிட்டு அதிலேயே அமர்ந்து மது குடிப்பார். நேற்று இரவும் முனுசாமி மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டார். இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் முனுசாமி வீட்டு அருகே நடுரோட்டில் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது தலையில் அரிவாளால் வெட்டப்பட்டிருந்தது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிணத்தை பார்த்து கொடுங்கையூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் கோவி மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், பிரகாஷ், சிவசங்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள். இரவு 10.30 மணி வரை முனுசாமி அந்த பகுதியில் நடமாடியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது 3 கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றது. முனுசாமி சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவையே வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தார். அவர் தனது ஆட்டோவை எழும்பூரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்துவது வழக்கம். எனவே அங்குள்ள ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். முனுசாமிக்கு எதிரிகள் யாராவது உள்ளார்களா என்பது பற்றியும் தீவிரமாக விசாரிக்கிறார்கள். கொலையாளிகளை கண்டு பிடிக்க தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். |
விருத்தாசலத்தில் துணிகரம்: பெண்ணைக் கொன்று 5 1/2 லட்சம் நகை-பணம் கொள்ளை விருத்தாசலம், ஜன.21- விருத்தாசலம் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் தமிழ்ச் செல்வன் (வயது 53). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் சிகரெட் கம்பெனியில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விமலா (47). இவர் மொத்தமாக புடவைகளை வாங்கி வீட்டிலேயே விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் தமிழ்ச்செல்வன் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் பணி முடிந்து இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு வெளி பக்கமாக பூட்டப்பட்ட இருந்ததால் விமலா வீட்டை பூட்டிக் கொண்டு கோவிலுக்கு சென்றிருக்கலாம் என கருதி விமலாவுக்காக காத்து நின்று கொண்டிருந்தார். ஆனால் வெகுநேரமாகியும் விமலா வராததால் சந்தேகம் அடைந்து வீட்டின் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தார். அப்போது படுக்கை அறையில் விமலா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து தமிழ்ச் செல்வன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு விமலா கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டனர். மேலும் விமலா கழுத்தில் அணிந்திருந்த நகை மற்றும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 25 பவுன் நகை கொள்ளை போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.5 1/2 லட்சமாகும். யாரோ மர்ம மனிதர்கள் புடவை வாங்குவது போல் நடித்து விமலாவின் கழுத்தை அறுத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்த தமிழ்ச் செல்வன் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ் பெக்டர் சீராளன், சப்- இன்ஸ்பெக்டர் திருமேணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் புருனோ மற்றும் தடயவியல் நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விமலாவை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. |
ராஜஸ்தான் மந்திரிகளுடன் செக்ஸ் தொடர்பு