Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
ஈ.வி.கே.எஸ். வீட்டை முற்றுகையிட முயற்சி:28 பேர் கைது
-->திருப்புமுனை ஏற்படுத்திய குட்டிக் கட்சிகள்
கடந்த 2004ம் ஆண்டு லோக்சபாத் தேர்தலில், பிரதான இரண்டு கூட்டணிக் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் மிகக் குறைந்த ஓட்டுக்களையே பெற்றிருந்தாலும், சில தொகுதிகளில் முடிவு மாறுவதற்கே காரணமாக இருந்தன. குறிப்பாக, திருமாவளவன் போட்டியிட்ட தொகுதியில் மட்டும் இரண்டரை லட்சம் ஓட்டுக்களைப் பெற்றிருந்தார். அதேபோல, தென்மாவட்டங்களில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் கட்சி குறிப்பிட்ட அளவு ஓட்டுக்களைப் பெற்றது. இதுதவிர, 391 சுயேச்சைகள் போட்டியிட்டு, மொத்தம் 3.3 சதவீத ஓட்டுக்களைப் பெற்றனர். இந்தத் தேர்தலில், 60.81 சதவீத பெண் வாக்காளர்கள் ஓட்டளித்தனர். நான்கு பெண்கள், எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
-->தலைகீழ் மாற்றத்தில் தற்போதைய தேர்தல்


கடந்த 2004ம் ஆண்டு லோக்சபாத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, வரும் லோக்சபாத் தேர்தலில் பல மாற்றங்கள் உள்ளன. கடந்த தேர்தலில், ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுக்கள் சிதறாமல் கிடைக்க, அனைத்து முக்கிய கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்தன. ஆனால், இந்த முறை அப்படியொரு கூட்டணி அமையவில்லை. மேலும், மத்திய அரசுக்கு அல்லது மாநில அரசுக்கு எதிரான அணி என்ற நிலையில் இப்போதைய கூட்டணிகள் இல்லை. அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இடதுசாரிகள் இடம்பெற்றுள்ள போதிலும், தி.மு.க., அணியில் காங்கிரஸ் இருப்பதே இந்த அணி மாற்றத்துக்கு காரணம் என்ற நிலை உள்ளது. இதனால், இடதுசாரி ஓட்டுக்கள் முழு அளவில் அ.தி.மு.க., அணிக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல, தி.மு.க.,வுக்கு எதிரான நிலை என்ற அளவில் அ.தி.மு.க.,வும், ம.தி.மு. க.,வும் கூட்டணி அமைத்துள்ளன. இதில், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அ.தி.மு.க., தவிர, அதன் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் மாற்றுக் கருத்து கொண்டுள்ளன. வெற்றி பெற்றால், தேசிய அளவில் யார் ஆட்சி அமைப்பர், யார் பிரதமர், என்ன கொள்கை, என்னென்ன திட்டங்கள் என்பன போன்ற கேள்விகளுக்கு, இக்கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளன.
மேலும், பா.ம.க., தனது நிலையை இன்னும் முடிவு செய்யாமல் உள்ளது. கடந்த தேர்தலில் தி.மு.க., அணியில் பலனடைந்த கட்சி பா.ம.க., தான். ஆறு பிளஸ் ஒன்று என்று எம்.பி., பதவிகளைப் பெற்றதுடன், தனக்குத் தேவையான தொகுதிகளையும் பிடிவாதமாக கேட்டுப் பெற்றுவிட்டது. இந்த முறை அ.தி.மு.க., அணிக்கு பா.ம.க., சென்றாலும், அது எதிர்பார்க்கும் எண்ணிக்கையிலும், தேவைப்படும் தொகுதிகளும் கிடைக்குமா என்பது சந்தேகமே. தி.மு.க., அணிக்கு பா.ம.க.,வை வரவழைக்க, முன் கொடுத்ததை விட கூடுதல் தொகுதிகளைக் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், இன்று வரை ஆளுங்கட்சியை விமர்சித்துவரும் பா.ம.க.,வால், தேர்தலில் தி.மு.க.,வுக்குப் பலன் கிடைக்குமா என்பது சந்தேகமே.
அக்கட்சியினர் மற்ற தொகுதிகளில் எதிர்த்து வேலை செய்யவும் வாய்ப்புள்ளது. இதுதவிர, 2004ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் கட்சியே கிடையாது. தற்போது தே.மு.தி.க.,வும், ஆளுங் கட்சிக்கு எதிரான ஓட்டுக்களைப் பிரிக்கும் சக்தியாக வளர்ந்து உள்ளது. இதுதவிர, தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்று பா.ஜ., தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லாததால், அக்கட்சி யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்ற கேள்வியும் உள்ளது. இதனால், காங்கிரசுக்கு எதிரான ஓட்டுக்கள் அ.தி.மு.க., கூட்டணிக்குக் கிடைக்குமா என்ற சந்தேகமும் உள்ளது.
தி.மு.க., அணியில் தற்போதைய நிலையில் காங்கிரஸ் மட்டுமே உள்ளதால், தொகுதிப் பங்கீட்டில் இரு தரப்பும் திருப்தியடையும் வகையில் பிரித்துக்கொள்ள வாய்ப்புள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற காங்கிரஸ் ஒப்புக் கொண்டாலும், அக் கட்சிக்கு ஒரு தொகுதி மட்டும் தான் ஒதுக்கப்படும். எனவே, கடந்த தேர்தல் போல் அல்லாமல், வரும் லோக்சபாத் தேர்தலில் ஓட்டுக்கள் சிதற வாய்ப்புள்ளது. இது யாருக்குப் பலன் அளிக்கும் என்பது, தேர்தல் சூடுபிடிக்கும் போது தெரியவரும்.