Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

அண்மை செய்திகள்

இந்தியா அபாரம்: டிராவை நோக்கி இரண்டாவது டெஸ்ட்





நேப்பியர்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பாலோ ஆன்' ஆன இந்தியா, காம்பிர் சதத்தால் மீண்டுள்ளது. இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் நேப்பியரில் நடக்கிறது. முதலில் ஆடிய நியூசிலாந்து முதன் இன்னிங்சில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 619 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா 305 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து "பாலோ ஆன் ' ஆனது. இதையடுத்து தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்தியா, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்நிலையில் 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இந்தியா, நிதானமாக ஆடியது. காம்பிரும், டிராவிட்டும் அரைசதம் அடித்தனர். டிராவிட் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சச்சின், காம்பிருடன் இணைந்து மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார். காம்பிர் தனது 5வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.

சச்சின் 52வது அரைசதத்தை கடந்தார். 4ம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 2 விக்கெட்டு இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்து 62 ரன்கள் பின்தங்கி உள்ளது. கைவசம் 8 விக்கெட்டுகள் மீதம் உள்ள நிலையில் கடைசி மற்றும் ஐந்தாவது நாளில் நிதான ஆட்டத்தை இந்தியா தொடர்ந்தால் போட்டியை டிரா செய்யலாம்.

Read More     Comments (33)