Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

அண்மை செய்திகள்

11 தொகுதிகளில் பாஜக போட்டி;
சரத்குமாருடன் கூட்டணி இல்லை: இல. கணேசன்



தமிழகத்தில் பாஜக 11 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் இல. கணேசன் தெரிவித்தார். இது குறித்து திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தமிழகத்தில் நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், திருச்சி, வட சென்னை, தென் சென்னை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 11 தொகுதிகளில் பாஜக தனித்துப் போட்டியிடும். சரத்குமாரின் "அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி', "கொங்கு வேளாளர் பேரவை' ஆகிய கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சு நடத்தினோம். பாஜகவுக்கு நேர் எதிரான கொள்கை உடையவர்களுடன் சரத்குமார் கூட்டணி குறித்து பேசி வருவதாகத் தெரிகிறது. எனவே அவருடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. பாஜக போட்டியிடும் 11 தொகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் கார்த்திக்கின் "நாடாளும் மக்கள் கட்சி' போன்ற கட்சிகளை ஆதரிப்பது குறித்து விரைவில் முடிவு செய்து அறிவிப்போம்.

கடந்த ஆண்டு சித்திரை முதல் நாளன்று கோயில்களில் பஞ்சாங்கம் படிக்கக் கூடாது என்று தமிழக அரசு வாய்மொழி உத்தரவிட்டிருந்தது. இந்த ஆண்டு பஞ்சாங்கம் படிக்கலாம் ஆனால் "விரோதி' என்ற இந்த ஆண்டின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று வாய்மொழி உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனை பாஜக கண்டிக்கிறது. சூரியனை மையமாகக் கொண்டு கணிக்கப்பட்டுள்ள சித்திரை 1 தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு புத்தாண்டு தினமாகும்.

அதனால்தான் இலங்கை அரசுகூட தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இரண்டு நாள்கள் போர்நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. கோயில்களில் பஞ்சாங்கம் படிக்க அரசு தடை விதித்தால் பாஜக தொண்டர்கள் கோயிலுக்குள் நுழைந்து பஞ்சாங்கம் படிப்பார்கள். பாரம்பரியம் மற்றும் மத வழிபாடுகளில் அரசு தலையிடுவதை அனுமதிக்க முடியாது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் வற்புறுத்தல் காரணமாகவே இலங்கை அரசு தமிழ் புத்தாண்டை காரணம் காட்டி இரண்டு நாள்கள் போர்நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

ஆனால் தாங்கள் சொல்லிதான் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது போல உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அறிக்கை விட்டுள்ளார். அப்படி கூட அவர் அறிக்கை விடாவிட்டால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு டெபாசிட் கிடைக்காது. இலங்கை ராணுவத்தால் கற்பழிப்பு போன்ற கொடுமைகளுக்கு தமிழர்கள் உள்ளாகி வரும் சூழலில் ராணுவத்தை நம்பி தமிழர்கள் பாதுகாப்பான பகுதிக்கு வரமாட்டார்கள்.

எனவே தமிழர்களின் பாதுகாப்புக்கு ஐ.நா. ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் இல. கணேசன்.

Read More     Comments (33)