Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

அண்மை செய்திகள்

நல்ல அரசியல்வாதி வாய்ப்புகளை நழுவ விடமாட்டார் : ஜெயலலிதா



அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நல்ல அரசியல்வாதி எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விடமாட்டார் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி மேல் தனக்கு ஆசை இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார் ஜெயலலிதா . பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் த‌லைவர் சரத்பவார், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் என பிரதமர் ஆசையை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

பா.ஜ., வுடன் கூட்டணி குறித்து அ.தி.மு.க., தான் முடிவு செய்ய வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ள நிலையில் அ.தி.மு.க., வின் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டதற்கு ஜெயலலிதா கூறியதாவது :

அ.தி.மு.க., தமிழகத்தில் இடதுசாரிகள் , பா.ம.க., மற்றும் ம.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறது . இந்த கூட்டணியின் லட்சியமே மத்தியில் பா.ஜ., காங்., இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் என பா.ஜ., வுடன் கூட்டணி இல்லை என்பதை சூட்சகமாக தெரிவித்துள்ளார் . தேர்தலுக்கு பின் வேறு எந்த கட்சிகளுடனாவது கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு , ஒரு நல்ல அரசியல்வாதி எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விட மாட்டார்.

அ‌தனால் அம்மாதிரியான கூட்டணி அமைக்க வேண்டிய பட்சத்தில் தோழமை கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு அமைக்கப்படலாம். ஆனால் இப்போது அது குறித்து பேசுவது பொறுத்தமாக இருக்காது என்றார்.

வைகோ இலங்கை பிரச்னை குறித்து விடுத்து வரும் அறிக்கைகள் குறித்த கேள்விக்கு வைகோ ஒரு போதும் தேசத்துக்கு விரோதமாக பேச மாட்டார் என உறுதியளித்தார்.வைகோ எப்போதும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி தான் வருகிறார். முன்னதாக அவர் காங்., பா.ஜ., கட்சிகளில் இருந்த போது அவரது பேச்சு குறித்து யாரும் சர்ச்சை ஏற்படுத்தவில்லை. இப்போது மட்டும் அப்படி எழுப்ப தேவை என்ன . இவ்வாறு ஜெ.,. கூறியுள்ளார்.

Read More     Comments (33)