Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

கனவு தொழிற்சாலை

 

நடிகர் விக்னேஷ் பேட்டி

நேர்காணல்: C.விஜயகுமார்.

சென்னையின் பரபரப்பான மாலை நகரமே சுறுசுறுப்புடன் இயங்கி கொண்டிருந்த வேளையில் நடிகரும், தயாரிப்பாளரும் ஆன நடிகர் விக்னேஷ்யை சந்திக்க சென்றோம். வரவேற்பரையில் காத்திருந்த போது இன்முகத்துடன் வரவேற்ற விக்னேஷ் ஒருகல்லூரி மாணவனை போல் துடிப்புடன் இருந்தார்.

நிஜப்பெயர் ராஜா சினிமாவுக்காக விக்னேஷ் சொந்த ஊர் வெள்ளக்கோவில் அருகில் உள்ள மூலனூர். மூலனூர் கிராமத்தில் 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கிராமத்தில் பிறந்த விக்னேஷ் அருகில் இருக்கும் பெரிய ஊரான ஈரோடுக்கு வருவதே வெளி நாடு செல்வதை போல உணரவைக்கும் நிலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.

சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்த விக்னேஷ் வாய்ப்புக்காக பல இயக்குநர்களை சந்தித்து அலைந்து தான் வாய்ப்பு பெற்றார். இதற்காக 7 வருடங்கள் போராட வேண்டியிருந்தது.

வண்ண வண்ண பூக்கள் படம் இவருக்கு கிடைக்க வேண்டிய படம் இறுதியில் கைநழுவி போனது. அடுத்து உடனே கிடைத்தது. விக்னேஷ் முதலில் அறிமுகமான படம் சின்னத்தாயி இந்த படம் கிடைத்தது. இவர் சூட்டிங்கில் நெப்போலியன் காட்சிகள் படமாக்கப்பட்டன. மூன்று நாட்கள் சூட்டிங் செல்வதும் சும்மா இருந்து விட்டு திரும்புவதும் இது தான் நடந்தது. நான்காவது நாள் தான் மாலை 5.30 மணிக்கு தான் இவர் நடிக்கும் முதல் காட்சி கிடைக்கப்பட்டது. இந்த திரைப்பட வாய்ப்பு கிடைக்க அலையும் நாட்களில் சில கம்பெனிகளில் வேலை பின்பு சொந்த தொழில்கள் அப்புறம் சினிமா ஸ்டில் போட்டோ கிராஃப்பரிடம் உதவியாளராகவும், பின்பு கேமராமேன் உதவியாளராகவும் பணியாற்றி பின்பு தான் இந்த சின்னத்தாயி பட வாய்ப்பு கிடைத்தது.

விக்னேஷ்க்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். காயன் என்ற மகனும் கனிஸ்கா என்ற மகளும் உள்ளனர். தன் மகன் காயன் பெயரில் சொந்த சினிமா பட நிறுவனம் ஆரம்பித்துள்ளார் பட நிறுவனத்தின் பெயர் “காயன் பிலிம்“

காயன் பிலிம் தற்போது தயாரிக்கும் படம் மீராவின் காதலன் இதில் விக்னேஷ் நடிக்கிறார். இப்படத்தை பாவலன் இயக்குகிறார்.

நடிகரும், தயாரிப்பாளருமான விக்னேஷின் பேட்டி

1.நீங்கள் எந்த மாதிரியான கேரக்டரில் நடிக்க விருப்பம்?

நடிப்பில் வித்தியாசங்கள் இல்லை.எல்லா கேரட்டரிலும் நடிக்க வேண்டும். எனது நடிப்பிற்கு பாராட்டு கிடைக்கும் அளவிற்கு நடிக்க வேண்டும.

2.சினிமா தவிர்த்து வேறு எந்த துறையில் அதிக ஈடுபாடு?

எனக்கு முதலில் சினிமா தான், சினிமா தவிர்த்து சில பிஸினஸ். ஒரு நடிகனான எனக்கு எப்பொழுதும் நினைப்பு எல்லாம் சினிமா தான்.

3.சினிமா தியேட்டர்கள் மூடல் சினிமாவிற்கு எந்த அளவு பாதித்துள்ளது?

சினிமாவை எப்பொழுதும் அழிக்க முடியாது. முன்பு மக்களுக்கு இருந்த பொழுது போக்கு சினிமா தான். சார்ட்லைட் சேனல் வரதகாலம் அது மக்கள் தியேட்டர் தேடி வந்து பார்த்தனர். இப்பொழுது எல்லார் வீட்டிலும் டிவிக்கு பல சேனல்கள் ஹோம் தியேட்டர்கள் வந்துவிட்டது. சென்னை போன்ற நகரங்களில் இன்னும் தியேட்டர்களில் வரும் மக்கள் கூட்டம் குறையவில்லை. சி சென்டர் எனும் டூரிங் டாக்கிஸ்கள் காணமல் போனது வருத்தப்படவேண்டியிருக்கு. இருந்தாலும் விஞ்ஞானத்தில் வளர்ச்சி தடுக்க முடியாது. இதனால் சினிமாவிற்கு பாதிப்பு இல்லை சினிமா இன்றும் வளர்ச்சியை நோக்கிதான் வளர்ந்து கொண்டிருக்கிறது.

4.உங்களிடம் இருக்கும் (+)இ (-)?

எனது பிளஸ் பாயிண்ட், விடா முயற்சி சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை.
எனது மைனஸ் தாழ்வு மனப்பான்மை (முன்பு இருந்தது இப்பொழுது இல்லை).

5.எந்த இயக்குனர் படத்தில் நடிக்க விருப்பம்?

சங்கர்,பாலா,சேரன்,அமீர்.

