Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

ஹாட் நியூஸ்

மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் - மாபெரும் ஆர்பாட்டம்

















மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம், நேற்று (டிசம்பர் ஆறாம் தேதி) மாலை திருநெல்வேலி ஜங்ஷன் சந்திப்பில் மாபெரும் ஆர்பாட்டம் நடத்தினர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி மீண்டும் பாபர் மசூதியை அங்கேயே கட்டித்தரக்கோரி மாபெரும் ஆர்பாட்டத்தினை மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடத்தினர்.

மாவட்டத் தலைவர் கோல்டன் ஷேக், தலைமையில் பாளை ரஃபிக் (நிறுவனத்தலைவர், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம்) கண்டண உரையாற்றினார்.

மேலும், முஸ்தபா, கொள்கை பரப்பு செயலாளர், அலி இமாம் கொள்கை பரப்பு செயலாளர், அகியோரும், கண்டித்து உரையாற்றினர்.

இவ்வார்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சி திருநெல்வேலி மாவட்ட செயலாளர் மோகன், வசந்தகுமார் கரிசல் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுமார் 2000 - க்கும் மேற்பட்ட இளைஞர் பட்டாளம் இதில் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.

Bookmark and Share

Read More     Comments (01)