Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக கோகலே பதவி ஏற்றார்



--> ‌சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.கங்குலி பதவி உயர்வு பெற்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக சென்றார். இதையடுத்து மூத்த நீதிபதி முகோபாத்யாயா தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்து வந்தார்.

--> ‌இந்நிலையில் அலகாபாத் கோர்ட்டு தலைமை நீதிபதி ஹேமந்த் லஷ்மன் கோகலே சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அவர் கடந்த சனிக்கிழமை இரவு சென்னை வந்தார். அவர் நேற்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வக்கீல்கள் சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

--> இந்நிலையில் இன்று காலை கவர்னர் மாளிகையில் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு நீதிபதி எச்.எல். கோகலேவுக்கு கவர்னர் சுர் ஜித்சிங் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

--> ‌முன்னதாக தலைமை செயலாளர் ஸ்ரீபதி, ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அனுப்பிய பணிநியமன ஆணையை வாசித்தார். இதையடுத்து தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற கோகலேவுக்கு கவர்னர் பர்னாலா, நிதி அமைச்சர் அன்பழகன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள்.

--> ‌அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்கள்.

--> ‌விழாவில் உள்துறை செயலாளர் மாலதி, டி.ஜி.பி. கே.பி.ஜெயின், போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், ஐகோர்ட்டு நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, பிரபாஸ்ரீதேவன், ஆறுமுகபெருமாள் ஆதித்தன் உள்ளிட்ட நீதிபதி களும், வக்கீல் சங்க தலை வர்கள் பால்கனகராஜ், சந்திர மோகன், தனபால் ராஜ், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, அப்துல் ரகுமான், சாந்தகுமாரி, நளினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

--> ‌இந்நிகழ்ச்சியில் புதிய தலைமை நீதிபதி கோகலேவின் மனைவி மீனாகோகலே, மகன் அனுராக் கோகலே, மருமகள் ஆராதனா ஆகியோரும் கலந்து கொண்டனர். இதையடுத்து நீதிபதி கோகலேவுக்கு ஐகோர்ட்டில் வரவேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி வரவேற்று பேசினார்.

--> ‌இதைத் தொடர்ந்து வக்கீல்சங்க தலைவர்கள் அவரை வரவேற்று பேசினார்கள். இதில் ஐகோர்ட்டு நீதிபதி கள், பதிவாளர்கள், வக்கீல்கள், ஐகோர்ட்டு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More     Comments (33)