6.திரிஷாவை நீங்கள் பேட்டி கண்டால் என்ன கேள்வி கேட்பீர்கள் ?

ஏன் உங்கள் அப்பாவை பிரித்து வைத்திருக்கிறீர்கள்?

7. புது இயக்குநர்களில் மிக சிறந்தவர்களில் 3 பேர்?

சசிகுமார், (பசங்க) பாண்டியராஜ், தென்மேற்கு பருவகாற்று இயக்குநர் சீனு ராமசாமி.

8.சினிமா துறையில் நடிப்பு தவிர வேறு எதில் ஈடுபட ஆசை?

சினிமா துறையில் நல்ல தயாரிப்பாளராக இருக்க வேண்டும். தரமான படங்களை தயாரித்து அளிக்கவேண்டும். தமிழ் சினிமா நசிந்து கொண்டு இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு இருந்தால் சினிமா வளருமா, சினிமாவில் நாம் தான் சினிமாவை வளர்க்க வேண்டும். பாதுகாக்கவேண்டும். அந்த வகையில் கமலஹாசன், பிரகாஷ்ராஜ் போன்றவர்களுக்கு மிக சிறப்பானவர்கள்.

9.தமிழ்நாட்டில் உங்களுக்கு பிறந்த ஊர் எது ?

சொந்த ஊரான மூலனூர், மற்றும் கோவை, ஈரோடு.

10.டைரக்ஷனில் ஈடுபட விருப்பமா ?

டைரக்ஷன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது அதற்கு கொஞ்சகாலம் ஆகும். முதலில் ஒரு நடிகனாக நிருபித்து விட்டுதான் அடுத்து டைரக்ஷன்.

11.உங்களின் Health Advice?

ஒவ்வொருவருக்கு தனது உடல் தான் முக்கியமானது. ஒருநாளில் எவ்வளவு நேரமானாலும் வேலையில். இருக்கலாம். ஆனால் ஒரு ஒரு மணிநேரமாவது தனது உடம்பை பாதுகாக்கும் முறைகளை செய்யவேண்டும் நம்முடைய உடல்நிலை நன்றாக இருந்தால் தான் நாம் மேற்கொண்ட துறைகளில் சாதிக்க முடியும் உடற்பயிற்சி மிக அவசியமானது.

12.இன்றைய தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

நானும் ஒரு தயாரிப்பாளர் தான ஒரு சிறு பட்ஜெட்டில் தான் படம்; தயாரிக்கிறேன். நான் படம் தயாரிப்பில் சூட்டிங்கிற்கு தேவையான அளவுதான் பெப்சியில் இருந்து தொழிலாளர்களை அமர்தத முடியும். ஆனால் பெப்சியில் பெரிய பட்ஜெட்டு படங்களை போல் தொழிலாளர்களை பணியமர்த்த சொல்கிறார்கள்.

உதாரணத்திற்கு ஒரு நாள் சூட்டிங்கிற்கு 5 பேர் லைட் மேன்கள் தான் தேவை என்றால் அவர்கள் 15 பேர்க்கு மேல் லைட்மேன்கள் வைக்க சொல்கிறார்கள். எனக்கு படத்திற்கு ஓரு மேனஜர் போதும். ஆனால் 3 பேர் வைக்க சொல்கிறார்கள் நான் சிறு பட்ஜெட்டில் படம் பண்ணுகிறேன்.

அதிக தொழிலாளர்களை வைத்து சம்பளம் பேட்டா எல்லாம் இருக்கும் பணத்தை அவர்களுக்கு கொடுத்து விட்டால் மற்ற செலவுகளை எப்படி நான் செய்ய முடியும். பெரிய படங்களை நினைத்து கொண்டு சிறு பட்ஜெட் படங்களுக்கு ஓப்பிட கூடாது.

ஒரு தயாரிப்பாளர் படம் தயாரிக்க தன் வீடு, சொத்து விற்றோ,அடமானம் வைத்தோ, பைனான்சியரிடம் கடன் வாங்கி தான் படம் தயாரிக்கிறார். ஒருநாள் சூட்டிங்கில் சம்பள வழங்க காலதாமதம் ஏற்பட்டது. அதற்குள் ஒரு தொழிலளான் சம்பளம் தர முடியாதவர்கள் எல்லாம் எதற்கு படம் தயாரிக்கிறார்கள் என என் காதில் விழும் படி சொல்வதை கேட்டேன்.

பட தயாரிப்பு எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத்தான் தெரியும். ஒரு தொழிலாளர் தனக்கு சம்பளம் அதிகப்படுத்தி கேட்பது தவறில்லை இத்தனை நபர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள சொல்ல கட்டாய படுத்துவது சரியில்லை.

13.உங்களிடம் உங்களுக்கு பிடித்தது என்னென்ன?

அனைவரையும் மதித்தல், சின்சியாரட்டி சமுகசேவைகளில் அதிகமான ஈடுபாடு மனிதனே மனிதனை தாழ்வு படுத்தி கொள்வதை தனக்கு அடிமை போல எண்ணுவதை மாற்ற வேண்டும்.

இறுதியாக கிளம்பும் முன் விக்னேஷ் சொன்னதை போல் தமிழ் சினிமாவை காப்பாற்றும் கமல், பிரகாஷ்ராஜ் போல இனி விக்னேஷம் இருப்பார் என நம்பிக்கையுடன் விடைபெற்றேன்.

திருமண ஏற்பாடுகள் பற்றி நடிகை ஜெனிலியா பேட்டி

வாய்ப்புக்கொடுங்க - அழுது கொண்டே கேட்கும் மேக்னாராஜ்

குத்தாட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்கும் பிபாஷா பாசு...!


Bookmark and Share