Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
Design By SICP
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
தமிழ்நாட்டில் நடிகை லட்சுமிராய் தேர்தல் பிரசாரம்

தமிழ்நாட்டில் நடிகை லட்சுமிராய் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். வெள்ளித்திரை, நெஞ்சத்தைகிள்ளாதே, கற்க கசடற, தாம்தூம் போன்ற தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை லட்சுமிராய்.
பெங்களூரில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை ஆதரித்து லட்சுமிராய் பிரசாரம் செய்து வருகிறார். உத்தரபிரதேச மாநில முதல்வர் மாயாவதியின் திட்டங்கள் பிடித்து இருப்பதால் அக்கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறேன் என்று அவர் கூறினார்.
பெங்களூரில் பிரசாரம் செய்த நடிகை லட்சுமிராய் தமிழகத்திலும், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை கூறுகையில் நடிகை லட்சுமிராய் பிரசாரத்துக்கு வரத்தயார் என்றால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய வருவாரா? என்று நடிகை லட்சுமிராய் தரப்பில் கேட்ட போது, நடிகை லட்சுமிராயின் சொந்த ஊர் பெங்களூர். அதனால் அங்கு அவர் பிரசாரம் செய்கிறார். அதை வைத்து தமிழகத்திலும் பிரசாரம் செய்வார் என்று சொல்ல முடியாது.
பகுஜன் சமாஜ் கட்சி முக்கிய நிர்வாகிகள் அவரை வற்புறுத்தினால் பிரசாரம் செய்ய ஒத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.