Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

அண்மை செய்திகள்

அம்பேத்கார் சிலைக்கு ஜெயலலிதா மாலை



அம்பேத்காரின் 119-வது பிறந்த நாளையொட்டி கோடம்பாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி. மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்றுகாலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில், முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், வளர்மதி, தளவாய்சுந்தரம், அமைப்பு செயலாளர்கள் சுலோசனா சம்பத், விசாலாட்சி நெடுஞ்செழியன், பாலகங்கா எம்.பி. மாவட்ட செயலாளர்கள் சேகர்பாபு எம்.எல்.ஏ., கலைராஜன் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கு.சீனிவாசன், செந்தமிழன், பதர்சயீத், சேலம் ரவிச்சந்திரன், தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், மத்திய சென்னை வேட்பாளர் எஸ்.எஸ்.சந்திரன், திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் வேணுகோபால், தொழிற் சங்க செயலாளர் அர்ச்சுனன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜின்னா. அவைத்தலைவர் கோதண்டராமர், சுகுமார் பாபு, விருகை சுந்தரராஜ், முகப்பேர் இளஞ்செழியன், சைதை சி.எம்.சாமி, தென்றல்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் இல.கணேசன், அகில இந்திய செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயலாளர் இசக்கிமுத்து மாலை அணிவித்தார். அவருடன் பிரபு, செல்வகுமார், திருநாவுக்கரசு, சண்முகைய்யா பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் மாநில துணை தலைவர் லலிதா சுபாஷ், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், ராஜசிம்மன், மாவட்ட தலைவர் டால்பின், ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில முஸ்லிம் லீக் சார்பில் மாநில தலைவர் ஷேக்தாவூது தலைமையில் மாலை அணிவித்தனர். நிர்வாகிகள் அஸ்மத்துல்லா, ஜமாலுதீன், பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புரட்சிபாரதம் சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் அய்யப்பன் தலைமையில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் அருகே உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

Read More     Comments (33)