Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

அண்மை செய்திகள்

முதல் நாள் ஆட்டம் : இந்தியா ரன் குவிப்பு; சச்சின், தோனி, ஹர்பஜன் சிங் அரைசதம்



இந்தியா, நியூசிலாந்து கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி "டிரா' ஆனது. மூன்றாவது டெஸ்ட் இன்று வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் துவங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. முதலில் பேட் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு சேவாக் நல்ல துவக்கத்தை தந்தார். அவர் 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் காம்பீர் 23 ரன்களிலும், சச்சின் 62 ரன்களிலும், டிராவிட் 35 ரன்களிலும் அவுட் ஆனார்கள். லட்சுமண் 4 ரன்களும், யுவராஜ் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்கள். அணி 6 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில் தோனி, ஹர்பஜன் சிங் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தோனி 52 ரன்களிலும், ஹர்பஜன் சிங் 60 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஜாகிர்கான் 33 ரன்கள் எடுத்தார்.

ஆட்டநேர இறுதியில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் மார்டின் 3 விக்கெட்டுகளையும், சவுத்தி, பிரையன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பிராங்ளின், ரைடர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வெலிங்டன் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் 41 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து மண்ணில் வரலாறு படைக்கலாம். தவிர, கடந்த நான்கு ஆண்டுகளில் அன்னிய மண்ணில் பெறும் 3 வது டெஸ்ட் தொடர் வெற்றியாக இது அமையும். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் (2006), இங்கிலாந்து (2007) மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருந்தது.

கடந்த 1967-68 ம் ஆண்டு மன்சூர் அலிகான் பட்டோடி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருந்தது.

Read More     Comments (33)