Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
Design By SICP
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

--> முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையால் ஓய்வில் இருந்த முதல்வர் கருணாநிதி, நேற்று தலைமைச் செயலகம் வந்து பணிகளைத் தொடர்ந்தார். கோட்டையில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, கூட்டணி அமைப்பது குறித்த கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த முதல்வர் கருணாநிதி, கடந்த ஜனவரி 25ம் தேதி சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக, அடுத்த நாள் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்கவில்லை. சிகிச்சையில் இருந்த போது, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாள் ஊர்வலத்தில், ஆம்புலன்சில் வந்து பங்கேற்றார்.அன்று நடந்த தி.மு.க., செயற்குழுக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டத்தில், "வீல் சேரில்' அமர்ந்தவாறு பங்கேற்றார். பிப்ரவரி 11ம் தேதி முதல்வருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவமனையில் 35 நாட்கள் ஓய்வுக்குப் பின், மார்ச் 1ம் தேதி முதல்வர் வீடு திரும்பினார்.
--> வீடு திரும்பும் வழியில் தி.மு.க., இளைஞரணி அலுவலகமான, "அன்பகத்தை' திறந்து வைத்தார். அதன் பின் ஓய்வில் இருந்த முதல்வர் கருணாநிதி, அவரது பேத்தியின் திருமணத்தில் பங்கேற்றார். முதல்வர் கருணாநிதி, நேற்று காலை தலைமைச் செயலகத்திற்கு வந்தார். அவரை அன்பழகன், ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் வரவேற்றனர். வேனில் இருந்து சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே இறங்கிய முதல்வர் கருணாநிதி, வரவேற்பை ஏற்றுக் கொண்டு தன் அறைக்குச் சென்றார். அறையில் அமர்ந்து கோப்புகளைப் பார்வையிட்ட முதல்வர், அரசு செயலர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். நீண்ட ஓய்வுக்குப் பின் முதல்வர் தலைமைச் செயலகம் வந்ததால், தலைமைச் செயலக வளாகம் வழக்கமான பரபரப்புக்கு நேற்று திரும்பியது


