Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

காங்., பா.ஜ.,வுக்கு ஆதரவு இல்லை : நவீன்பட்நாயக் திட்டவட்டம்



--> காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு ஆதரவு இல்லை என பிஜூஜனதாதள கட்சி தலைவர் நவீன்பட்நாயக் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பா.ஜ., வுடனான உறவை முறித்துக் கொண்டுள்ள பிஜூஜனதாதள கட்சி மூன்றாவது அணியில் இணையும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

--> இந்நிலையில், நவீன்பட்நாயக் காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் பிஜூஜனதாதளம் ஒரு போதும் ஆதரவு கொடுக்காது என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பரதன், ஒரிசா சென்று முதல்வர் நவீன்பட்நாயக்கை சந்தித்தார். இந்த சந்திப்பினால் மூன்றாவது அணியில் பிஜூ ஜனதா தளம் இணைய வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

--> ஆனால் நவீன்பட்நாயக் மூன்றாவது அணியில் இணைவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ‌தொடர்ந்து கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More     Comments (33)