Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
Design By SICP
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
தி.மு.க., தேர்தல் அறிக்கை

"மத்திய அரசின் ஒட்டுமொத்த வரி வருவாயில் 60 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்' என்று தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கான தி.மு.க., தேர்தல் அறிக் கையை, கட்சி பொதுச் செயலர் அன்பழகன் நேற்று வெளியிட்டார். முதல்வர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி பெற்றுக் கொண்டனர்.
கூட்டாட்சி அமைப்பு வலுப்பெற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது. இட ஒதுக்கீடு வழங்குவதில் வருமான வரம்பை அறவே நீக்க வேண்டும். மத்திய அரசில் பிற்ப டுத்தப்பட்டோருக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். இட ஒதுக்கீடு கொள்கைகளில் மாநில அரசு இயற்றும் சட்டங்களை தடையின்றி நடைமுறைப்படுத்துவதற்கும், அவற்றில் நீதிமன்றங்கள் தலையிடாமல் இருப்பதற்கும், தேவைப்படும் உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து மாநிலங்களிலும், ஆட்சி மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்பட வேண்டும். அதுவரை மத்திய அரசு பணிகளுக்கு அனைத்து துறைகளிலும் நடக்கும் பணியாளர் தேர்வுகளுக்கு இந்தி, ஆங்கிலம் இவற்றோடு அந்தந்த மாநில ஆட்சி மொழிகளையும் இணைத்து தேர்வுகளை நடத்த வேண்டும். இலங்கையில் போர் நிறுத்தத்திற்கும், அதைத் தொடர்ந்து நிரந்தர தீர்வுக்கும் தி.மு.க., தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும். தமிழக அரசின் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு முழு நிதியுதவியும் மத்திய அரசு வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டிற் கான தொகையில் மத்திய அரசு 50 சதவீதத்தை மானியமாக வழங்க வேண்டும்.
வேலையிழந்தோர் துயர் துடைப்பு நிதியத்தை அரசு அமைக்க வேண்டும். தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணத் திற்கு மத்திய அரசு உதவியளிக்க வேண்டும். மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும். மத்திய அரசின் நோய்த்தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பொதுத் துறையிலேயே நீடிக்க வேண் டும். மருத்துவக் கல்லூரி மாணவர்களை பாதிக்கும் தேர்வுத் திட்டத்தை கைவிட வேண் டும். உயர் மருத்துவ பட்டப் படிப்புகளில் 100 சதவீத இடங்களையும் மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டும்.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை, மத்திய அரசு விரைந்து முடித்து திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் அதிவேக விரைவு ரயில்களை இயக்க வேண்டும். சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை முன்னோடித் திட்டமாக தமிழகத்தில் அமைக்க வேண்டும். தேசிய மீனவர் நல ஆணையம் அமைக்க வேண்டும்.
மத்திய அரசு கடலோரப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தி, தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும். கச்சத்தீவில் தமிழர்கள் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். நிதியியல் பொறுப்பு வரவு-செலவு மேலாண்மை சட்டம் நீக்கப்பட வேண்டும். மத்திய அரசின் ஒட்டுமொத்த வரி வருவாயில் 60 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். மத்திய அரசின் எண்ணெய், இயற்கை எரிவாயு ஆணையத் தின் ஆய்வு வளர்ச்சி மையம், இந்திய அறிவியல் ஆய்வு மையத்தையும் தமிழகத்தில் துவங்க வேண்டும். அரசு ஊழியர்கள், மாத ஊதியம் பெறுவோர், ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு தற்போதுள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பை,இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்த வேண்டும்.
பெண்களுக்கு சொத்துரிமையில் சம பங்கு என இந்திய அளவில் சட்டம் கொண்டு வர வேண்டும். பார்லிமென்ட், சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண் டும். தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்தி மேம்படுத்த வேண்டும். சேலம், தஞ்சாவூர், வேலூர், ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் உள்ள சிறு மற்றும் ராணுவ விமான தளங்களை பயணிகள் விமான நிலையங்களாக மாற்றி அமைக்க வலியுறுத்தப்படும். திருப்பூர், ஈரோடு, கரூர், வேலூர் பகுதிகளில் சாயப் பட்டறை, சலவைத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை, சுத்திகரித்து கடலில் சென்று கலக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தினை மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி உற்சாகமாய் இருந்தார். தேர்தல் அறிக்கையை கையில் வைத் தும், தலைக்கு மேல் தூக்கிப் பிடித்தும் போட்டோக்களுக்கு "போஸ்' கொடுத்தார். அவரிடம் "தேர்தலில் உங்கள் கோஷம் என்ன' என்று கேட்ட போது, " வெற்றி நமதே' என்று பதில் அளித்தார்.