Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
Design By SICP
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
மூன்றாவது அணி பேரணியை புறக்கணித்தார் பவார்

ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் மூன்றாவது அணி பிரமாண்ட பேரணியில் சரத் பவார் கலந்து கொள்வதை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் ஒரிசா செல்லவிருந்த தனி விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் அங்கு செல்ல மாட்டார் எனவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் தொலைபேசி மூலம் பவார் பேரணியில் உரையாற்றுவார் எனவும் கூறப்படுகிறது.
புவனேஸ்வரில் நடைபெறும் மூன்றாவது அணி பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூ., பெதுச்செயலாளர் பிரகாஷ்கராத் ; இந்திய கம்யூனிஸ்ட் க்டசியின் பரதன் ; பிஜூ ஜனதா தள கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த பேரணிக்கு பிஜூ ஜனதா தளம் முழு ற்போடு செய்தது. முறைப்படி மூன்றாவது அணியுடனான கூட்டணியை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி என்பது குறிப்பிடத்தக்கது . முன்னதாக பேரணியில் கலந்து கொள்ளப்போவதாக பவார் அறிவித்திருந்ததால் காங்கிரஸ் கலக்கத்தில் இருப்பதாக டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
பவாரின் முடிவுக்கு காங்., தலைவர் சோனியா கடும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தார். ஒரிசாவில் பிரசாரத்தில் பேசிய சோனியா : யாருடன் யார் கூட்டணி வைத்துக் கொண்டு 2வது அணி, 3வது அணி என எந்த அணியையும் ஆரம்பிக்கலாம். ஆனால் தேர்தலுக்கு பிறகு எல்லாம் உடையும் என்றும் , சந்தர்ப்பவாத அரசியல் சாதிக்காது என்றும் கூறியிருந்தார்.
ஆனால் மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய தலைவரான சரத்பவார் பிரதமர் பதவிக்கு குறி வைத்திருப்பதாகவும், அதற்காக எல்லா வகையிலும் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் காங்., நிர்பந்தத்தால் தான் சரத்பவார் திடீரென மூன்றாவது அணி பேரணிக்கு செல்வதை தவிர்த்துள்ளதாகவும், விமான கோளாறு வெறும் சாக்குதான் எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடைசி நேர தகவல் : இந்நிலையில் காங்., நிர்பந்தத்தால் தான் சரத்பவார் திடீரென பேரணிக்கு செல்வதை தவிர்த்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.